Chilli Bread Recipe : சுவையான மொறுமொறுப்பான சில்லி பிரட் செய்முறை

பத்து நிமிடங்களில் அற்புதமான ஸ்நாக் தயாரிக்க வேண்டுமா ? பிரட், குடை மிளகாய் இருந்தால் போதும் பிரட் மஞ்சூரியன் எனும் சில்லி பிரட் தயாரித்து விடலாம்.

Chilli bread

பரபரப்பான இந்தக் காலகட்டத்தில் வீடு மட்டுமல்ல உணவகங்களிலும் பாரம்பரிய இந்திய உணவுகள் சாப்பிடுவதை நாம் குறைத்துவிட்டோம். இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா கெட்டதா என்பதை தெரிந்துகொள்வதை விட தற்காலிகமாக பசியை போக்க உதவுகிறது என்றே நினைக்கிறோம். அந்த வகையில் காலையில் டிபனாகவும், மாலையில் ஸ்நாக் ஆகவும் சாப்பிடக்கூடிய இந்தோ - சீனா சில்லி பிரட் எப்படி சமைப்பது என பார்க்கப் போகிறோம்.

white bread

இதை நீங்கள் பத்து நிமிடங்களில் எளிதாகத் தயாரித்துவிடலாம். சூடாக சாப்பிட்டால் மிகுந்த ருசியாக இருக்கும்.

சில்லி பிரட் தேவையான பொருட்கள்

  • பிரட் - ஒரு பாக்கெட்
  • குடை மிளகாய்
  • வெங்காயம்
  • இஞ்சி
  • பூண்டு
  • சோயா சாஸ்
  • தக்காளி சாஸ்
  • மிளகாய் பேஸ்ட்
  • பச்சை மிளகாய்
  • சோள மாவு
  • உப்பு
  • தண்ணீர்

குறிப்பு :

சமைக்க தொடங்கும் முன்பாக இரண்டு வெங்காயத்தை நான்காக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு மஞ்சள், சிவப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றில் தலா ஒன்றை தேர்வு செய்து அவற்றில் பாதி நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதே போல பிரட்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

சில்லி பிரட் செய்முறை

  • முதலாவதாக கடாயில் ஆறு ஸ்பூன் கடலெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு நான்கு ஸ்பூன் அளவிற்கு இடிச்ச பூண்டு போடவும்
  • அதன் பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி சேர்க்கவும், அதனுடன் இரண்டு பச்சை மிளகாயை நறுக்கி போடுங்கள்
  • இவற்றை பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்குங்கள்
  • இதன் பின்னர் வெட்டி வைத்த இரண்டு வெங்காயம், குடை மிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும்
  • இதனிடையே 20 பச்சை மிளகாய்களை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல நன்கு அரைத்து விடுங்கள்
  • அதிலிருந்து ஒரு ஸ்பூன் பேஸ்ட்டை கடாயில் சேர்க்கவும். அடுத்ததாக ஒரு கப் அளவிற்கு தக்காளி சாஸ் சேர்க்கவும்
  • தற்போது சில்லி பிரட்டிற்கு தேவையான உப்பு சேர்த்தவுடன் கடாயில் 100 மில்லி தண்ணீர் ஊற்றவும்
  • இந்தக் கலவை நன்றாக கொதிக்கும் போது ஒன்றரை ஸ்பூன் சோயா சாஸ் சேர்க்கவும்
  • இதனுடன் அரை ஸ்பூன் சோள மாவை தண்ணீரில் கலந்து கடாயில் சேர்க்கும் போது சில்லி பிரட்டிற்கான கலவை திக் ஆகி விடும்
  • இதன் பிறகு சிறிது சிறிதாக வெட்டி வைத்திருக்கும் பிரட்-ஐ கடாயில் கொட்டி நன்றாக மிக்ஸ் செய்யவும்.
  • பிரெட் மொறுமொறுப்பாக இருக்க விரும்பினால் முன்னதாகவே எண்ணெய்யில் அதை பொரித்து எடுக்கவும்

அவ்வளவு தான் சில்லி பிரட் தயார். இறுதியில் அமுல் சீஸ் இருந்தால் சில்லி பிரட்-ஐ மீது கிரேட் செய்யவும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP