herzindagi
amla pickle instant quick recipe

Instant Amla Pickle : நெல்லிக்காய் இருக்கா? 15 நிமிஷத்துல ஊறுகாய் ரெடி!

வெயிலில் காய வைக்காமல் உடனடியாக நெல்லிக்காய் ஊறுகாய் செய்ய வேண்டுமா? இப்பதிவில் பகிரப்பட்டுள்ள ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள்…
ANI
Updated:- 2023-05-06, 13:36 IST

நெல்லிக்காயில் நிறைந்துள்ள வைட்டமின் C சத்துக்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகின்றன. நெல்லிக்காயை கொண்டு ஜாம், தேன், நெல்லிக்காய், ஊறுகாய், நெல்லிக்காய் சாதம் என பல்வேறு வித்தியாசமான ரெசிபிகளை செய்யலாம். அதிலும் புளிப்பும் துவர்ப்பும் கலந்த நெல்லிக்காயை கொண்டு ஊறுகாய் செய்தால் படு ஜோராக இருக்கும். வெயிலில் காய வைத்து அதிக நேரம் செலவிடாமல் ஈஸியான முறையில் நெல்லிக்காய் ஊறுகாய் செய்ய கற்றுக்கொள்ளவோம்.

பாரம்பரிய சுவை மாறாமல் நெல்லிக்காய் ஊறுகாயை வெறும் 10 நிமிஷத்தில் சுலபமாக செய்திட முடியும் இந்த இன்ஸ்டன்ட் நெல்லிக்காய் ஊறுகாயை தயிர் சாதத்துடன் வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும். இந்த எளிமையான நெல்லிக்காய் ஊறுகாயை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். இதற்கு தேவையான பொருட்கள் மற்றும் செய் முறையை இப்போது பார்க்கலாம்…

இந்த பதிவும் உதவலாம்: தேங்காய் சேர்க்காத கிராமத்து மட்டன் குழம்பு இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க!

தேவையான பொருட்கள்

fresh amla pickle

  • நெல்லிக்காய் - 7
  • நல்லெண்ணெய் - ¼ கப்
  • கடுகு - 1 டீஸ்பூன்
  • பெருங்காயம் - ¼ டீஸ்பூன்
  • காஷ்மீரி மிளகாய் பொடி - 2 டீஸ்பூன்
  • மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

ஊறுகாய் மசாலாவிற்கு தேவையானவை

  • கடுகு - 2 டீஸ்பூன்
  • வெந்தயம் - 1 டீஸ்பூன்
  • சோம்பு - 1 டீஸ்பூன்

செய்முறை

home made amla pickle recipe

  • கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள நெல்லிக்காயை 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு நெல்லிக்காயின் விதைகளை நீக்கி, முழுமையாக ஆறவிடவும்.
  • நெல்லிக்காய் வேகும் சமயத்தில் ஒரு கடாயில் கடுகு, வெந்தயம் மற்றும் சோம்பு சேர்த்து ஊறுகாய் மசாலாவிற்கு தேவையான பொருட்களை வறுத்துக் கொள்ளவும்.
  • ஆறிய பின் ஊறுகாய் மசாலாவை பொடித்துக் கொள்ளவும்.
  • அடுத்ததாக ஒரு கடாயில் 1/4 கப் அளவிற்கு நல்லெண்ணெய் சேர்க்கவும். இதனுடன் கடுகு மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.
  • கடுகு வெடித்ததும் அடுப்பை அணைத்து நறுக்கி வைத்துள்ள நெல்லிக்காய் துண்டுகளை சேர்க்கவும்.
  • இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
  • இறுதியாக தயாராக வைத்துள்ள ஊறுகாய் மசாலாவை சேர்த்து நன்கு கலக்கவும்.
  • சூடான எண்ணெயுடன் நெல்லிக்காய் மற்றும் மசாலாக்கள் அனைத்தும் நன்கு ஒன்று சேர்ந்து விடும்.
  • இந்த இன்ஸ்டன்ட் நெல்லிக்காய் ஊறுகாய் ரெசிபியை நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

இந்த பதிவும் உதவலாம்: செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை கண்டறிவது எப்படி?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]