herzindagi
valentines day food

valentine's day food : காதலர் தினம்! அன்பை வெளிப்படுத்த இந்த உணவுகளை செய்யுங்கள்

 காதலர் தினம் ஸ்பெஷலாக அன்பை வெளிப்படுத்த செய்ய வேண்டிய சிறப்பு உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். 
Editorial
Updated:- 2023-02-13, 11:23 IST

காதலர் தினத்தை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாட தயாராகி விட்டது. காதலர் தின சிறப்பு கொண்டாட்டங்கள் பல இடங்களில் களைக்கட்ட தொடங்கி விட்டன. பரிசு பொருட்கள், ரோஸ்களின் விற்பனைகள் படு ஜோராக நடந்து வருகிறது. நீண்ட நாட்களாக காதலை சொல்லாமல் இருந்தவர்கள், முதன்முறையாக காதலை சொல்ல போகிறவர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த பல வகைகளில் திட்டமிட்டுருப்பார்கள். ஆண்களின் திட்டமிடுதல் எப்போதுமே அதிக பணம் செலவழிப்பதாக இருக்கும். ஆனால் பெண்கள் சின்ன சமையலிலே தங்களது பெரிய அன்பை வெளிப்படுத்தி விடுவார்கள்.

காதலர்கள் மட்டும் தான் இந்த நாளை கொண்டாட வேண்டுமென்று இல்லை. கணவன் - மனைவிகள், காதலித்து திருமணம் செய்தவர்கள், புதுமண தம்பதிகள் அனைவருமே இந்த நாளில் தங்களது துணையிடம் அன்பை வெளிக்காட்டலாம். அவர்களுக்கு சர்ப்ரைஸாக பரிசு கொடுத்து இன்ப அதிர்ச்சியை தரலாம்.

அந்த வகையில் காதலர் தினம் ஸ்பெஷலாக அன்பை வெளிப்படுத்த செய்ய வேண்டிய சிறப்பு உணவுகள் குறித்து இப்போது பார்ப்போம்.

இதய வடிவலான கட்லட்

மிகவும் சிம்பிளாக செய்யக்கூடிய கட்லட் ரெசிபியை பெண்கள் பலரும் அடிக்கடி வீட்டில் செய்வார்கள். அதே ரெசிபியை காதலர் தினத்தில் ஸ்பெஷலாக செய்யும் போது கட்லட்டை வட்ட வடிமாக தட்டாமல் இதய வடிவில் தட்டி பொரித்து எடுக்க வேண்டும். மாலை நேரத்தில் ஆபீஸ் விட்டு, வீட்டுக்கு வரும் கணவருக்கு இதய வடிவில் கட்லட் செய்து தட்டில் வைத்து கெச்சப்பில் ‘காதலர் தின வாழ்த்துக்கள்’ எனவும் எழுதி கொடுத்தலாம். செம்ம ரொமாண்டிக்காக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம்:காதலர் தின ஸ்பெஷல் உணவுகள்

food special

இதய வடிவ பீட்சா

பீட்சாவை பிடிக்காதவர்கள் உண்டா? குறிப்பாக ஆண்களுக்கு பீட்சா என்றால் மிகவும் பிடிக்கும்.உங்கள் கணவரும் பீட்சா பிரியராக இருந்தால் மிகவும் எளிமையாக இதய வடிவில் பீட்சா செய்து அசத்துங்கள். நிச்சயம் உங்கள் காதல் மற்றும் அன்பை அவர்கள் புரிந்து கொண்டு ஆச்சரியமடைவார்கள்.

little heart

இதய வடிவ பிஸ்கட்டுகள்

90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த லிட்டில் ஹார்ட் பிஸ்கட்டுகளை வீட்டிலேயே செய்து அசத்தலாம். காதலர்களுக்காக அறிமுக செய்யப்பட்ட இந்த பிஸ்கட் எத்தனை காதலை இணைத்து வைத்திருக்கிறது தெரியுமா? நீங்களும் இதய வடிவில் வகை வகையான பிஸ்கட்களை செய்து கொடுத்து உங்கள் துணைக்கு காதலர் தின வாழ்த்துக்களை சொல்லுங்கள்.

இந்த பதிவும் உதவலாம்:காதலர் தின ஸ்பெஷல் சைவ உணவு வகைகள்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]