herzindagi
image

காலையில் புத்துணர்ச்சியுடன் இருக்க சிறுதானிய காய்கறி தோசையை ட்ரை பண்ணுங்க

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெற வேண்டும் என்றால், வாரத்திற்கு ஒருமுறையாவது காலை உணவிற்கு ஊட்டச்சத்துள்ள சிறுதானிய காய்கறி தோசை செய்து சாப்பிடுங்கள்.
Editorial
Updated:- 2025-08-12, 13:28 IST

நமது உடலை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும் என்றால் ப்ரேக் பாஸ்ட் எனப்படும் காலை உணவை எக்காரணம் கொண்டும் சாப்பிடாமல் இருக்கக்கூடாது. உடலில் உள்ள அனைத்து உடல் உறுப்புகளும் காலை நேரத்தில் தான் இயந்திரம் போன்று செயல்படும். இதை மேலும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும் என்றால் அதற்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளைக் கொடுக்க வேண்டும். இந்த ஊட்டச்சத்துள்ள உணவு பட்டியல்களின் வரிசையில் இன்றைக்கு சிறுதானியங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு செய்யப்படும் தோசையை ட்ரை பண்ணலாம் வாருங்கள்.

மேலும் படிக்க: குழந்தைகள் விரும்பும் கப் கேக்; வீட்டிலேயே சுலபமாக செய்முறை இதோ..

ஊட்டச்சத்துள்ள சிறுதானிய காய்கறி தோசை:

தேவையான பொருட்கள்:  

  • பீட்ரூட் துருவல் - 1 கப்
  • கேரட் துருவல் - 1 கப்
  • கொத்தமல்லி இலை - அரை கப்
  • மிளகாய்- 5
  • மீன் மேக்கர்- 1 கப்
  • வெங்காயம் - 2
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • இஞ்சி - சிறிதளவு
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • உப்பு- தேவைக்கு ஏற்ப
  • தண்ணீர் - சிறிதளவு

மேலும் படிக்க: முந்திரி, பாதாம் போதும்.. வீட்டிலேயே சுவையான ஐஸ்கிரீம் ரெடி; ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக

சிறுதானிய காய்கறி தோசை செய்முறை:

  • காலை உணவிற்கு சிறுதானிய காய்கறி தோசை செய்ய வேண்டும் என்றால் முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் மீன் மேக்கர், இஞ்சி, நறுக்கிய வெங்காயம் மற்றும் மிளகாயை சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • இதை ஒரு பெரிய பாத்திரத்திற்கு மாற்றி அதனுடன் ஒரு கப் பீட்ரூட் துருவல், ஒரு கப் கேரட் துருவல், கொத்தமல்லி இலை, சீரகம், உப்பு சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
  • இதனுடன் ராகி அல்லது தினை மாவை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி தோசை மாவு பததத்திற்கு கலந்துக் கொள்ளவும். தற்போது சிறுதானிய காய்கறி தோசை செய்வதற்கான மாவு ரெடி.

  • இதன் பின்னர் தோசைக்கல்லை சூடாக்கி சிறிய சிறிய தோசையாக ஊற்றி வேக வைத்து எடுத்தால் போதும். ஊட்டச்சத்துள்ள சிறுதானிய காய்கறி தோசை ரெடி.
  • இதற்கு தேங்காய் சட்னி அல்லது தக்காளி தொக்கு வைத்து சாப்பிட்டால் போதும். சுவை வேற லெவலில் இருக்கும்.


காலை உணவின் அவசியம்:

காலை உணவை உட்கொள்ளும் போது நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். மேலும் ரத்தத்தின் அளவை சீராக்கி மூளையின் செயல்பாட்டை சீராக்குகிறது. உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. அதிலும் சிறுதானியங்கள் கொண்டு செய்யப்படும் உணவுகளை உட்கொள்ளும் போது உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சுலபமாக பெற முடியும்.

 Image source- Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]