herzindagi
fridge cleaning big

உங்கள் வீட்டு ஃபிரிட்ஜ் நீடித்து உழைக்க ஐந்து எளிய டிப்ஸ்

இந்த பதிவின் மூலமாக நம் வீட்டு ஃபிரிட்ஜை முறையாக பராமரித்து பாதுகாக்க என்னவெல்லாம் எளிய வழிகள் உள்ளது என்பதை காண்போம்.
Editorial
Updated:- 2022-12-05, 10:22 IST

ஃபிரிட்ஜை பராமரிக்க சிறந்த வழிகள்: நம் வீட்டு ஃபிரிட்ஜை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். சில சமயம், நாம் வைக்கும் காய்கறிகள் கீழே விழுந்து கிடக்கும். இதனால், ஃபிரிட்ஜ் உள்ளே பிசுபிசுவென இருப்பதையும் பார்த்திருப்பீர்கள்.

ஃபிரிட்ஜை சுத்தம் செய்யும்போது மிகுந்த கவனம் வேண்டும். நம்முடைய அலட்சிய போக்கால், ஃபிரிட்ஜ் உள்ளே நீர் தேங்கவும் வாய்ப்புள்ளது. இதுகுறித்த பராமரிப்பு பதிவு தான் இது.

ஃபிரிட்ஜை முறையாக பராமரிக்க எளிய வழிகள்

பொருட்களை அப்புறப்படுத்தவும்

fridge cleaning

  • பொருட்களை வெளியில் எடுக்காமல் ஃபிரிட்ஜை பலரும் சுத்தம் செய்கின்றனர்
  • அத்தகைய சூழலில், ஃபிரிட்ஜின் சில பகுதிகள் மட்டுமே சுத்தம் அடைகின்றன. பல பகுதிகள் அழுக்கு படிந்தே காணப்படுகின்றன. எனவே, எப்போது ஃபிரிட்ஜை சுத்தம் செய்தாலும், அதிலுள்ள பொருட்களை முதலில் வெளியில் எடுக்க வேண்டும்

சுடுதண்ணீரை பயன்படுத்தவும்

fridge cleaning

  • பொருட்களை அப்புறப்படுத்திய உடன் நமக்கு தேவையானது வெதுவெதுப்பான நீரும், சுத்தமான துணியும்
  • ஒரு துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து, ஃபிரிட்ஜை துடைக்கவும்
  • அழுக்கு மிகுந்த ஆழத்தில் இருந்தால், துணியை அசைத்தபடி இருக்கவும்
  • இப்படி செய்வதனால், ஃபிரிட்ஜில் உள்ள அழுக்கு துணியில் ஒட்டிக்கொள்ளும்

ஃபிரிட்ஜை பளபளப்பாக்கவும்

fridge cleaning

  • வெதுவெதுப்பான நீரை பயன்படுத்துவதால் அழுக்கு வெளியேறும். அதற்கு பிறகு, ஃபிரிட்ஜில் பயன்படுத்தக்கூடிய கரைசல் கொண்டு சுத்தம் செய்யவும்
  • இதற்காக மார்க்கெட் செல்ல வேண்டிய அவசியமில்லை. இதனை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். இதற்காக நமக்கு தேவையானது, 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவும், 1 டீஸ்பூன் டிடெர்ஜென்ட்டும் தான்
  • இவற்றை கலந்து 1 கப் தண்ணீரில் ஊற்றிக்கொள்ளவும்.
  • இப்போது இந்த கரைசலை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றிக்கொள்ளவும். பிறகு, ஃபிரிட்ஜின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் தெளிக்கவும். அவ்வளவு தான், இவ்வாறு செய்வதன் மூலமாக ஃபிரிட்ஜ் மேலும் சுத்தம் அடையும்.

ஃபிரிட்ஜ் கதவை சுத்தம் செய்வது எப்படி?

fridge cleaning

  • பெரும்பாலான அழுக்கு ஃபிரிட்ஜ் கதவில் தான் இருக்கும்
  • இந்த அழுக்கை போக்க வெள்ளை வினிகர் பயன்படுத்தலாம்
  • இதனை 3 முதல் 4 டீஸ்பூன் எடுத்து ஒரு கப் தண்ணீரில் கலந்துக்கொள்ளவும். பிறகு ஒரு துணி கொண்டு நனைத்து ஃபிரிட்ஜ் கதவில் துடைக்கவும்.

புதினா இலைகளை தூவவும்

  • இவற்றை செய்து முடித்தவுடன் நமது ஃபிரிட்ஜ் சுத்தமாக இருக்கும்
  • பிறகு, பொருட்களை நாம் உள்ளே வைக்கலாம். ஃபிரிட்ஜில் வாசனை மணக்க புதினா இலைகளை போட்டு வைக்கலாம்

அவ்வளவு தான், இதன் பிறகு ஃபிரிட்ஜ் தினமும் சுத்தமாக காணப்படும். அதோடு, துற்நாற்றம் வீசாமல் இருக்கவும் செய்யும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]