தமிழ் ஆண்டில் ஒரு மாதம் முழுக்க நாம் வழிபாடு செய்வதற்கு குறிப்பிட்டு ஒரு மாதத்தை சொல்ல வேண்டுமானால் ஆடி மாதத்தை தயக்கமின்றி சொல்லலாம். ஆடி மாதத்தின் ஒவ்வொரு நாளும் விசேஷமானது. இந்த ஆண்டு ஆடி மாதம் ஜூலை 17ஆம் தேதி ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை அமைந்திருக்கிறது. ஆடி மாதத்தின் ஒவ்வொரு நாளும் அம்மன் வழிபாட்டுக்கு உகந்தது. ஆடி மாதத்தை அம்மனுக்கான விழாக்காலமாக கருதலாம். ஆடி 1 அதாவது ஆடி பிறப்பு ஜூலை 17 வியாழக்கிழமை வருகிறது.
ஆடி பிறப்பு (ஆடி 1) அம்மன் வழிபாடு
ஆடி பிறப்பு என்றால் நாம் செய்ய வேண்டிய முதல் வேலை வீட்டை முழுவதுமாக சுத்தப்படுத்துவது. ஆடி மாதத்தில் அம்மனை வழிபட்டால் மாதம் முழுவதும் அம்மன் வீட்டில் எழுந்தருளி அருள் புரிவாள். அம்மனுடன் சேர்த்து நமக்கு உரிய குலதெய்வத்தை வணங்க வேண்டும். வீட்டில் எல்லா சாமி படங்களுக்கும் பூ போட்டு அம்மனின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து சிறிய கலசத்தில் மஞ்சள் நீரை நிரப்பி வேப்பிலையுடன் வைத்திடுங்கள்.
அம்மனுக்கு உரிய பக்தி பாடல்களை ஒலித்து அபிராமி அந்தாதி படியுங்கள். அம்மனின் அருள் ஆசி குடும்பத்தினருக்கு முழு பலனையும் பெற்றுத்தர வேண்டிக் கொள்ளுங்கள். அம்மனுக்கு உகந்த நெய் வேத்தியம் படைக்கவும். முன்னதாக தேங்காய் சுட்டு சாப்பிடுவது, கூழ் காய்ச்சும் வழக்கம் இருந்தால் நல்ல நேரத்தில் செய்யவும்.
ஆடி பிறப்பு அம்மன் வழிபாடு நேரம்
காலை 5 மணி முதல் 6 மணி வரை
காலை 8 மணி முதல் 10.30 மணி வரை
அம்மனுக்கு படையலிட்டு வழிபட நினைப்போர் மதியம் 12 மணி முதல் 1.20 வரை வழிபடலாம். காலை நேரத்தை தவறவிடுபவர்கள் இரவு 7 மணிக்கு மேல் வழிபடவும். ஜூலை 17 தேய்பிறை அஷ்டமி என்பதால் இரவு 7 மணிக்கு வழிபட அறிவுறுத்தப்படுகிறது. காலையில் வீட்டில் பூஜை முடித்துவிட்டுஅம்மன் கோயிலுக்கு சென்று அபிஷேகத்திற்கு அரை லிட்டர் பால் வாங்கி கொடுக்கவும். மாலையில் நெய் தீபம் ஏற்றுங்கள். கூடுதலாக மகாலட்சுமியின் அருளை பெற்றிட ஆடி பிறப்பில் மஞ்சளும், உப்பு வாங்கி பூஜை அறையில் வைத்து பின்னதாக சமையலுக்கு பயன்படுத்துங்கள்.
ஆடி மாதத்தின் சிறப்புகளை தெரிந்து கொள்ள ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation