குழந்தைகள் விரும்பிச்சாப்பிடக்கூடிய உணவுப்பட்டியல்களின் வரிசையில் சாக்லேட்டிற்கு அடுத்தப் படியாக இருப்பது ஐஸ்கிரீம். வெயில் காலங்கள் மட்டுமல்ல குளிர்காலத்திலும் கூட ஐஸ்கிரீம் என்றால் போதும், கொஞ்சம் கூட யோசிக்காமல் அதை சாப்பிட வேண்டும் என்று குழந்தைகள் அடம்பிடிப்பார்கள். அந்தளவிற்கு அதன் சுவை குழந்தைகளைக் கவரக்கூடியதாக உள்ளது. அதிக நேரம் கெடாமல் இருப்பதற்கும் அதன் சுவையை அதிகரிப்பதற்காக பல இராசாயன பொருட்களைக் கொண்டு ஐஸ்கிரீம் தயார் செய்திருப்பார்கள். இவற்றைத் தொடர்ந்து சாப்பிடும் போது உடல் ஆரோக்கியம் கெட்டுவிடும் என்பதை அனைவரும் மறந்து விடுகிறோம்.
ஐஸ்கிரீம்களைச் சாப்பிடுவதால் அனைவருக்கும் உடல் நலம் பாதிக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாடுள்ள குழந்தைகள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றால் குழந்தைகளுக்குப் பிடித்த சுவையில் வீட்டிலேயே சுவையான ஐஸ்கிரீம் செய்யலாம். இதோ அதன் ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக.
மேலும் படிக்க: தேங்காய் சட்னியை இப்படி அரைச்சு பாருங்க; நாள் முழுக்க கெடாமல் இருக்கும்
அப்புறம் ஏன் இன்னும் வெயிட் பண்றீங்க? இப்பவே உங்களது குழந்தைகள் விரும்பிச்சாப்பிடக்கூடிய ஐஸ்கிரீமை வீட்டிலேயே ரெடி பண்ண ஆரம்பிக்கவும். என்ன தான் வீட்டிலேயே ஐஸ்கிரீம் ரெடி செய்தாலும், அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது பல உடல் நல பாதிப்புகள் ஏற்படக்கூடும். எனவே இதை சாப்பிடுவதால் எப்படியெல்லாம் உடல் நலம் பாதிக்கப்படும் என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும். ஐஸ்கிரீம் சாப்பிடுவதை உடனடியாக நிறுத்தி விடவும் முடியாது. அப்படி வாங்கிக்கொடுக்கிறீர்கள் என்றால்? காலை நேரத்தில் மட்டும் வாங்கிக் கொடுப்பது தான் மிகவும் சிறந்தது.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]