herzindagi
reduce body heat summer drinks

Reduce Body Heat : சூட்டை தணித்து உடலுக்கு குளிர்ச்சி தரும் அற்புத பானங்கள்

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெப்பநிலைக்கு தகுந்தவாறு உணவுகளை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில் உடல் சூட்டை தணிக்கும் பானங்களின் செய்முறையை இப்பதிவில் படித்தறியலாம்&hellip; <div>&nbsp;</div>
Editorial
Updated:- 2023-03-23, 10:41 IST

கோடைகாலத்தில் சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கத்தால் உடலின் ஆற்றல் நிலை குறைந்து இருக்கும். இதனுடன் கோடை காலத்தில் வயிற்றுப்போக்கு, பலவீனம், நீரிழப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டி உள்ளது. இந்த பருவ காலத்தில் குறிப்பாக மதிய வேளையில் உணவின் மீதும் விருப்பம் இருக்காது.

இருப்பினும் கோடையை சமாளிக்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். மேலும் எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள் மற்றும் அதிக காரமான உணவுகளை கோடைகாலத்தில் தவிர்ப்பது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: கொத்தமல்லியை நீண்ட நாட்களுக்கு ஃபிரஷாக வைத்திருப்பது எப்படி?

கோடையில் ஏற்படும் உடல் சூட்டினால் கொப்புளங்கள், வயிற்று வலி போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். இதை தடுக்க உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கக்கூடிய விஷயங்களை சாப்பிட வேண்டும். கோடை காலத்தில் கிடைக்கக்கூடிய தர்பூசணி, வெள்ளரிக்காய், நுங்கு போன்ற குளிர்ச்சி தரும் உணவுகளை சாப்பிடலாம். இதனுடன் உங்கள் உடல் சூட்டை தணிக்க இப்பதிவில் பகிரப்பட்டுள்ள மூன்று பானங்களையும் முயற்சி செய்யலாம்.

லஸ்ஸி

தயிர் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வீட்டில் தயிர் இருந்தால் நொடி பொழுதில் லஸ்ஸி தயாரித்து குடிக்கலாம். இது உங்கள் உடல் சூட்டை தணிக்க உதவும்.

summer drink recipes lassi

தேவையான பொருட்கள்

  • ஃப்ரெஷான தயிர் - 2 கப்
  • தண்ணீர் - 1 கப்
  • சர்க்கரை - 4 டீஸ்பூன்
  • ரோஸ் வாட்டர் - ½ டீஸ்பூன்
  • ஐஸ் கட்டிகள் 6-8

செய்முறை

  • அகலமான ஒரு பாத்திரத்தில் 2 கப் தயிர் சேர்த்து, மத்து அல்லது விஸ்கை கொண்டு தயிரை நன்கு அடித்துக் கொள்ளவும்.
  • தயிர் மென்மையாக மாறியவுடன் இதில் 4 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலக்கவும். இதற்கு நீங்கள் மிக்ஸியையும் பயன்படுத்தலாம்.
  • லஸ்ஸி மிகவும் திக் ஆகவோ அல்லது நீர்க்கவோ இருக்கக் கூடாது.
  • இறுதியாக இதில் ரோஸ் வாட்டர் மற்றும் ஐஸ் கட்டிகள் சேர்த்து கலக்கவும். உடலுக்கு குளிர்ச்சி தரும் இந்த லஸ்ஸியை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

மாங்காய் பானம்

ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்த இந்த மாங்காய் பானம் உங்கள் தாகத்தை தணிப்பதோடு மட்டுமின்றி செரிமானத்தையும் எளிதாக்குகிறது. இது வெப்பமான கோடை நாட்களிலும் உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

summer drink recipes mango

தேவையான பொருட்கள்

  • மாங்காய் - 1
  • தேவையான அளவு தண்ணீர்
  • புதினா இலைகள் - சிறிதளவு
  • சர்க்கரை - 1/4 கப்
  • ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
  • சீரக தூள் - 1/2 டீஸ்பூன்
  • கருப்பு மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
  • உப்பு - 3/4 டீஸ்பூன்
  • ஐஸ் கட்டிகள் 4-5

செய்முறை

  • முதலில் ஒரு பிரஷர் குக்கரில் மாங்காயை வேக வைத்துக் கொள்ளவும். பிறகு தோல் மற்றும் கொட்டையை நீக்கிவிட்டு, சதை பகுதியை மட்டும் தனியாக பிரித்தெடுத்து வைக்கவும்.
  • இதனுடன் புதினா மற்றும் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு சீரகத்தூள், ஏலக்காய் தூள், கருப்பு மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  • ஒரு கிளாஸில் ஒரு டேபிள் ஸ்பூன் அரைத்த மாங்காய் கலவையுடன் தேவையான அளவு ஐஸ் கட்டிகள் மற்றும் தண்ணீர் சேர்த்து பரிமாறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: இனி வீட்டிலேயே எளிமையாக நெய் செய்யலாம்

புதினா டீ

கோடை நாட்களில் இது போன்ற ஆரோக்கியமான புதினா டீ செய்து குடிக்கலாம். இது உங்கள் செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது. புதினாவில் உள்ள கலவைகள் உடல் சூட்டை தணித்து, வயிறு சார்ந்த பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.

summer drink recipes mint tea

தேவையான பொருட்கள்

  • தண்ணீர் - 2 கப்
  • புதினா இலைகள் - 15
  • தேன் - 1 டேபிள் ஸ்பூன்
  • ஐஸ் கட்டிகள் 4-5
  • எலுமிச்சை சாறு - சிறிதளவு

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • இந்த நீரில் புதினா இலைகளை சேர்த்து 4-5 நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்க விடவும். பின் அடுப்பை அணைத்து தண்ணீரை ஆறவிடவும்.
  • சூடு தணிந்த பெண் இதில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். இதை குளிர்ச்சியாக குடிக்க விரும்புபவர்கள் ஐஸ் கட்டிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]