மூல நோய் பிரச்சனை மிகவும் வேதனையானது. இதனால் வேறு பல பிரச்சனைகளும் ஏற்படத் தொடங்குகின்றன. பெரும்பாலும் மக்கள் இந்த நோயை கேலி செய்கிறார்கள். அதனால்தான் பலர் இதைப் பற்றிப் வெளியே பேசத் தயங்குகிறார்கள். ஆனால் இந்த நோயைப் பற்றிய நமது அணுகுமுறையை நாம் மாற்ற வேண்டும். அப்போதுதான் மக்கள் இதைப் பற்றி வெளிப்படையாகப் பேச முடியும். மூல நோய் பிரச்சனை உள்ளவர்கள், உங்களை நீங்களே கவனித்துக் கொள்வது முக்கியம். குறிப்பாக உணவுமுறையைப் பற்றி அலட்சியமாக இருக்காதீர்கள். பெரும்பாலான மக்கள் இந்த நேரத்தில் என்ன சாப்பிட வேண்டும் தெரியமால் இருக்கிறார்கள். எந்த உணவுகளை சாப்பிடாலம் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: ஹீரோயின் போல வளைவு நெளிவுடன் உடல் அமைப்பு இருக்க உணவில் சேர்க்க வேண்டிய பொருட்கள்
மூல நோய் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. இவற்றில் மரபியல், கர்ப்பம் மற்றும் எடை அதிகரிப்பு ஆகியவை அடங்கும். இது தவிர, அதிக காரமான உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு மூல நோயால் பாதிக்கப்படலாம். மேலும், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்களுக்கும் இந்த பிரச்சனை ஏற்படலாம்.
மூல நோய் பிரச்சனையைக் குறைக்க நினைத்தால் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். முழு தானியங்களில் அதிக நார்ச்சத்து உள்ளதால் அவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பழுப்பு அரிசி, கம்பு, ஓட்ஸ் மற்றும் பீன்ஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். நார்ச்சத்து செரிமானத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். இது மூல நோயின் போது வலியைக் குறைக்கும். தானியங்களில் நார்ச்சத்துடன் பிற ஊட்டச்சத்துக்களும் இருப்பதால் உடலுக்கு நன்மை பயக்கும்.
மருத்துவர்கள் எப்போதும் பச்சை காய்கறிகளை சாப்பிட பரிந்துரைக்கிறார்கள். பச்சை காய்கறிகளில் கலோரிகள் குறைவாக உள்ளதால் கொழுப்புச் சத்தும் குறைவாக இருக்கிறது. காய்கறிகளில் நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மூல பிரச்சனையில் இருந்து பச்சை காய்கறிகளை சாப்பிட வேண்டும்.
பழங்களில் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். உங்களுக்கு மூல நோய் இருந்தால் வாழைப்பழத்தை அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம். இதில் பெக்டின் மற்றும் எதிர்ப்பு ஸ்டார்ச் உள்ளது. பெக்டின் செரிமான அமைப்பில் ஜெல்லை உருவாக்குகிறது மற்றும் குடல் பாக்டீரியாவை உண்கிறது. இந்த கலவை மூல நோய்க்கு நல்லது.
மூல பிரச்சனை இருக்கும் நபர்கள் சில உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் இந்தப் பிரச்சனை மேலும் அதிகரிக்கக்கூடும். இந்த நேரத்தில், பால் பொருட்களையும் சாப்பிடக்கூடாது. பாஸ்தா மற்றும் நூடுல்ஸ் போன்ற சுத்திகரிக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை மூல நோயை அதிகரிக்கும். பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் நார்ச்சத்து குறைவாகவும், சோடியம் அதிகமாகவும் உள்ளதால் தவறுதலாக கூட சாப்பிடக்கூடாது.
மேலும் படிக்க: மாதத்திற்கு 4 முறை கருப்பு கவுனி அரிசியை உணவில் சேர்த்து வந்தால் 70 வயதிற்கு மேலும் உடல் வலிமையாக இருக்கும்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]