herzindagi
  ()

Coconut milk Payasam: குழந்தைகளுக்கு பிடித்த தேங்காய் பால் பாயாசம் செய்வது எப்படி?

ஆடி மாதம் ஸ்பெஷல் சுவையான தேங்காய் பால் பாயாசம் செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.  
Editorial
Updated:- 2024-08-06, 21:22 IST

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்று கூறப்படுகிறது. இந்த ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்வதோடு ஏதாவது ஸ்பெஷலாக சமைத்த அம்மனுக்கு படைத்த வழிபடுவது தமிழர்களின் வழக்கம். இந்த நிலையில் பெரும்பாலான வீடுகளில் ஆடி மாதத்தில் வடை பாயாசம் சமைத்து சாப்பிடுவார்கள். அந்த வரிசையில் வித்தியாசமாக குழந்தைகளுக்கு பிடித்த தேங்காய் பால் பாயசம் செய்து பாருங்கள். இந்த தேங்காய் பால் பாயாசத்தை மாலை வேளையில் காபீ, டீக்கு பதிலாக கூட செய்து சாப்பிடலாம். இதனை தொடர்ந்து சுவையான தேங்காய் பால் பாயாசம் செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

சுவையான தேங்காய் பால் பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்: 

  • 1 1/2 டேபிள் ஸ்பூன் பச்சரிசி 
  • ஒரு கப் துருவிய தேங்காய் 
  • மூன்று ஏலக்காய் 
  • 2 1/4 கப் தண்ணீர் 
  • 3/4 கப் வெல்லம் 
  • 1 டேபிள்ஸ்பூன் நெய் 
  • சிறிதளவு முந்திரி 
  • சிறிதளவு உலர் திராட்சை 

சுவையான தேங்காய் பால் பாயாசம் செய்முறை: 

coconut payasam big  ()

முதலில் தேவையான அளவு பச்சரிசியை தண்ணீரில் சேர்த்து இரண்டு முறை கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி இந்த அரிசியை 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 20 நிமிடத்திற்கு பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் நாம் உறவைத்து அரிசியை தண்ணீருடன் சேர்த்து அதில் ஒரு கப் துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு ஏலக்காய் சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி நன்கு மையாக அரைத்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு சிறிய கடாயில் நாம் அரைத்து வைத்த தேங்காயை ஊற்றி அதில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் மிதமான தீயில் வைத்து மூன்று அல்லது ஐந்து நிமிடம் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

இந்த தேங்காய் சற்று கெட்டியாக தொடங்கும் போது அதில் வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறி சுமார் மூன்று அல்லது ஐந்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இதனை அடுத்து மறுபுறம் அடுப்பில் வேறொரு சிறிய கடாய் வைத்து அதில் நெய் ஊற்றி அந்த நெய் சூடானதும் முந்திரி உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் பாயாசத்துடன் இந்த நெய்யில் வறுத்து எடுத்த முந்திரி பருப்புகளை சேர்த்து கிளறி பாயாசத்தை இறக்கினால் போதும். அவ்வளவுதான் சுவையான தேங்காய் பால் பாயாசம் ரெடி.

Image source: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]