
காதலர் தினம் என்பது நம் அன்புக்குரியவர்களிடம் அன்பை காட்ட ஒரு சிறப்பான சந்தர்ப்பம், உணவு என்பது அன்பின் வெளிப்பாடாகும், மேலும் சிறப்பு வாய்ந்த ஒருவருக்கு ருசியான உணவை உருவாக்க நேரம் ஒதுக்குவது, அவர்கள் உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களுக்குக் காட்ட ஒரு அற்புதமான வழியாகும். இதய வடிவ உணவு மற்றும் இனிப்புகளை விட வேறு என்ன சிறந்த வழி? இந்த காதலர் தினம் 2023ல், ஏதாவது சிறப்பான சைவ உணவு செய்ய திட்டமிடுகிறீர்கள் என்றால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

இதுவும் உதவலாம்:காதலர் தின ஸ்பெஷல் உணவுகள்
மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்து ஓவனில்180 டிகிரி சென்டிகிரேடில் 30 நிமிடங்கள் பேக் செய்யவும்,அல்லது டம்ப்ளரில் மாவை ஊற்றி குக்கரில் 40 நிமிடம் வேக வைக்கவும்.சுவையான ரோஸ் கப் கேக் தயார்.
மேலே கூறியுள்ள அனைத்தையும் நன்றாக 5 நிமிடம் கலக்கி கொள்ளவும். பின்பு தோசை கல்லில் இந்த கலவையை இதய வடிவில் ஊற்றவும். உங்களிடம் குக்கீ கட்டர் அல்லது மோல்ட் இருந்தால் அவற்றை பயன்படுத்தியும் இதய வடிவத்தை ஊருவாக்கவும்.

இது எப்போதும் சாப்பிடும் வழக்கமான உணவு தான் ஆனால் இவற்றை காதலர் தினத்தன்று சிறிது ஸ்பெஷலாக செய்யலாம். சப்பாத்தி மாவை தேய்த்த பின்பு அவற்றை இதய வடவில் வடிவம் செய்து சமைக்கவும். அதே போன்று பன்னீர் பட்டர் மசாலா சமைத்த பின்பு மேலே பிரெஷ் கிரீமை இதய வடிவில் அதில் மேலாக ஊற்றி அலங்கரிக்கவும்.

வண்ணமயமான ஸ்ப்ரிங்க்ள்ஸ், ட்ரைட் க்ரான்பெர்ரிஸ் அல்லது பிங்க் சாக்லேட் சிறிதாக தூவி , முட்டை இல்லாத குக்கீகளை செய்யலாம். ரெசிபி செய்ய மிகவும் எளிதானது. ஸ்ட்ராபெரி மில்க்ஷேக்கும் சிறப்பாக இருக்கும்.
உங்கள் அன்புக்குரியவர்களுக்கு சாக்லேட்களை மட்டுமே பரிசளிக்காதீர்கள். அதற்குப் பதிலாக நீங்களே சுலபமாக செய்ய கூடிய சாக்லேட் மக் கேக்கைச் செய்து கொடுக்கவும்.
இதுவும் உதவலாம்:ரோஜா இதழ்களைக் கொண்டு ஐந்து தனித்துவமான ரெசிபிக்கள்
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]
