மலைக்காலத்தில் சூடாக டீ குடிப்பதை போல வேறெதுவும் நாவிற்கு ருசி தராது. ஆனால் டீ மட்டும் பருகினால் போதுமா ? சுவையான காரசாரமான உணவுகளை ருசிக்க வேண்டும். அந்த வகையில் மலைக்காலத்திற்கு ஏற்ற உணவாக கடாய் ரொட்டியும் அதற்குத் தொட்டு சாப்பிட ஆந்திரா சட்னியும் அமையும். இதற்கு இட்லி மாவு, வெங்காயம், மிளகாய் ஆகியவை இருந்தால் போதுமானது.
கடாய் ரொட்டி & ஆந்திரா சட்னிக்கு தேவையானவை
- இட்லி மாவு
- ரவை
- ஆப்ப சோடா
- உருழைக்கிழங்கு
- பச்சை மிளகாய்
- காய்ந்த மிளகாய்
- பூண்டு
- வெங்காயம்
- மஞ்சள் தூள்
- மிளகாய் தூள்
- உப்பு
- கொத்தமல்லி
- இஞ்சி
- கேரட்
- உருழைக்கிழங்கு
- நல்லெண்ணெய்
- கொத்தமல்லி
- கடுகு
ஆந்திரா சட்னி செய்முறை
- ஒரு கடாயில் ஆறு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி நான்கு பச்சை மிளாய், 20 பூண்டு போட்டு வறுக்கவும்
- அடுத்ததாக நான்கு மீடியம் சைஸ் வெங்காயத்தை நறுக்கி கடாயில் போடவும்
- வெங்காயம் கண்ணாடி பதத்தில் தென்பட்டவுடன் தீயின் வேகத்தைக் குறைத்து அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒன்றரை ஸ்பூன் மிளகாய் தூள் சேர்க்கவும்
- சில நிமிடங்களுக்குப் பிறகு எலுமிச்சை பழத்தின் பாதி சைஸிற்கு புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- அடுப்பை ஆஃப் செய்துவிட்டு அதே சூட்டில் அரைகட்டு கொத்தமல்லியை போட்டு அது சுருங்கும் வரை வதக்கவும்
- சூடு ஆறிய பிறகு 100 மிலி தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டுப் பேஸ்ட் போல் அரைக்கவும்
- அடுத்ததாக ஒரு பேனில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி நான்கு காய்ந்த மிளகாய், கடுகு சேர்த்து வதக்கவும்
- கடுகு பொறிந்தவுடன் அரை ஸ்பூன் பெருங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும்
- அடுப்பை ஆஃப் செய்துவிட்டு இதனை மிக்ஸியில் இருக்கும் பேஸ்ட்டுடன் சேர்த்தால் கடாய் ரொட்டிக்கான ஆந்திரா சட்னி ரெடி.
- தற்போது கடாய் ரொட்டி தயாரிக்க ஒரு கிலோ இட்லி மாவினை எடுத்துக்கொள்ளவும்
- அதில் ஒன்றரை ஸ்பூன் பச்சை மிளகாய், ஒன்றரை ஸ்பூன் இஞ்சி, ஒன்றரை வெங்காயம், 50 கிராம் துருவிய கேரட் ஆகியவற்றை சேர்க்கவும்
- இதன் பிறகு 100 கிராம் அளவிற்கு நன்கு வேகவைத்த உருழைக்கிழங்கை மசித்து இட்லி மாவில் சேர்க்கவும்
- அதன் பிறகு 50 கிராம் ரவை சேர்த்து இவை அனைத்தும் இட்லி மாவில் ஊறுவதற்கு பத்து நிமிடங்கள் இடைவெளிவிட்டு அரை ஸ்பூன் ஆப்ப சோடா சேர்க்கவும்
- பெரும்பாலான வேலை முடிந்துவிட்டது. இப்போது ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு ஒரு சிறிய கரண்டியில் இருமுறை மாவெடுத்து கடாயில் ஊற்றவும்
- அடுத்ததாகக் கடாயை மூடி போட்டு மூடி தீயை குறைத்து மாவின் இருபுறமும் தலா 5 நிமிடங்களுக்குத் தோசை போல் வேக வைக்கவும்.
- மொறுமொறுப்பாக வருவதற்கு மேலும் அரை ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும்
அள்ளவவு தான் காரசாரமான ருசியான கடாய் ரொட்டி மற்றும் ஆந்திரா சட்னி ரெடி.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation