herzindagi
tiffin sambar recipe

No Dal Sambar : பருப்பு வேண்டாம், ஒரு கேரட் இருந்தாலே போதும் அட்டகாசமான டிபன் சாம்பார் செய்திடலாம்

இட்லி தோசைக்கு எப்பவும் சாம்பார் தான் பெஸ்ட் காம்பினேஷன். ஆனாலும் நிச்சயம் இதை உடனடியாக செய்ய முடியாது என்று நினைக்கிறீர்களா…
Editorial
Updated:- 2023-04-07, 10:17 IST

உடனடியாக 10 நிமிடத்தில் சாம்பார் வைக்கலாம், அதுவும் பருப்பு இல்லாமலே! காலை அல்லது இரவு உணவுக்கு சட்னி அரைக்க தேவைப்படும் அதே 10 நிமிஷத்தில் இந்த சுவையான டிபன் சாம்பார் செய்திடலாம்.

வீட்டில் இருக்கக்கூடியே பொருட்களை வைத்து சுலபமாக செய்யக்கூடிய இந்த டிபன் சாம்பார் ரெசிபி அவசர நேரத்திற்கு உங்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும். இதில் பருப்பு சேர்க்கவில்லை என்பதை நீங்கள் சொல்லும் வரை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இதற்கான செய்முறையை இப்போது பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: 90's கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த பாதாம் கீர் ரெசிபி

தேவையான பொருட்கள்

  • சின்ன வெங்காயம் 5-7
  • தக்காளி - 1(சிறியது)
  • கேரட் - 1
  • புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
  • பொட்டுக்கடலை - ஒரு கைப்பிடி அளவு
  • தனியா - ½ டீஸ்பூன்
  • சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் பொடி -¼ டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • தேங்காய் துருவல் - 1 டீஸ்பூன் (விரும்பினால்)
  • கொத்தமல்லி - சிறிதளவு

carrot sambar recipe

தாளிப்பதற்கு

  • கடுகு - 1/2 டீஸ்பூன்
  • வெந்தயம் - ¼ டீஸ்பூன்
  • ஜீரகம் - ¼ டீஸ்பூன்
  • கருவேப்பிலை - சிறிதளவு
  • பெருங்காயம் - 1/4 சிட்டிகை
  • காய்ந்த மிளகாய் 1-2

செய்முறை

sambar without dal

  • முதலில் வெங்காயம, தக்காளி மற்றும் கேரட்டை நறுக்கிக் கொள்ளவும்.
  • இப்போது ஒரு பிரஷர் குக்கரில் நறுக்கிய காய்கறிகளுடன் மஞ்சள் பொடி மற்றும் புளி சேர்த்து வேக விடவும். இரண்டு விசில் வந்த பிறகு அடுப்பை அணைக்கவும். பிரஷர் அடங்கும் வரை காத்திருக்கவும்.
  • ஒரு மிக்ஸர் ஜாரில் பொட்டுக்கடலை, தேங்காய் துருவல், தனியா மற்றும் சாம்பார் பொடி சேர்த்து பொடியாக்கி கொள்ளவும். இந்த பொடியில் தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து கொள்ளவும்.
  • அடுத்ததாக ஒரு மத்தை கொண்டு பிரஷர் குக்கரில் வேக வைத்துள்ள காய்கறி கலவையை நன்கு மசித்து கொள்ளவும்.
  • இதனுடன் கரைத்து வைத்துள்ள பொட்டுகடலையை சேர்க்கவும்.
  • தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து சாம்பாரை கொதிக்க விடவும்.
  • பொட்டுக்கடலையின் பச்சை வாசனை நீங்கி சாம்பார் கொதி வரத் தொடங்கியதும் அடுப்பை அணைக்கவும்.
  • பின்னர் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், சீரகம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
  • தாளிப்பை சாம்பாரில் கலந்து நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.

அட்டகாசமான இந்த டிபன் சாம்பார் இட்லி அல்லது தோசை உடன் பரிமாறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: இரவு உணவுக்கு நல்லா புசுபுசுனு பஞ்சு மாதிரி ராகி பன் தோசை செய்து அசத்துங்க

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]