
பலருக்கு விருப்பமான பழங்களின் பட்டியலில் நிச்சயம் பப்பாளி இடம்பெறும். இதன் சுவை மற்றும் ஊட்டச்சத்துகளுக்காக பெரிதும் விரும்பப்படும் ஒரு பழமாக பப்பாளி விளங்குகிறது. அந்த வகையில் பப்பாளியை எளிதாக வீட்டில் வளர்ப்பது எப்படி என்று இக்குறிப்பில் காணலாம்.
மேலும் படிக்க: வீட்டிலேயே கீரை வளர்க்க ஆசையா? இதோ உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்
ஒவ்வொரு சீசனுக்கும் ஏற்ற வகையில் கிடைக்கும் பழங்களை வாங்கி சாப்பிடுவதில் மக்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். அதிலும், நமக்கு தேவையான பழங்களை நம்முடைய தோட்டம் அல்லது பால்கனியில் வளர்ப்பதன் மூலம் கூடுதல் நன்மைகளை பெற முடியும். இவை சுவை அதிகமாக இருப்பதுடன் சுகாதாரமாகவும் இருக்கும். அதன்படி, நமது வீட்டு பால்கனியிலேயே பப்பாளியை எப்படி எளிதாக வளர்க்கலாம் என்று காண்போம்.
பப்பாளியில் 'ரெட் லேடி', 'ஹவாய் சோலோ' அல்லது 'பூசா ட்வார்ஃப்' போன்ற வகைகளை தேர்ந்தெடுக்கலாம். இவை சிறியதாக இருந்தாலும் அதிக மகசூலை தரும். இந்த வகை பப்பாளிகள் பால்கனியில் வளர்ப்பதற்கு ஏற்றவை. இந்த ரகங்கள் 6-12 மாதங்களில் பழங்களை தரும்.
சுமார் 16-24 அங்குல ஆழம் கொண்ட, நன்கு வடிகால் வசதியுள்ள ஒரு உறுதியான தொட்டியை பப்பாளி வளர்ப்பில் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் அல்லது களிமண் தொட்டியை இதற்காக பயன்படுத்தலாம். நீர் தேங்குவதை தவிர்க்க தொட்டியின் அடியில் சிறிய கற்களை வைக்கவும்.
-1757423138522.jpg)
தொட்டியை வளமான மண் கலவையால் நிரப்பவும். மண்புழு உரம் போன்ற இயற்கையான கலவையை இதற்கு பயன்படுத்தலாம். சிறிது அமிலத்தன்மை (pH 6-7) மற்றும் நன்கு காற்றோட்டமான மண் ஆகியவை, வேர் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன் அழுகுதலையும் தடுக்கும். இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
மேலும் படிக்க: மல்லிகை செடி பராமரிப்பு: அதிக பூக்கள் பூக்க வைக்க இந்த எலுமிச்சை உரம் போதும்!
தொட்டியை ஒரு நாளைக்கு 6-8 மணி நேரம் நேரடி சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் வைக்கவும். தெற்கு திசையை நோக்கிய இடம் சிறந்ததாக இருக்கும். இதற்காக மிதமான வெப்பநிலையை பராமரிக்கவும். ஏறத்தாழ, 10-15 °C-க்குக் கீழே வெப்பநிலை குறையும்போது, செடியை வீட்டிற்குள் மாற்றுவது நல்லது.
மண் தொடர்ந்து ஈரப்பதமாக இருப்பதை உறுதிசெய்யுங்கள். ஆனால், நீர் தேங்க அனுமதிக்காதீர்கள். மண்ணின் மேல் 1-2 அங்குலங்கள் உலர்ந்திருப்பதாக உணரும் போது தண்ணீர் ஊற்றவும். அதிகப்படியான தண்ணீர் ஊற்றுவது வேர் அழுகலுக்கு வழிவகுக்கும். குறிப்பாக, தொட்டியில் வளர்க்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

செடி வளரும் போது தாங்கு கம்பு ஒன்றை வைக்கவும். அதிகப்படியான தண்டுகளை கத்தரித்து விடுவது கிளை வளர்ச்சியை ஊக்குவிக்கும். சீரான அளவில் இருக்கும் என்.பி.கே உரத்தை 3-4 வாரங்களுக்கு ஒரு முறை இடவும். பூக்கும் மற்றும் காய்க்கும் நேரத்தில் பொட்டாசியம் உரத்தின் அளவை அதிகரிக்கலாம்.
இந்த வழிமுறைகள் அனைத்தையும் சரியான முறையில் பின்பற்றினால் உங்கள் வீட்டு பால்கனியில் கூட எளிதாக பப்பாளி வளர்க்க முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]