herzindagi
homemade ghee tamil

Homemade Ghee : இனி வீட்டிலேயே எளிமையாக நெய் செய்யலாம்

கடையில் வாங்கும் நெய் இனி தேவையில்லை.இனி வீட்டிலேயே எளிமையாக நெய் செய்யலாம். எப்படி என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
Editorial
Updated:- 2023-03-13, 14:25 IST

இன்றைய காலகட்டத்தில் கடைகளில் விற்கப்படும் எல்லா பொருட்களிலும் கலப்படம் அதிகமாகி விட்டது. அந்த வகையில் நெய்யில் பல வழிகளில் கலப்படம் செய்யப்படுகிறது. இந்த வகை நெய் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்காமல் தீங்கு விளைவிக்கின்றன. எனவே இனி கடைகளில் நெய் வாங்காமல் வீட்டிலேயே சுத்தமான நெய்யை தயார் செய்திடுங்கள். அதற்கான படிகளை இங்கே சொல்கிறோம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாகவே பலரும் வீட்டில் நெய் செய்வது சிரமம் என நினைக்கின்றனர். அதுமட்டுமில்லை சரியாக பதத்தில் வராது எனவும் நினைக்கின்றனர். ஆனால் முறையான பக்குவத்தில் செய்தால் வீட்டிலேயே சுத்தமான நெய் செய்யலாம். எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

இந்த பதிவும் உதவலாம்:பைன்-ஆப்பிள் கேசரி செய்வது எப்படி?

செய்முறை

  • வீட்டிலேயே சுத்தமான நெய் தயாரிக்க கொழுப்பு அதிகம் இருக்கும் க்ரீம் பால்களை சில நாட்களுக்கு சேமிக்க வேண்டும். ஃபிரிட்ஜில் வைத்து இதை சேமிக்கலாம். கெட்டு போகாது.
  • சேமித்த பால் நெய் தயாரிக்கும் அளவுக்கு க்ரீம் போல் நன்கு திக்காக மாறியதும் அதை ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும். இப்போது அதிலிருந்து வெண்ணெய் பிரிந்து உருண்டு வரும் வரை நன்கு கடைய வேண்டும்.
  • க்ரீமிலிருந்து பிரிந்து மேலே உருண்டு வந்த வெண்ணெய்யை மட்டும் தனியாக எடுத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். குறைந்தபட்சம் 2 மணி நேரம் இது ஃப்ரிட்ஜில் இருக்க வேண்டும்.
  • இப்போது அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து பாத்திரம் சூடானதும் குளிர்ச்சியான வெண்ணெய்யை அதில் சேர்க்கவும்.

ghee at home

  • இப்போது வெண்ணெய் உருக ஆரம்பிக்கும். இடை இடையே கரண்டியால் கிளறிக்கொண்டே இருக்கவும். படிப்படியாக நெய் மேலே வர ஆரம்பித்ததும் எரியும் துகள்கள் அதே மேலே படியும்.
  • வீட்டில் தயார் செய்யும் நெய்யின் சுவையை மேலும் அதிகரிக்க அதில் கிராம்பு அல்லது ஏலக்காயையும் சேர்க்கலாம். பாத்திரத்தில் வெண்ணெய் ஒட்டக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். விடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
  • இப்போது நெய்யின் நிறம் வெளிர் பொன்னிறமாக மாறியதும் அதை ஆற வைக்கவும். நெய் ஆறியதும் அதை வடிகட்டி சுத்தமான பாத்திரத்தில் ஊற்றி அதை தேவைக்கேற்ப பயன்படுத்த தொடங்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்:ருசியோ ருசி.. மட்டன் சுக்கா வறுவல்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]