Vada Pav Recipe : மும்பை ஸ்டைல் வட பாவ் செய்முறை

வெறும் ஒரு மணி நேரத்தில் மகாராஷ்டிரா ஸ்டைலில் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவுக்கு மிகவும் பிடித்த வட பாவ் எப்படி செய்வது என இங்கே பகிர்ந்துள்ளோம்

secret recipe in vada pav

தமிழகத்தில் மாலை நேர தின்பண்டமாக வடை, பஜ்ஜி, போண்டா, சமோசா ஆகியவற்றை சாப்பிடுகிறோம். இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு உங்களுக்கு போர் அடித்திருந்தால் வட இந்தியா மாநிலங்களின் தின்பண்டத்தை தயார் செய்து ருசி பார்க்கலாம். வட இந்திய மாநிலங்களின் டூர் வீடியோக்களை காணும் போது அதில் ஸ்ட்ரீட் ஃபுட் ஆக வட பாவ் தின்பண்டம் இருக்கும்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் வட பாவ் மிகவும் பிரபலம். எனவே நாம் மும்பை ஸ்டைல் வட பாவ் எப்படி செய்வது என பார்க்கலாம். மகாராஷ்டிராவில் மிசல் பாவ், உசல் பாவ் போன்ற தின்பண்டங்கள் இருந்தாலும் வட பாவ்-ன் சுவையை மிஞ்ச முடியாது. மகாராஷ்டிரா மட்டுமல்ல வட இந்திய மாநிலங்கள் அனைத்திலும் வட பாவ் மிகவும் ஃபேமஸ். ஒரு வட பாவ்-ன் விலை அதிகபட்சமாக 15 ரூபாய் இருக்கும்.

மும்பை ஸ்டைல் வட பாவ் செய்யத் தேவையானவை

  • உருளைக்கிழங்கு
  • கடலெண்ணெய்
  • கடுகு
  • பச்சை மிளகாய்
  • இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு
  • பெருங்காயத் தூள்
  • மஞ்சள் தூள்
  • கொத்தமல்லி
  • எலுமிச்சை
  • கடலை மாவு
  • அரிசி மாவு
  • குக்கிங் சோடா
  • மிளகாய் தூள்
  • வெண்ணெய்
  • புதினா சட்னி
  • ஓம பொடி
  • தண்ணீர்
  • பூண்டு
  • வேர்க்கடலை
  • வெள்ளை எள்
vada pav

வட பாவ் செய்முறை

  • முதலில் 250 கிராம் அளவிற்கு நான்கு உருளைக்கிழங்கை எடுத்து குக்கரில் வைத்து ஐந்து விசில் அடிக்கும் வரை வேக விடுங்கள்.
  • பத்து நிமிடங்கள் கழித்து குக்கரை திறந்து உருளைக்கிழங்கின் தோலை உரித்து அதை நன்கு மேஷ் செய்யவும். இதை தனியாக வைத்து விடுங்கள்.
  • அடுத்ததாக ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் கடலெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு அரை ஸ்பூன் கடுகு போடவும்’
  • கடுகு வெடித்த பிறகு பச்சை மிளகாய்களை நறுக்கி அதில் இரண்டு ஸ்பூன் மட்டும் சேர்க்கவும்
  • பச்சை மிளகாய் வறுபட்ட பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது போடுங்கள்.
  • இதன் பச்சை வாடை போனவுடன் மேஷ் செய்த உருளைக்கிழங்கு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் பெருங்காய தூள், கொஞ்சம் கொத்தமல்லி சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
  • பிசிபிசுப்பு தன்மை இல்லாமல் இருப்பதற்கு கடலெண்ணெய் சேர்க்கவும். இரண்டு நிமிடங்களுக்குள் இவை நன்றாக மிக்ஸ் ஆகி விடும்.
  • அடுப்பை ஆஃப் செய்து விட்டு ஒரு எலுமிச்சையை பாதியாக வெட்டி அதிலிருந்து எலுமிச்சை சாற்றை உருளைக்கிழங்கு மசாலாவுடன் சேர்க்கவும்
  • சூடு ஆறுவதற்கு 20 நிமிடங்கள் ஆகும். காத்திருங்கள்…
  • இதன் செய்முறை ஏறக்குறைய உருளைக்கிழங்கு போண்டாவை போலத் தான். ஆகையால் குழப்பமடைய தேவையில்லை.
  • தற்போது மாவு தயாரிக்க வேண்டும். இதற்கு 250 கிராம் கடலை மாவு மற்றும் ஐந்து ஸ்பூன் அரிசி மாவு தேவை. இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு மிக்ஸ் செய்யவும்
  • இவற்றுடன் தேவையான அளவு உப்பு, அரை ஸ்பூன் மிளகாய் தூள், கால் ஸ்பூன் குக்கிங் சோடா சேர்க்கவும்
  • இதனிடையே கடாயில் கலெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு கால் கரண்டி எண்ணெய்யை மாவில் ஊற்றுங்கள்
  • பஜ்ஜி மாவு செய்யும் போது தண்ணீர் ஊற்றுவது போலவே இந்த போண்டா மாவிற்கும் தண்ணீர் சேர்க்கவும்
  • தண்ணீர் அதிகமாக பயன்படுத்தினால் போண்டா அதிகளவு எண்ணெய்யை உறிஞ்சும்
  • பஜ்ஜி மாவு போலவே இந்த மாவின் பதம் இருக்க வேண்டும்
  • தாளித்த உருளைக்கிழங்கை சிறிது சிறிதாக 25 எண்ணிக்கைக்கு உருண்டை பிடிக்கவும். நாம் 250 கிராம் உருளைக்கிழங்கு பயன்படுத்துகிறோம். எனவே
  • ஒவ்வொரு உருண்டையும் 12 முதல் 15 கிராம் இருக்கலாம்.
  • தற்போது உருண்டைகளை கடலை மாவில் மூழ்கச் செய்து அதை கடலெண்ணெய்யில் போட்டு பொறித்து எடுக்கவும்
  • அடர் பழுப்பு நிறத்தில் பொறிந்து மொறு மொறுப்பாக தென்படும் வரை உருளைக்கிழங்கு போண்டாவை வறுக்கவும்
  • அடுத்ததாக பாவ் பன்னில் தெளிப்பதற்கான பொடி தேவை. இதற்கு பேனில் மூன்று ஸ்பூன் கடலெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு 50 கிராம் பூண்டு போட்டு ரோஸ்ட் செய்யவும்
  • இதனுடன் உப்பு இல்லாத வறுத்த வேர்க்கடலை 20 கிராம், 15 கிராம் வெள்ளை எள் சேர்த்து வறுக்கவும்
  • வெள்ளை எள் பொறிந்தவுடன் 30 கிராம் கொப்புரை தேங்காய் துருவல், ஆறு காய்ந்த சிவப்பு மிளகாய், உப்பு போட்டு வறுக்கவும்
  • பச்சை வாடை போன பிறகு அடுப்பை ஆஃப் செய்துவிடுங்கள்.
  • இதனை பத்து நிமிடங்களுக்கு ஆற வைத்து மிக்ஸ்யில் போட்டு அரைத்து பவுடராக்கி விடுங்கள்.
  • இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டோம். சிறிய பாவ் பன்களை பாதியாக வெட்டி அவற்றின் மீது வெண்ணெய் தடவுங்கள்
  • அடுத்ததாகப் பன் மீது அரைத்து வைத்த பவுடரை தெளிக்கவும். அதன் மீது கொஞ்சம் புதினா சட்னி ஊற்றி ஓம் பொடி போடுங்கள்
  • தற்போது ஏற்கெனவே வறுத்து வைத்த போண்டாவை பன் மீது வைத்து அடக்கினால் மும்பை ஸ்டைல் வட பாவ் ரெடி.

மகாராஷ்டிராவில் காரத்திற்காக வறுத்த பச்சை மிளகாயை வட பாவுடன் தருவார்கள். நீங்களும் இப்படி செய்யலாம்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP