தொழில் செய்வதற்கு ரூ 25 லட்சம் தனி நபர் கடன் திட்டத்திற்கு தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை

சிறு தொழில், வியாபாரம் தொடங்க தனி நபர்களுக்கு 25 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டத்தை தமிழக பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற தகுதி, விண்ணப்பிக்கும் முறை பற்றி விரிவாக பார்க்கலாம்.
image

தொழில் தொடங்க விருப்பம் அல்லது செய்யும் தொழிலை விரிவுப்படுத்த நினைக்கும் நபர்களுக்கு பண பற்றாக்குறை சிக்கலாக இருக்கும். தொழிலை சிறப்பாக நடத்த திறன் இருந்தும் பணம் இல்லாமல் தவிப்பதை பார்த்திருப்போம். அப்படியான நபர்களுக்கு தமிழக அரசு சிறு தொழில், வியாபாரம் தொடங்க தனி நபர் கடனாக 25 லட்சம் ரூபாய் வழங்கும் திட்டம் தமிழக பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் சார்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கடன் தொகையானது மத்திய அரசின் 85 விழுக்காடு நிதியில் இருந்தும், மாநில அரசின் பத்து விழுக்காடு நிதியில் இருந்து வழங்கப்படுகிறது. ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெற்று மூன்று ஆண்டுகளில் திருப்பி செலுத்துவதாக இருந்தால் ஏழு விழுக்காடு வட்டி மட்டுமே. 15 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்சம் ரூபாய் வரை பெற்று ஆறு ஆண்டுகள்ல் திருப்பி செலுத்துவதாக இருந்தால் எட்டு விழுக்காடு வட்டி மட்டுமே. ஆண், பெண் இரு பாலினத்தவரும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்த தனி நபர் கடன் திட்டத்தின் தகுதி, விண்ணப்ப முறை, தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்கள் பகிரப்பட்டுள்ளன.

தனி நபர் கடன் திட்டம் தகுதிகள்

  • பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினராக இருக்க வேண்டும்.
  • குடும்பத்தின் ஆண்டு வருமானம் மூன்று லட்சம் ரூபாய்க்குள் இருப்பது அவசியம்.
  • தனி நபர் கடன் கோரும் நபரின் வயது : 18 முதல் 60 வரை
  • குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தனி நபர் கடன் விண்ணப்பிக்கும் முறை

  • அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகங்கள்.
  • டாப்செட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tabcedco.tn.gov.in
  • கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்கள்
  • மாவட்ட, மத்திய, நகர கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகிய இடங்களில் விண்ணப்பிக்கலாம்.
tabcedco loan

தனி நபர் கடன் பெற தேவையான ஆவணங்கள்

  • சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ்
  • தொடங்க நினைக்கும் திட்ட அறிக்கை
  • முன்னணியில் உள்ள நிறுவனம் ஒன்றிலிருந்து விலைப்புள்ளி ( ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் வாங்குபவர்களுக்கு மட்டும்.
  • குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, வங்கி கோரும் அடமானத்திற்குரிய ஆவணங்கள்.

இவற்றை விண்ணப்பிக்கும் அரசு அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP