herzindagi
fresh coriander

Coriander Leaves : கொத்தமல்லியை நீண்ட நாட்களுக்கு ஃபிரஷாக வைத்திருப்பது எப்படி?

கொத்தமல்லி தழைகளை நீண்ட நாள் ஃபிரஷாக வைத்திருக்க உதவும் குறிப்புகளை இந்த பதிவில் சொல்ல போகிறோம். இந்த குறிப்புகளை பின்பற்றி இனிமேல் வீட்டில் வாங்கி வைக்கும் கொத்தமல்லியை கிட்டத்தட்ட ஒருவாரத்திற்கு ஃபிரஷாக வைத்து கொள்ளுங்கள்.   
Editorial
Updated:- 2023-03-21, 09:48 IST

கொத்தமல்லி கிட்டத்தட்ட எல்லா வகையான உணவிலும் சேர்க்கப்படும். குழம்பு, பொரியல், ரசம் ,சாம்பார் என தென்னிந்திய உணவுகளில் கடைசியாக கொத்தமல்லி தூவும் போது கிடைக்கும் மணமும், ருசியும் அலாதியானது. அதே நேரம் கொத்தமல்லி தழைகள் சீக்கிரத்தில் பழுத்து விடுவதால் பெரும்பாலான வீடுகளில் 2 நாட்களுக்கு மேல் கொத்தமல்லி ஃபிரஷாக இருப்பதில்லை. எனவே கொத்தமல்லி தழைகளை நீண்ட நாள் ஃபிரஷாக வைத்திருக்க உதவும் குறிப்புகளை இந்த பதிவில் சொல்ல போகிறோம்.

பிளாஸ்டிக் பை

கொத்தமல்லியை நன்கு அலசி, தண்ணீர் இல்லாமல் உலர்த்தி கொள்ளவும். அதை ஒரு டிஷ்யூ பேப்பரில் வைத்து மடித்து பிளாஸ்டிக் பையில் போட்டு வைக்கவும். இப்படி செய்தால் கொத்தமல்லி கட்டு 2 வாரங்களுக்கு அப்படியே ஃபிரஷாக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம்:வீட்டில் வீசும் மீன் வாடையை விரட்டுவது எப்படி?

தண்ணீரில் வையுங்கள்

ஒரு பாத்திரத்தில் பாதியளவு தண்ணீரை நிரப்பி அதில் கொத்தமல்லி தழைகளை போட்டு கிச்சனில் வைக்கவும். இப்படி செய்வதன் மூலம் ஒரு வாரம் வரை கொத்தமல்லியை ஃபிரஷாக வைத்திருக்கலாம்.

ஃப்ரிட்ஜில் வையுங்கள்

கொத்தமல்லியை சுத்தமாக கழுவி தண்ணீர் இல்லாமல் உலர்த்தி அதை சிறிய துணி அல்லது கைக்குட்டையில் வைத்து சுருட்டவும். இதை அப்படியே இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைக்கவும். மறுநாள் காலை கொத்தமல்லியை வெளியே எடுத்து அதை நறுக்கி காற்று புகாத கன்டெய்னரில் போட்டு ஃப்ரீசரில் வைக்கவும்.

fresh coriande leavesr

மஸ்லின் துணியை பயன்படுத்துங்கள்

கொத்தமல்லியை சுத்தமாக கழுவி தண்ணீர் இல்லாமல் உலர்த்தவும். பின்பு அதன் தண்டை நீக்கிவிட்டு தழைகளை மட்டும் மஸ்லின் துணியில் போட்டு மடித்து வைக்கவும். இப்படி பராமரித்தால் 20-25 நாட்களுக்கு கொத்தமல்லி ஃபிரஷாகவே இருக்கும்.

டிஷ்யூ பேப்பரில் வையுங்கள்

கொத்தமல்லியை சுத்தமாக அலசி தண்ணீர் இல்லாமல் உலர்த்தி எடுத்து கொள்ளவும். பின்பு கொத்தமல்லியை டிஷ்யூ பேப்பர் மேல் பரப்பி காற்று புகாத டப்பாவில் அதை அப்படியே வைத்து மூடவும். இப்படி செய்தால் கொத்தமல்லி நீண்ட நாட்களுக்கு ஃபிரஷாக இருக்கும்.

கொத்தமல்லியை பராமரிக்கும் முறை

கொத்தமல்லியை வெட்டி பாலிதீன் அல்லது பிளாஸ்டிக் பைகளில் போட்டு வைக்கவும். இதனால் கொத்தமல்லி நீண்ட நாட்களுக்கு ஃபிரஷாக இருக்கும்.

ஃப்ரிட்ஜில் வைத்து பராமரிக்கும் முறை

கொத்தமல்லியை 2-3 முறை தண்ணீரில் அலசி உலர வைக்கவும். பின்பு அதை டிஷ்யூ பேப்பரில் வைத்து சுருட்டி காற்று புகாத டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும். சமையலுக்கு மிகவும் பயன்படும் கொத்தமல்லி தழைகளை நீண்ட நாட்களுக்கு ஃபிரஷாக வைத்திருக்க நீங்களும் இந்த டிப்ஸ்களை முயற்சி செய்து பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்:இனி வீட்டிலேயே எளிமையாக நெய் செய்யலாம்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]