herzindagi
pcos health drinks

நீர்க்கட்டி பிரச்சனையுள்ள பெண்களுக்கான ஸ்மூத்தி ரெசிபி

இன்றைய காலகட்டத்தில் பல பெண்களும் நீர்கட்டியால் அவதிப்படுகிறார்கள். இதற்கு உதவக்கூடிய ஒரு அருமையான ஸ்மூத்தி ரெசிபியை இப்பதிவில் படித்தறியலாம்…
Editorial
Updated:- 2023-04-12, 09:39 IST

மோசமான வாழ்க்கை முறை, சமசீரற்ற உணவு போன்ற பல்வேறு காரணங்களால் நீர்கட்டிகள் உண்டாகலாம். இது மாதவிடாய் சுழற்சியை பாதிப்பதோடு மட்டுமின்றி உடலுக்கும் பல்வேறு ஆபத்துகளை விளைவிக்கிறது. மேலும் ஒரு சில பெண்களுக்கு கருவுறுதலும் பாதிக்கப்படலாம். இதை தடுக்க வெள்ளை சர்க்கரை, மைதா, பேக்கரி சார்ந்த பொருட்களை தவிர்த்து விட்டு ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பெரும்பாலான உடல்நல பிரச்சனைகளுக்கும் நிச்சயமாக உணவின் மூலம் தீர்வு காணலாம். இந்நிலையில் நீர்க்கட்டியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவக் கூடிய ஒரு அற்புதமான ஸ்மூத்தி ரெசிபியை இப்பதிவில் பார்க்கப் போகிறோம். பால் மற்றும் எவ்வித செயற்கை இனிப்புகளும் சேர்க்கப்படாத இந்த ஆரோக்கியமான ஸ்மூத்தியை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். இதை உங்கள் காலை உணவுடன் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: இனி வீட்டிலேயே மும்பை ஸ்டைல் பாவ் பாஜி செய்து ருசியுங்கள் !

தேவையான பொருட்கள்

seeds for pcos smoothie

  • பூசணி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
  • பாதாம் -6
  • கருப்பு உலர் திராட்சை - 6
  • தண்ணீர் - 1 கப்
  • கொக்கோ பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
  • ஆளி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
  • வாழைப்பழம் - 1

செய்முறை

smoothie for pcos

  • பூசணி விதைகள், பாதாம் மற்றும் கருப்பு உலர் திராட்சையை இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
  • மறுநாள் காலையில் பாதாமின் தோலை உரித்து நீக்கிவிடவும்.
  • இவ்வாறு உலர் பழங்கள் மற்றும் விதைகளை இரவு முழுவதும் ஊற வைப்பதால் அவற்றின் ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மிகவும் சிறப்பாக இருக்கும்.
  • இப்போது ஒரு மிக்ஸர் சாரு ஊற வைத்துள்ள பூசணி விதைகள் பாதாம் மற்றும் கருப்பு உலர் திராட்சையை சேர்க்கவும்.
  • பின்னர் ஒரு டேபிள் ஸ்பூன் கொக்கோ பவுடர் சேர்க்க வேண்டும்.
  • வாழைப்பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி, அதையும் மிக்ஸியில் சேர்த்துக்கொள்ளவும்.
  • இறுதியாக ஒரு டேபிள் ஸ்பூன் ஆளி விதைகளை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  • உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப ¾-1 கிளாஸ் வரை தண்ணீர் சேர்க்கவும். செம்பு பாத்திரத்தில் வைத்த தண்ணீரையும் இதற்கு பயன்படுத்தலாம்.
  • இவை எல்லாம் ஒன்று சேர்த்து ஸ்மூத்தி சரியான பதத்திற்கு வரும்வரை அரைத்துக் கொள்ளவும்.
  • இதில் சேர்க்கப்பட்டுள்ள உலர் திராட்சை லேசான இனிப்பு சுவையை கொடுக்கும். இந்த ஸ்மூத்தியின் முழு பயனையும் பெற வெள்ளை சர்க்கரையை கட்டாயம் தவிர்த்திடுங்கள்.
  • அரைத்த ஸ்மூத்தியை ஒரு கிளாஸிற்கு மாற்றி, தேவைப்பட்டால் சிறிதளவு டார்க் சாக்லேட், துருவிய பாதாம் மற்றும் ஊற வைத்த பூசணி விதைகள் சேர்த்து குடிக்கலாம்.

சுவைக்கு குறைவில்லாத ஆரோக்கியம் நிறைந்த இந்த ஸ்மூத்தியை நீங்களும் கட்டாயம் முயற்சி செய்து பாருங்கள் நீர்கட்டி பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஸ்மூத்தி சிறந்த பலன்களைத் தரும்.

இந்த பதிவும் உதவலாம்: இயற்கையான சரும பொலிவு பெற இந்த 3 பானங்களை முயற்சி செய்யலாமே!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]