காலையில் நாட்காட்டியை பார்க்கவில்லை என்றாலும் கோயிலுக்கு செல்லும் பெண்களை வைத்தே ஆடி மாத வெள்ளிகிழமையை கண்டுபிடித்துவிடலாம். ஆடி மாத வெள்ளிக்கிழமை அம்மனை கொண்டாடுவதற்கான விஷேமான நாளாகும். இந்த வருட ஆடி மாதத்தில் ஐந்து வெள்ளிக்கிழமை வருகிறது. ஆடி மாத முதல் வெள்ளி ஆடி பிறப்பின் இரண்டாம் நாளான ஜூலை 18ஆம் தேதி அமைந்துள்ளது. ஆடி மாதத்தின் ஒவ்வொரு வெள்ளியிலும் அம்மனுக்கு செய்ய வேண்டிய வழிபாடு பற்றி பார்க்கலாம்.
ஆடி வெள்ளி 2025
ஆடி மாதத்தின் முதல் வெள்ளி ஜூலை 18ஆம் தேதியை தொடர்ந்து, இரண்டாவது வெள்ளி ஜூலை 25ஆம் தேதியும், மூன்றவாது வெள்ளி ஆகஸ்ட் 1ஆம் தேதியும், நான்காவது வெள்ளி ஆக்ஸ்ட் 8ஆம் தேதியும், ஐந்தாவது வெள்ளி ஆகஸ்ட் 15ஆம் தேதியும் வருகிறது. ஆடி மாதத்தின் முதல் வெள்ளியில் அம்மனுக்கு திருவிளக்கு பூஜையுடன் தொடங்கவும். திருவிளக்கு பூஜையினால் மூன்று தேவிகளின் அருளும் கிடைக்கும்.
ஆடி 2வது வெள்ளி வழிபாடு
ஜூலை 25ஆம் தேதி ஆக்ஸ்ட் இரண்டாவது வெள்ளியில் அம்மனை மங்கள கெளரியாக பாவித்து விரதமிருந்து வழிபாடு செய்ய வேண்டும். ஆடி வெள்ளி வழிபாடு தொன்று தொட்ட வழக்கமாகும். இதை குடும்ப பெண்கள் தெரிந்து கொள்வது அவசியம். காலை முதல் மாலை வரை குடும்ப நலனுக்காக விரதமிருக்கவும். மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்கு உட்பட்டு அம்மனுக்கு நெய்வேத்தியம் செய்து வழிபடவும். அம்மனை சிவப்பு நிற மலர்களால் அலங்கரியுங்கள். தாம்பாளத்தில் மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, தாலி சரடு, மல்லிகை பூ வைத்து அம்மனை வழிபட்ட பிறகு சுமங்கலிக்கு கொடுக்கவும்.
ஆடி மூன்றாவது வெள்ளி
ஆடி மாதம் மூன்றாம் வெள்ளி ஆகஸ்ட் 1ஆம் தேதி வருகிறது. அன்றைய நாளில் தளிகை போட்டு (வித விதமான கலவை சாதங்கள்) செய்து அம்மன் படத்திற்கு பக்கத்தில் துள்ளு மாவு, பானகம் வைத்து மஞ்சள் தண்ணீர் நிரப்பிய கலசம் வைத்து வழிபடுங்கள். ஆடி வெள்ளிகளில் அன்னதானம் செய்வதும் சிறப்பு.
ஆடி நான்காம் வெள்ளி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரலட்சுமி நோன்பு என்பதால் அதை தனி விரத, வழிபாடு நாளாக கடைபிடிக்க வேண்டும்.
மேலும் படிங்கஆடி பிறப்பு 2025 : அம்மனின் முழு அருளை பெற செய்ய வேண்டிய வழிபாடு, பூஜை நேரம்
ஆடி ஐந்தாவது வெள்ளி
ஆடி மாதத்தின் ஐந்தாவது மற்றும் கடைசி வெள்ளி ஆகஸ்ட் 15ஆம் தேதி வருகிறது. பிறரின் பசியை போக்கினால் அம்மன் நமக்கு பூரண அருள் புரிவாள். அன்னதானம் வழங்க முடியவில்லை எனில் மாட்டுக்கு தீவனம் வாங்கி கொடுக்கவும். ஆடி வெள்ளியில் கோமாதா வழிபாடு பாவங்களை நீக்கி செல்வ நலன் பெருகச் செய்யவும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation