herzindagi
articially ripened mangoes

Identify Organic Mango : செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை கண்டறிவது எப்படி?

ரசாயனங்களை கொண்டு பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதை கண்டறிவதற்கான சுலபமான வழிகளை இப்பதிவில் படித்தறிந்து பயன்பெறுங்கள்…
Editorial
Updated:- 2023-05-05, 09:42 IST

கோடை காலம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மாம்பழங்கள் தான். சுவை நிறைந்த இந்த மாம்பழங்களில் சத்துக்களுக்கும் ஏராளம். இருப்பினும் ஒரு சில வியாபாரிகள் அதிக லாபத்திற்காக ரசாயனங்களை கொண்டு மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்து வருகின்றனர். செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம். மாம்பழங்களை வாங்கும் பொழுது கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: தேங்காய் சேர்க்காத கிராமத்து மட்டன் குழம்பு இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க!

தரமான மாம்பழங்களை வாங்குவதற்கு உதவக்கூடிய சில எளிய குறிப்புகளை இப்பதிவில் பார்க்கலாம்…

மாம்பழத்தின் நிறம்

identify natural mangoes

இயற்கையாகவே பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் யாவும் முழுவதுமாக மஞ்சள் நிறத்தில் இருக்காது ஆங்காங்கே லேசான பச்சை நிறத்துடன் இருக்கும். அதேசமயம் ரசாயனங்களைக் கொண்டு பழக்க வைக்கப்பட்ட மாம்பழங்களின் பச்சை நிற புள்ளிகளை பார்க்க முடியும். அதே சமயம் மாம்பழங்கள் சிறிய அளவிலேயே காணப்படும். இதைத் தவிர மாம்பழத்தில் வெள்ளை அல்லது நீல நிறத்தில் அடையாளங்களை பார்த்தாலும் அந்த மாம்பழங்களை நிச்சயமாகவாங்கவே கூடாது.

தண்ணீர் சோதனை

மாம்பழங்களை வாங்கும் பொழுது அதனை ஒரு வாலி தண்ணீரில் போட்டு சோதனை செய்யவும். எந்த மாம்பழங்கள் மூழ்குகின்றன எந்தெந்த மாம்பழங்கள் தண்ணீரின் மேற்பரப்பில் உள்ளன என்பதை சரி பார்க்கவும். தண்ணீரில் மூழ்கும் மாம்பழங்கள் இயற்கையாகவே பழுக்க வைக்கப்பட்டவை. அதேசமயம் மாம்பழம் தண்ணீரில் மூழ்காமல் மேலே மிதந்தால் அவை ரசாயனங்களை கொண்டு பழுக்க வைக்கப்பட்டவை என்று தெரிந்து கொள்ளலாம்.

மாம்பழத்தின் சுவை மற்றும் மணம்

identify artificial mangoes

நல்ல இனிப்பான பழுத்த மாம்பழங்களை சுலபமாக அடையாளம் காணலாம். மாம்பழத்தை வாங்கும்பொழுது லேசாக அழுத்தி பார்க்கவும். பழுத்த மாம்பழங்கள் மென்மையாக இருக்கும். இதுவே ஒரு சில இடங்களில் மாம்பழம் கடினமாக இருந்தால் அவை சரியாக பழுக்கவில்லை அல்லது ரசாயனங்களால் பழுக்க வைக்கப்பட்டவை என்று புரிந்து கொள்ளலாம்.

மாம்பழத்தை முகர்ந்து பார்த்தால் நல்ல இயற்கையான மாம்பழத்தின் மணம் வீச வேண்டும். இதற்கு மாறாக மாம்பழத்தில் ரசாயனங்களின் மணத்தை நுகரந்தால் அல்லது நறுமணமற்றதாக இருந்தால் அவை இயற்கையானவை அல்ல என்று புரிந்து கொள்ளுங்கள்.

இந்த பதிவும் உதவலாம்:தொப்பை கொழுப்பை குறைக்க உதவும் சிறந்த பழச்சாறுகள்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]