herzindagi
eggs tips tamil

Eggs Storage tips in Tamil: முட்டைகள் கெட்டு போவதை தடுக்க சூப்பரான டிப்ஸ்

குளிர்காலத்தில் கிச்சனில் இருக்கும் முட்டைகள் சீக்கிரத்தில் கெட்டு போகாமல் நீண்ட நாட்கள் இருக்க இந்த வழிகளை பின்பற்றவும். 
Editorial
Updated:- 2023-02-03, 09:53 IST

முட்டைகளை நீண்ட நாட்களுக்கு பராமரிப்பது எப்படி?

வாரத்தில் 7 நாட்களும் முட்டை சாப்பிடுவது நல்லது என அறிவுருத்தப்படுகிறது. பலர், மற்ற நாட்களை விடவும் குளிர்காலங்களில் முட்டைகளை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். பெரும்பாலான மக்கள் தினமும் காலை நேரத்தில் அல்லது மதிய உணவில் முட்டைகளை சேர்த்து கொள்கின்றனர்.

முட்டைகளை அதிகம் விரும்பி உண்பதால் பெரும்பாலானோர் குளிர்காலத்தில் 2-3 முட்டை ட்ரேக்களை ஒரே நேரத்தில் வாங்கி வீட்டில் அடுக்கி கொள்வார்கள். இப்படி செய்தால் அடிக்கடி கடைக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது, மொத்தமாக வாங்கும் போது பணமும் மிச்சமாகும் என நினைக்கின்றனர். ஆனால் இப்படி மொத்தமாக வாங்கி வைக்கும் போது முட்டை கெட்டு போகவும் வாய்ப்புண்டு.

அத்தகைய சூழ்நிலையில் குளிர்காலத்தில் கிச்சனில் இருக்கும் முட்டைகள் கெட்டுப்போகாமல் நீண்ட நாட்களுக்கு பராமரிக்க என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். முட்டைகளை முறையாக பராமரிப்பது எப்படி என்ற டிப்ஸ்களை இதில் சொல்ல போகிறோம். படித்து பயனடையுங்கள்.

நினைவில் வைத்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

  • முட்டைகளை நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பாக சேமித்து வைப்பது பெரிய விஷயமல்ல ஆனால் முட்டைகளை சேமிப்பதற்கு முன் இந்த விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும்.
  • முட்டையை வாங்குவதற்கு முன், காதுக்கு அருகில் வைத்து லேசாக குலுக்கி பார்க்க வேண்டும். உள்ளே வெடி சத்தம் கேட்டால் முட்டை கெட்டுப்போக வாய்ப்புண்டு.
  • கடையில் இருந்து முட்டையை வாங்கி வந்த பின்பு அதை குளிர்ந்த நீரில் போடவும். முட்டை நீருக்குள் மூழ்கினால் அது நல்ல முட்டை. ஒருவேளை முட்டைகள் நீருக்கு மேலே மிதக்க ஆரம்பித்தால் அந்த முட்டைகள் கெட்டுப்போகக்கூடும்.

இந்த பதிவும் உதவலாம்:உங்கள் வீட்டு பிரிட்ஜ் எப்போது கெட்டு போகும் தெரியுமா?

  • முட்டையை எடை போட்டு வாங்க வேண்டும். ஒரு முட்டை சாதாரண முட்டையின் எடையை விட குறைவாக இருந்தால், அதை வாங்குவதற்கு முன் நீங்கள் கவனமாக இருப்பது நல்லது.

முட்டைகளை நீண்ட நாட்களுக்கு பராமரிக்க உதவும் குறிப்புகள்

சணல் பை

குளிர்காலத்தில் முட்டைகளை நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பாக சேமிப்பதற்கு சணல் மூலம் செய்யப்பட்ட பைகளே சிறந்தது. இதற்கு முட்டையை அட்டைப்பெட்டியில் போட்டு அதை சணல் பையில் வைத்து மூடி சமதளமான இடத்தில் வைக்கவும். இதனால் முட்டைகள் சூடாக இருப்பதோடு, நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும். சிலர் முட்டைகளை பிளாஸ்டிக் பை மற்றும் அல்லது பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைப்பார்கள் . அது தவறான முறையாகும்.

eggs inside

பானை

குளிர்காலத்தில் முட்டைகள் கெட்டு போகாமல் இருக்க பானையில் வைத்து பராமரிக்கலாம். இதற்கு, ஒரு பெரிய பானையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் காய்ந்த புல்லை போட்டு சமமாக செய்து எல்லா முட்டைகளையும் அதன் உள்ளே வைத்து விடவும். முட்டைகளை வைத்த பிறகு அதன் மேல் மீண்டும் காய்ந்த புல்லை போட்டு இறுதியில் பானையை துணி அல்லது தட்டு போட்டு மூடி வைக்கவும். இப்படி செய்தால் ஒரு மாதத்திற்கு மேல் முட்டைகள் கெட்டுப்போவாது.

மினரல் ஆயில்

மினரல் ஆயிலை பயன்படுத்துவது குளிர்காலத்தில் முட்டைகளை நீண்ட நாட்களுக்கு பராமரிக்க உதவுகிறது. இதற்கு முதலில் அனைத்து முட்டைகளிலும் மினரல் ஆயில் தடவவும். பின்பு அனைத்து முட்டைகளையும் சிறிது நேரம் வெயிலில் வைத்து, அதனை அட்டைப்பெட்டியில் போட்டு சமையலறையில் வைக்கவும். இதனால் ஒரு மாதத்திற்கு மேல் முட்டைகள் கெட்டுப்போவதில்லை.

இந்த பதிவும் உதவலாம்:வீட்டில் நெய் இல்லையா? அதற்கு பதிலான சிறந்த மாற்று பொருட்கள் இவை தான்

நினைவில் வைத்து கொள்ளவும்

  • நீங்கள் குளிர்காலத்தில் ஃப்ரிட்ஜில் வைத்தும் முட்டைகளை பராமரிக்கலாம். ஆனால் அட்டைப்பெட்டியில் வைத்து தான் முட்டைகளை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.
  • முட்டைகளை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது அமிலம் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளான எலுமிச்சை, வெங்காயம் போன்றவற்றை அட்டைப்பெட்டியின் மேல் வைப்பதைத் தவிர்க்கவும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்

Images Credit: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]