herzindagi
sweet potato rotti..

குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சப்பாத்தி!

<span style="text-align: justify;">சர்க்கரை வள்ளி கிழங்கில் பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம், கரோட்டினாய்ட்ஸ்கள்&nbsp; உடலுக்குத் தேவையான ஆற்றல்களையும் பெற உதவியாக உள்ளது.&nbsp;</span>
Editorial
Updated:- 2024-08-07, 20:40 IST

குழந்தைகளுக்கு சத்தான உணவுகள் கொடுப்பது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமைகளில் ஒன்றாக உள்ளது. சிறு வயதில் எந்தளவிற்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கொடுக்கிறோமோ? அந்தளவிற்கு அவர்களின் உடல் ஆரோக்கியத்துடன் கூடிய வளர்ச்சிப் பெறுவதற்கு உதவியாக இருக்கும். ஆனால் என்ன? குழந்தைகளைச் சாப்பிட வைப்பது என்பது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் பெரும் சவாலாக அமையும். இதோ இன்றைக்கு அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட விரும்பிச் சாப்பிடக்கூடிய வகையில், சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு சப்பாத்தி எப்படி செய்வது? என்பது குறித்த ரெசிபி டிப்ஸ்கள் உங்களுக்காக.

 Sweet potato roti

மேலும் படிக்க: சுவையான பனீர் மக்கானி பிரியாணி செய்வது எப்படி? 

சர்க்கரை வள்ளிக்கிழங்கு சப்பாத்தி:

தேவையான பொருட்கள்: 

  • மசித்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 2 கப்
  • கோதுமை மாவு - 2 கப்
  • உப்பு - சிறிதளவு
  • மஞ்சள் தூள் - சிறிதளவு
  • மிளகாய் தூள் - சிறிதளவு
  • கரம் மசாலா தூள்- சிறிதளவு
  • இஞ்சி பூண்டு விழுது 
  • கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:

  • சர்க்கரை வள்ளிக்கிழங்கு சப்பாத்தி செய்வதற்கு முதலில், கிழங்கை குக்கரில் அல்லது பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும். பின்னர் சர்க்கரை வள்ளிக்கிழங்கை தோல் நீக்கி நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். 
  • இதையடுத்து மசித்து எடுத்து வைத்துள்ள சர்க்கரை வள்ளிக்கிழங்குடன் இரண்டு கப் கோதுமை மாவு மற்றும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றம் உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும். பின்னர் இதனுடன் சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கிளறிக் கொள்ளவும். இதனுடன் சிறிதளவு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு கிளறிக் கொள்ளவும். சிறிதளவு எண்ணெய் ஊற்றி பிசைந்து விட்டு அரை மணி நேரம் அப்படியே வைத்து விடவும். 
  • சப்பாத்திக்கல்லில் மாவை தேய்த்துக் கொண்டு, தோசைக்கல் சூடேறியதும் போட்டு எடுத்தால் போதும் சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு சப்பாத்தி ரெடி. இதற்கு தயிர் வெங்காயம், தக்காளி சட்னி, சாஸ் வைத்துக் கொடுத்தால் போதும் சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு சப்பாத்தி ரெடி. 

மேலும் படிக்க: குழந்தைகளுக்கு பிடித்த தேங்காய் பால் பாயாசம் செய்வது எப்படி?


potato

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள்: 

சர்க்கரை வள்ளி கிழங்கில் பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம், கரோட்டினாய்ட்ஸ், பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்துக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் உடலுக்குத் தேவையான அத்தனை ஆற்றல்களையும் பெறுவதற்கு உதவியாக உள்ளது. குறிப்பாக கோதுமை மாவு மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சேர்த்து தயார் செய்யப்படும் சப்பாத்தியை குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது அவர்களின் உடல் ஆற்றலுடனும், வளர்ச்சிக்கும் பேருதவியாக இருக்கும். எனவே குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இதுபோன்ற ரெசிபிகளை இனி ட்ரை பண்ணிப்பாருங்கள். 

Image source - Google 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]