சில நேரங்களில் நாம் செய்யும் சிறு தவறு பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். வீட்டில் இருக்கும் ஃபிரிட்ஜ் அடிக்கடி பழுதடைந்து விடுகிறதா? என்ன காரணத்தினால் இதுப்போல் நடக்கிறது? என்பது கூடப் பலருக்கும் தெரியாது. எனவே இந்த பதிவில் ஃபிரிட்ஜ் அடிக்கடி பழுதடைவதற்கான காரணம் மற்றும் அதை சரிசெய்யும் வழிமுறைகளைப் பற்றி விரிவாகப் பார்க்கப் போகிறோம்.
பல சமயங்களில் ஃபிரிட்ஜிக்குள் ஏதாவது கொட்டி விட்டால் அதை நாம் முறையாக சுத்தம் செய்வதில்லை. ஃபிரிட்ஜை முறையாக சுத்தம் செய்வது மிகவும் முக்கியம். இதுப் போன்ற நேரங்களில் ஃபிரிட்ஜில் பூஞ்சைகள் வரத் தொடங்கி விலையுயர்ந்த ஃபிரிட்ஜ் சில நிமிடங்களிலே பழுதடைகிறது. இதன் உண்மையான காரணம் தெரியாமல் உடனே நிறுவனத்திடம் நாம் புகார் அளித்து விடுகிறோம். இந்த விஷயத்தில் தவறு நம்முடையது.
சில நேரங்களில் தேவைக்கு அதிகமாக நிறைய பொருட்களை ஃபிரிட்ஜில் வைத்துப் பராமரிப்போம். இவ்வாறு நிறைய பொருட்களை நிரப்பி வைப்பதால் ஃபிரிட்ஜ் பழுதடைகிறது. எனவே ஃபிரிட்ஜை முறையாகப் பராமரிக்க, நீங்கள் இந்த விஷயத்தை கவனித்தில் கொள்ளவும்.
இந்த பதிவும் உதவலாம்: உங்கள் வீட்டு ஃபிரிட்ஜ் நீடித்து உழைக்க ஐந்து எளிய டிப்ஸ்
பரபரப்பாக சமைக்கும் போது சில சமயங்களில் ஃபிரிட்ஜில் இருக்கும் பொருட்களை எடுப்பதற்காக அதன் கதவைத் திறந்தே வைத்திருப்போம். இது தவறான செயல். இப்படி நீண்ட நேரம் ஃபிரிட்ஜின் கதவைத் திறந்து வைத்தால் அது பழுதடைய வாய்ப்புள்ளது. எனவே ஃபிரிட்ஜை பழுதுபார்ப்பதில் பணத்தை வீணாக்க விரும்பாதவர்கள், இந்த விஷயத்தில் சற்று கவனமாக இருக்கவும்.
நீங்கள் வெளியே செல்லும்போது ஃபிரிட்ஜை ஆஃப் செய்துவிட்டு செல்வதும் தவறு. இப்படி அடிக்கடி ஆஃப் செய்து விட்டுச் செல்வதால் ஃபிரிட்ஜ் பழுதடையலாம். மின்சாரத்தை மிச்சப்படுத்துவதாக நினைத்துப் பெரிய செலவில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.
எனவே இந்த விஷயங்களை மனதில் கொண்டு உங்கள் வீட்டு ஃபிரிட்ஜை முறையாகப் பராமரியுங்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]