
இன்றைய காலகட்டத்தில் தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அதிகரித்த உடல் எடை, ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறை, சமநிலையற்ற ஹார்மோன் போன்ற காரணங்களினால் தைராய்டு பிரச்சனை ஏற்படலாம். உடலில் இருக்கும் தைராய்டு சுரப்பி தேவைக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்யும்பொழுது தைராய்டு பிரச்சனை தொடங்குகிறது.
தைராய்டை கட்டுப்படுத்துவது அவ்வளவு கடினம் அல்ல. உங்கள் அன்றாட வாழ்க்கையில் ஒரு சில மாற்றங்களைச் செய்வதன் மூலமும் சரியான உணவை எடுத்துக்கொள்வதன் மூலமும் இதை கட்டுப்படுத்தலாம். அந்த வகையில் தைராய்டு நோயாளிகளுக்கு நன்மை பயக்கக்கூடிய ஒரு சூப் ரெசிபியை இன்று இப்பதிவில் பார்க்கப் போகிறோம். இந்த ரெசிபியை உணவியல் நிபுணரான மன்ப்ரீத் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: நீர்க்கட்டி பிரச்சனையுள்ள பெண்களுக்கான ஸ்மூத்தி ரெசிபி


கேரட்டில் உள்ள வைட்டமின் A, பருப்பில் உள்ள இரும்புச்சத்து, உப்பில் உள்ள அயோடின், கருப்பு மிளகு பொடியில் உள்ள பைப்பரின், பூசணி விதைகளில் உள்ள துத்தநாகம் மற்றும் சூரியகாந்தி விதைகளின் உள்ள செலினியம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் தைராய்டின் அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: அறுசுவையும் ஆரோக்கியமும் நிறைந்த வேப்பம் பூ ரசம் ரெசிபி
உணவே மருந்து! ஆரோக்கியமான உணவை உண்டு வளர்ந்து வரும் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல முன்னோடியாக இருப்போம். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]