herzindagi
fish smell tips tamil

fish smell : வீட்டில் வீசும் மீன் வாடையை விரட்டுவது எப்படி?

மீன் சமைக்கும் நாளில் வீடு முழுவதும் வீசும் மீன் வாடையை எப்படி விரட்டுவது? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 
Editorial
Updated:- 2023-02-19, 10:29 IST

வீட்டில் இருக்கும் சமையலறை மிக மிக முக்கியமான ஒன்று. நாம் அன்றாடம் சமைக்கும் உணவுகளின் வாசனை சமையலறை முழுவதும் சுற்றி சுற்றி வரும். அதிலும் குறிப்பாக அசைவ உணவுகளை சமைக்கும் போது மறுநாள் வரையிலும் அந்த வாசனை கிச்சனில் இருக்கும். குறிப்பாக மீன் குழம்பு, மீன் வறுவல் பற்றி கேட்கவே வேண்டாம். மீன் அலசுவது தொடங்கி அதை சமைப்பது வரை மீன் வாடை கிச்சன், சிங்க் என வீட்டு முழுவதும் பரவி விடும். அதை எப்படி நீக்குவது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

பேக்கிங் சோடா

கிச்சனில் வீசும் எல்லாவிதமான வாசனையை விரட்ட பேக்கிங் சோடாவை எளிமையாக பயன்படுத்தலாம். பாத்திரம் தொடங்கி, ஃபிரிட்ஜ், பாத்திரம் கழுவும் சிங்க் என எந்த இடத்தில் மீன் வாடை அடித்தாலும் அதை விரட்ட பேக்கிங் சோடா போதும்.

fish smell from fridge

பயன்படுத்தும் முறை

  • முதலில் 2-4 லிட்டர் தண்ணீரை சூடுப்படுத்தவும். இப்போது தண்ணீரில் 3-4 டீஸ்பூன் சமையல் சோடா மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
  • பிறகு, இந்த தண்ணீரில் மீன் சமைத்த பாத்திரங்கள், உணவு சாப்பிட்ட பாத்திரங்கள் ஆகியவற்றை போட்டு ஊற வைக்கவும்.
  • 15 நிமிடங்களுக்குப் பிறகு, பாத்திரங்களை எடுத்து வழக்கம் போல் சோப்பு போட்டு கழுவி எடுக்கவும்.
  • இப்படி செய்தால் பாத்திரத்தில் வீட்டு முழுவதும் பரவும் மீன் வாடை எளிதில் நீங்கும்.

இந்த பதிவும் உதவலாம்:வீட்டில் நெய் இல்லையா? அதற்கு பதிலான சிறந்த மாற்று பொருட்கள் இவை தான்

ஃபிரிட்ஜில் வீசும் மீன் வாடையை விரட்டும் முறை

  • முதலில் ஃபிரிட்ஜில் உள்ள அனைத்து பொருட்களையும் வெளியே எடுக்கவும்.
  • பேக்கிங் சோடா மற்றும் வினிகரை 1-2 லிட்டர் தண்ணீரில் கலந்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
  • இப்போது கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி ஃபிரிட்ஜில் தெளித்து சுமார் 10 நிமிடங்கள் விடவும்.
  • 10 நிமிடங்களுக்குப் பிறகு, ஃபிரிட்ஜை சுத்தமான துணியால் துடைக்க எடுக்கவும்.
  • இப்படி செய்வதால் மீன் வாடை நீங்கி நல்ல மணம் வீச தொடங்கும்.

இந்த பதிவும் உதவலாம்:முட்டைகள் கெட்டு போவதை தடுக்க சூப்பரான டிப்ஸ்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]