அசைவம் சாப்பிடுவர்களுக்கு கோழி மிளகு கறியின் மீது தனி காதல் இருக்கும். இதற்கு கோழி கறியில் சேர்க்கப்படும் மிளகு முக்கிய காரணமாகும். அது கோழிக் கறியை ருசியாகவும் காரசாரமாகவும் மாற்றிடும். இதை ருசிக்க முடியாத சைவப் பிரியர்களுக்கு உருவாக்கப்பட்டதே காளான் மிளகு மசாலாவாகும். கோழிக்கு பதிலாக காளான் பயன்படுத்தி கோழி மிளகு கறி செய்முறையை அப்படியே பின்பற்ற போகிறோம். இதை மசாலாவாக அல்லது சிறிது தண்ணீர் ஊற்றி கிரேவி போல தயாரிக்கலாம். தோசை, பூரி, சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிடவும் சாதத்துடன் பிரட்டி சாப்பிடவும் மிக ருசியாக இருக்கும்.
இதை சமைத்த பிறகு சாப்பிட்டு பாருங்கள் கோழி மிளகு கறியை விட காளான் மிளகு மசாலா பத்து மடங்கு டேஸ்ட் அதிகமாக இருக்கும்.
மேலும் படிங்க Chilli Bread Recipe : சுவையான மொறுமொறுப்பான சில்லி பிரட் செய்முறை
நீங்கள் கடையில் வாங்கும் காளான் மிகப்பெரிதாக இருந்தால் அதை நான்காக வெட்டவும். காளான் சிறிதாக இருந்தால் அதை இரண்டாக வெட்டினால் போதும். காளானை பயன்படுத்தும் முன் தண்ணீரில் நன்கு கழுவி விடுங்கள்.
காளான் மசாலாவுக்கு உரிய சுவை கிடைக்க மிளகு மற்றும் சோம்பு மிக்ஸிங் தேவை. மிக்ஸியில் 30 கிராம் மிளகு மற்றும் பத்து கிராம் சோம்பு சேர்த்து அரைத்து விடவும்.
மேலும் படிங்க jackfruit biryani recipe : ஊரே மணக்கும் கம கம பலாக்காய் பிரியாணி செய்முறை
சினிமா நட்சத்திரங்களான ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஆகியோருக்கு இது போன்ற மிளகு மசாலா சமையல் மிகவும் பிடிக்குமாம். இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]