ஆடி மாதத்தின் ஒவ்வொரு நாளுமே சிறப்பு வாய்ந்தது. ஆடி பிறப்பு, ஆடி முதல் வெள்ளியை தொடர்ந்து ஆடி கிருத்திகை கொண்டாடப்படுகிறது. ஆடி கிருத்திகை அம்மனுடன் முருகப்பெருமானை வழிபடுவதற்கு உகந்த நாளாகும். இந்த ஆண்டு ஆடி கிருத்திகை இரண்டு நாட்கள் வருகிறது. மாதம் பிறந்தவுடன் ஜூலை 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒரு கிருத்திகை மற்றும் ஆகஸ்ட் 16ஆம் தேதி சனிக்கிழமை மற்றொரு கிருத்திகை வருகிறது. இதில் எந்த நாளில் ஆடி கிருத்திகை விரதமிருப்பது என்ற சந்தேகம் இருந்தால் இரண்டு நாட்களே கடைபிடிக்கலாம் என்பது முருகர் கோவில்களில் இருந்து பெறப்பட்ட தகவலாகும்.
அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவில் மற்றும் சென்னையில் புகழ்பெற்ற வடபழநி முருகன் கோவிலில் ஆகஸ்ட் 16ஆம் தேதி ஆடி கிருத்திகை கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான முருகர் கோவில்களில் ஆடி கிருத்திகை ஆகஸ்ட் 16ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. எனினும் பழநி முருகன் கோவிலில் ஜூலை 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆடி கிருத்திகை கொண்டாடப்படவுள்ளது. திருமண வரன் வேண்டி பட்டினி விரதமிருந்து முருகனை வழிபட நினைப்பவர்கள் ஆகஸ்ட் 16ஆம் தேதி ஆடி கிருத்திகை கடைபிடிக்கலாம்.
ஆடி கிருத்திகை நாள், நேரம்
ஆடி கிருத்திகை, ஜூலை 20ஆம் தேதி
அதிகாலை 12.14 மணி முதல் இரவு 10.36 மணி வரை கார்த்திகை நட்சத்திரம் தொடர்கிறது.
ஆடி கிருத்திகை, ஆகஸ்ட் 16ஆம் தேதி
காலை 8.27 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6.48 மணி வரை
ஆகஸ்ட் 16ஆம் தேதி தேய்பிறை அஷ்டமி கூடிய கார்த்திகை நட்சத்திரம் இருப்பதால் அன்று விரதமிருந்து வழிபடுவது கடன் தொல்லையில் இருந்து விடுபட உதவும்.
ஆடி கிருத்திகை முருக வழிபாடு
- காலையில் எழுந்து குளித்த பிறகு பூஜை அறையில் முருகருக்கு சிவப்பு நிற மலர் குறிப்பாக செவ்வரளி மலர் போடவும். காலை தொடங்கி மாலை வரை பட்டினி இருக்கவும்.
- பாலில் தேன் அல்லது நெய் கலந்து நெய் வேத்தியம் படைக்கலாம். தேனும், தினை மாவும் கூட வைக்கலாம்.
- ஷட்கோண தீபம் அதாவது ச ர வ ண ப வ கோலமிட்டு வார்த்தைக்கு மேல் தலா ஒரு விளக்கு என ஆறு விளக்கேற்றவும்.
- அதை தொடர்ந்து கந்த சஷ்டி கவசம் படித்து பிறகு அம்மனை வழிபடுங்கள்.
- வீட்டில் பூஜை முடித்த பிறகு கோவிலுக்கு சென்று முருகனை நேரடியாக தரிசிக்கவும்.
- மாலை 6 மணிக்கு மீண்டும் ஷட்கோணம் தீபம் ஏற்றி நினைத்தது நிறைவேற வழிபடவும்.
- கோயிலில் முருக பக்தர்களுக்கு ஏதாவது தானம் செய்யவும். இரவு 7 மணிக்கு விரதத்தை நிறைவு செய்யவும்.
மேலும் படிங்கஆடி வெள்ளி 2025 : திருவிளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டால் பெருகும் வளம்
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation