herzindagi
perfect badam kheer recipe at home

90's கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த பாதாம் கீர் ரெசிபி

90' s கிட்ஸ் என்றாலே ஒரு பெருமிதம் தான். நாம் சாப்பிட்ட உணவுக்கும், அடித்த லூட்டிகளுக்கும் ஈடு இணையே கிடையாது…
Editorial
Updated:- 2023-04-06, 09:46 IST

என்ன தான் கோல்டு காபியும், மில்க் ஷேக்கும் குடித்தாலும் பாதாம் கீர், ரோஸ் மில்க், ரஸ்னா போன்ற பாரம்பரிய 90's கிட்ஸ் பானங்களை மறந்து விட முடியாது. பெரிய பெரிய டிரம்களில் ஊற்றி பரிமாறப்படும் இந்த குளிர்ப்பானங்களை வாங்க சில்லறைகள் இருந்தாலே போதுமானது. விலை மலிவாக இருந்தாலும் உடன்பிறந்தவர்களுடன் பகிர்ந்து குடித்த அந்த ஞாபகங்கள் இன்றும் அழகான புன்னகையை மனதில் வர வைக்கின்றன.

மளிகை பொருட்கள் வாங்கும் போது மிச்சம் காசு இருக்கனும் கடவுளே! என்று வேண்டிய நாட்களும் உண்டு. பாதாம் கீர் ஐ அம்மாவுக்கும் சேர்த்து வாங்கி சென்றால் திட்டு வாங்காமல் தப்பித்துக்கொள்ளலாம் என்று திட்டமிட்ட நாட்களும் உண்டு. நீங்களும் உங்கள் குழந்தை பருவ நாட்களின் பாதாம் கீர் ஐ மிஸ் பண்றிங்களா? அப்போ உடனே இந்த ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள்.

இந்த பதிவும் உதவலாம்: உடல் எடை சட்டுனு குறைய ஓட்ஸ் அடை செய்து சாப்பிடுங்க

தேவையான பொருட்கள்

how to make badam kheer

  • பாதாம் -100கிராம்
  • பால் - 1 லிட்டர்(4 கப்)
  • குங்குமப்பூ - 0.5 கிராம்
  • ஏலக்காய் பொடி - ½.டீஸ்பூன்
  • சர்க்கரை - 8-10 ஸ்பூன்
  • ஜாதிக்காய் பொடி - 1 சிட்டிகை

செய்முறை

easy badam kheer

  • பாதாம் கீர் செய்வதற்கு முதலில் பாதாமை சூடான நீரில் இரண்டு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
  • பின்பு நீரை வடித்து விட்டு பாதாமின் தோலை நீக்கிக் கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸர் ஜாரில் தோல் உரித்த பாதாமுடன் ½ கப் பால் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • இப்போது ஒரு கடாயை சூடாக்கி மீதமுள்ள 3.5 லிட்டர் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
  • பாலுடன் குங்குமப்பூ, ஏலக்காய் பொடி மற்றும் ஜாதிக்காயை துருவி சேர்த்துக் கொள்ளவும்.
  • குங்குமப்பூவுடன் சேர்ந்து பால் மஞ்சள் நிறமாக மாறி பொங்கி வரும் சமயத்தில் அரைத்த பாதாம் விழுதை சேர்க்கவும்.
  • பாதாம் விழுதை சேர்த்த பின் சமைக்க வேண்டிய அவசியம். இல்லை அடுப்பை அணைத்து பாலை முழுவதும் ஆறவிடவும்.
  • சூடு தணிந்தபின் பாதாம் பாலை ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக பரிமாறலாம்.

கோடை வெயிலை சமாளிக்க இது போன்ற பானங்களை நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். பாதாமின் ஊட்டச்சத்துடன் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் இந்த பாதாம் கீர் ரெசிபி உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம்.

இந்த பதிவும் உதவலாம்: இரவு உணவுக்கு நல்லா புசுபுசுனு பஞ்சு மாதிரி ராகி பன் தோசை செய்து அசத்துங்க

இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]