herzindagi
Main ac

Andhra Chicken Fry : சிக்கன் காதலர்களுக்கான சூப்பர் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஃப்ரை

ஆந்திரா ஸ்பெஷல் ரெசிபியில் அடுத்து நாம் ஸ்டைலான சிக்கன் ஃப்ரை. இந்த ஒரு மணி நேர ரெசிபி உங்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை சிறப்பாக்கிடும்.
Editorial
Updated:- 2024-02-24, 09:57 IST

வார விடுமுறை நெருங்கி விட்டாலே அனைவரும் ஞாயிற்றுக்கிழமை எங்கு செல்லலாம், என்ன சமைக்கலாம் என யோசித்துக் கொண்டிருப்போம். நீங்கள் சிக்கனை வரும்பி சாப்பிடுபவராக இருந்தால் இம்முறை ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஃப்ரை சமைத்து பாருங்கள். காரசாரமாகவும் ருசியாகவும் இருக்கும்.

ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஃப்ரை தேவையான பொருட்கள்

 ac

  1. ஒரு கிலோ சிக்கன்
  2. உப்பு 
  3. மஞ்சள் தூள் 
  4. மிளகாய் தூள் 
  5. தனியா 
  6. சீரகம் 
  7. சோம்பு 
  8. மிளகு 
  9. ஏலக்காய் 
  10. கிராம்பு 
  11. பட்டை 
  12. காய்ந்த மிளகாய்
  13. நல்லெண்ணெய் 
  14. வெங்காயம் 
  15. பச்சை மிளகாய் 
  16. கறிவேப்பிலை 
  17. இஞ்சி-பூண்டு பேஸ்ட் 
  18. கொத்தமல்லி 

மேலும் படிங்க பேச்சுலர்களுக்கான கோங்குரா சட்னி ரெசிபி

ஆந்திரா ஸ்டைல் சிக்கன் செய்முறை 

 ac

  • முதலாவதாக பெரிய பாத்திரத்தில் ஒரு கிலோ சிக்கன் போட்டு அதில் ஒரு ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் மஞ்சள் தூள், நான்கு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து நன்கு பிரட்டவும் 
  • அதன் பிறகு 15 நிமிடங்களுக்குச் சிக்கனை அப்படியே ஊறவிடவும்
  • தற்போது ஒரு பேனில் எண்ணெய் ஊற்றாமல் இரண்டரை ஸ்பூன் தனியா, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் மிளகு, மூன்று ஏலக்காய், நான்கு கிராம்பு, இரண்டு சிறிய துண்டு பட்டை, பத்து காய்ந்த மிளகாய் ஆகியவற்றை போட்டு வறுக்கவும்
  • நன்கு வறுபட்டவுடன் பேனை ஆஃப் செய்து விட்டு இதனை ஆற வைக்கவும் 
  • அதன் பிறகு மிக்ஸியில் அனைத்தையும் போட்டு தண்ணீர் இன்றி அரைத்துப் பவுடராக்கி மசாலா தயாரிக்கவும்
  • அடுத்ததாக ஒரு கடாயில் ஆறு ஸ்பூன் ரிஃபைண்ட் எண்ணெய் ஊற்றி அதில் நான்கு மீடியம் சைஸ் வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் 
  • வெங்காயம் தங்க பழுப்பு நிறத்திற்கு மாறியவுடன் கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு ஊறவைத்த சிக்கனை சேர்க்கவும்
  • அடுத்ததாக இரண்டு ஸ்பூன் இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும் 
  • ஐந்து நிமிடங்கள் கழித்து அரைத்து வைத்திருக்கும் மசாலாவிலிருந்து நான்கு ஸ்பூனை சிக்கனில் போடவும்
  • ஐந்து நிமிடங்கள் கழித்து மீதம் வைத்திருக்கும் மசாலாவை சிக்கனில் போட்டு உப்பு சேர்க்கவும் 
  • தற்போது தீயை குறைத்து சிக்கனை 15 நிமிடங்களுக்கு வறுக்கவும்.

மேலும் படிங்க  கோங்குரா புளுசு! இட்லி, தோசைக்கான அசத்தல் காம்போ

இறுதியாகக் கொத்தமல்லி சேர்த்துவிட்டால் சுவையான ருசியான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஃபிரை ரெடி.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]