herzindagi
image

Income Tax Bill 2025: மாதம் சம்பளத்தை எதிர்பார்த்து வாழும் நடுத்தர குடும்பங்களுக்கு புதிய மசோதா சொல்வது என்ன?

புதிய வருமான வரி மசோதா 2025 மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டால், அது ஒரு சட்டமாக மக்களுக்கு வெளிவரும். இது மசோதா நிறைவேற்றப்பட்டால் நடுத்தர குடும்பங்களுக்கு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பார்க்கலாம்.
Editorial
Updated:- 2025-08-12, 21:51 IST

புதிய வருமான வரி மசோதா இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய மசோதா 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தில் சில மாற்றங்களை செய்து அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வருமான வரி மசோதா சாதாரண மக்கள் வரி செலுத்தும் செயல்முறையை எளிதாக்கப் போகிறது என்று சொல்லப்படுகிறது. இது வருமான வரி அறிக்கைகளை தாக்கல் செய்யும் மக்களுக்கு எளிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டால், அது ஒரு சட்டமாக மாறும். இந்த மசோதா சாதாரண மக்களுக்கு என்ன கொண்டு வரப்போகிறது என்பதை பார்க்கலாம். 

புதிய வருமான வரி மசோதாவில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்

 

  • புதிய வருமான வரி மசோதா 2025 அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் சாமானிய மக்களுக்கு மிகவும் அளிக்கக்கூடிய பல விஷயங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
  • இந்த மசோதா பல பிரிவுகளாகவும் அட்டவணைகளாகவும் பிரிக்கப்பட்டு, அதன் மொழி எளிமையாக்கப்படும், இதனால் மக்கள் அதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

 

மேலும் படிக்க: தொழில் செய்வதற்கு ரூ 25 லட்சம் தனி நபர் கடன் திட்டத்திற்கு தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை

 

  • இந்த புதிய மசோதவில் சம்பளதாரர்கள் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை. இதனுடன், தனியார் ஓய்வூதியத் திட்டத்தில் மொத்தமாக பணம் எடுப்பதற்கு அரசு ஊழியர்களைப் போலவே விலக்கு அளிக்கப்படும்.
  • காலியாக உள்ள வீடுகளின் மதிப்பிடப்பட்ட வாடகைக்கு வரி இருந்தது. ஆனால் இப்போது அது நீக்கப்பட்டுள்ளது. அதாவது, இப்போது ஒரு கட்டிடம் தற்காலிகமாக காலியாக இருந்தால், வீட்டு உரிமையாளர் அதற்கு எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை.
  • புதிய மசோதாவில், இதுபோன்ற பல அடுக்குகள் மற்றும் விகிதங்கள் மாற்றப்பட்டுள்ளன, இது வரி செலுத்துவோருக்கு பயனளிக்கும். இது சாமானிய மக்களின் வரிகளைக் குறைக்கும்.

new income tax 1

  • இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தாமதமாக வருமான வரி தாக்கல் செய்பவர்களும் வரி திரும்பப் பெறும் வசதியைப் பெறலாம். காலக்கெடுவுக்குப் பிறகு நீங்கள் வருமான வரி (ITR) தாக்கல் செய்திருந்தாலும், பணத்தைத் திரும்பப் பெறுவதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது.

new income tax 2

  • புதிய மசோதாவில், வீட்டுச் சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வருமானத்திற்கு விதிக்கப்படும் வரியிலும் அரசாங்கத்தால் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

 

மேலும் படிக்க: 30 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் மாதந்தோறும் ரூ 5,000 சேமிப்பதற்கான வழிகள்

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]