வெற்றிலையில் உள்ள 6 அற்புத நன்மைகளின் பட்டியல் உங்களுக்காக.

வீட்டில் நடைபெறக்கூடிய அனைத்து சுப நிகழ்ச்சிகமுளைப் பயன்படுத்துவது முதல் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படக்கூடிய உடல் நல பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என்றால் வெற்றிலை நிச்சயம் இடம் பெற்றிருக்கும். வெற்றிலையில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள், வைட்டமின் சி, கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. எடை குறைப்பு முதல் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது போன்ற 6 ஆரோக்கிய நன்மைகளை வெற்றிலை நமக்கு வழங்குகிறது. 
image

வெற்றிலை என்றால் முன்னோர்கள் வீட்டு திண்ணையில் அமர்ந்துக் கொண்டு சாப்பிடக்கூடிய ஒன்றாக தான் பலரும் அறிந்திருப்போம். இதோடு சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் வீடுகளில் வெற்றிலையை வைத்திருப்பதையும் பார்த்திருப்போம். இதெல்லாம் வெறும் நடைமுறைகளாக மட்டுமல்ல, வெற்றிலையை அதிகளவில் உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெற முடியும். அவற்றில் சில உங்களுக்காக.

வெற்றிலை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:

சர்க்கரை அளவைக் குறைக்கும் வெற்றிலை:

இன்றைய உணவு பழக்கம் மற்றும் கலாச்சார முறைகளால் இளம் வயதிலேயே குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. ஆரம்பத்திலேயே இதைக் கட்டுப்படுத்தாவிடில் பெரும் சிக்கல்களை வாழ்நாள் முழுவதும் சந்திக்க நேரிடும். இதை உணவு முறையில் தவிர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கட்டாயம் வெற்றிலையை சாப்பிடலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது.

மூட்டு வலியைப் போக்கும் வெற்றிலை:

வெற்றிலையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வைட்டமின் சி போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் வலி நிவாரணியாக செயல்படுகிறது. குறிப்பாக மூட்டு வலியால் அவதிப்படும் போது வெற்றிலையை சாறாக எடுத்து பருக வேண்டும். இது மூட்டுகளில் ஏற்படும் அசௌகரியம் மற்றும வலியைக் குறைக்க உதவுகிறது. இதோடு மட்டுமின்றி கால்களில் ஏற்படக்கூடிய காயங்கள், சீராய்ப்புகள், தடிப்புகள் போன்றவற்றிற்கு நிவாரணியாகவும் பயன்படுகிறது.

மேலும் படிக்க:தினமும் காலை வெறும் வயிற்றில் ஆம்லா ஷாட் குடிப்பதால் கிடைக்கும் 7 சக்திவாய்ந்த நன்மைகள்

சுவாச பிரச்சனையைப் போக்கும் வெற்றிலை:

இருமல் மற்றும் சளி தொடர்பான பிரச்சனைகள் இருப்பவர்கள் கட்டாயம் வெற்றிலையைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக நெஞ்சு சளி இருக்கும் சமயத்தில் வெற்றிலை இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அதனுடன் ஏலக்காய், கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து கசாயம் போன்று தயார் செய்து பருகலாம். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சளி பிரச்சனைக்குத் தீர்வாக அமைகிறது. இதோடு மட்டுமின்றி வெற்றிலையை மிதமான சூட்டில் வைத்து நெஞ்சில் ஒத்தனம் கொடுப்பதும் சிறந்தது.

benefits of betel leaves

செரிமானத்தை சீராக்கும் வெற்றிலை:

சைவ உணவாகவோ? அல்லது அசைவ உணவாகவோ? எதை அதிகமாக சாப்பிட்டாலும் செரிமான பிரச்சனை ஏற்படுவது என்பது இயல்பான ஒன்று. இதை சரி செய்ய வேண்டும் என்று நினைத்தால் வெற்றிலை சாப்பிடலாம். இதில் உள்ள கர்மினேடிவ் பண்புகள் குடல் இயக்கத்தைப் பாதுகாக்கிறது. மேலும் வெற்றிலையில் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

மேலும் படிக்க:தினமும் கொய்யா இலை சாப்பிடுங்க, உடலுக்கு கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள் இதோ

பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள்:

வெற்றிலையில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் பூஞ்சை எதிர்ப்புகளாக செயல்படுகிறது. குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய பூஞ்சை தொற்றுகள் மற்றும் புண்களை சரி செய்யக்கூடிய திறன்களையும் வெற்றிலை கொண்டுள்ளது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP