தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் கறிவேப்பிலை எண்ணெய் காய்ச்சும் முறை இது தான்

பெண்களின் தலைமுடி வேகமாக வளர வேண்டும் என்றால் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கறிவேப்பிலை எண்ணெய்யை வாரத்திற்கு ஒருமுறையாவது கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
image

நீளமான கூந்தல் எப்போதுமே பெண்களின் அழகை மேலும் மெருகூட்டும். இன்றைக்கு மன அழுத்தம், மாசுபாடு, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் போன்ற பல காரணங்களால் முடி உதிர்தல் பிரச்சனையைப் பெண்கள் சந்திக்கின்றன. இவற்றை சரி செய்ய வேண்டும் என்றால் தலைமுடிக்கு ஆற்றலை அளிக்கும் எண்ணெய்களைக் கட்டாயம் உபயோகிக்க வேண்டும். இந்த வரிசையில் இன்றைக்கு தலைமுடி பிரச்சனையைத் தீர்க்கவும், முடி வேகமாக வளர்வதற்கு உறுதுணையாக இருக்கும் கறிவேப்பிலை எண்ணெய்யை எப்படி தயார் செய்வது? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

தலைமுடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலை:

பெண்களின் தலைமுடி நீளமாக வளர விலையுயர்ந்த எண்ணெய்கள் வாங்குவதற்குப் பதிலாக, அனைத்து வீடுகளிலும் மிகவும் சுலபமாக கிடைக்கும் கறிவேப்பிலையைக் கொண்டு கறிவேப்பிலை எண்ணெய்யை தயார் செய்யவும். கறிவேப்பிலையில் அமினோ அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் அதிகளவில் உள்ளதால் முடியின் நுனி வரை சென்று முடி உதிர்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கின்றது. குறிப்பாக இதில் பீட்டா கரோட்டின் மற்றும் புரத சத்துக்கள் அதிகளவில் உள்ளதால் பெண்களின் தலைமுடி அதிவேகமான வளர்ச்சிப் பெற உதவுகிறது.

முடி வளர்ச்சிக்கு உதவும் கறிவேப்பிலை எண்ணெய்:

தேவையான பொருட்கள்:

  • கறிவேப்பிலை- இரண்டு கைப்பிடி அளவு
  • தேங்காய் எண்ணெய் - 200 கிராம்
  • வெந்தயம் - 2 தேக்கரண்டி
  • நெல்லிக்காய் - 1

தயார் செய்யும் முறை:

  • கறிவேப்பிலை எண்ணெய் தயார் செய்வதற்கு முதலில் கறிவேப்பிலையை நன்கு சுத்தம் செய்துக் கொண்டு நிழலில் காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய்யை ஊற்றிக் காய்ச்ச வேண்டும்.
  • தேங்காய் எண்ணெய் சூடாகிக்கொண்டிருக்கும் போதே அதனுடன் உலர்த்தி வைத்துள்ள கறிவேப்பிலை இலைகள், வெந்தயம் மற்றும் நெல்லிக்காயை லேசாக தட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்கு கொதித்து வந்தவுடன் காய்ச்சி எண்ணெய்யை வடிகட்டினால் போதும். தலைமுடிக்கு வலுசேர்க்கும் கறிவேப்பிலை எண்ணெய் ரெடி.

மேலும் படிக்க:தினமும் சேலை கட்டுவீங்களா? இந்த ஃபேஷன் டிப்ஸ் ட்ரை பண்ணுங்க அழகா இருப்பீங்க

கறிவேப்பிலை எண்ணெய் பயன்படுத்தும் முறை:

மேற்கூறியபடி காய்ச்சி வைத்துள்ள தேங்காய் எண்ணெய்யை வாரத்திற்கு ஒருமுறையாவது தலைமுடியின் வேரிலிருந்து நுனி வரை அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்து வரும் போது கறிவேப்பிலையில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் புரத சத்துக்கள் தலைமுடி வேகமாக வளர்வதற்கு உதவியாக உள்ளது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP