அது பராத்தா அல்லது பருப்பு தால் அல்லது ரொட்டி எதுவாக இருந்தாலும் அதனுடன் நெய்யை சேர்த்து சாப்பிடவே நாம் விரும்புகிறோம்.. உங்களுக்கும் நெய் பிடிக்கலாம். சிலருக்கு நெய்யை அளவுக்கு அதிகமாக பிடிக்கும். அவர்கள் மூன்று வேளையும் நெய்யுடன் ரொட்டியை வைத்து சாப்பிடுவார்கள். பருப்பு தாலில் நெய்யை ஊற்றி உண்பார்கள்.
ஆனால் விலை அதிகமாகிவிட்டதால் எல்லோராலும் நெய்யை தினமும் சாப்பிட முடியாது. எனவே, நெய்க்கு பதிலாக நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில பொருட்களை பற்றி இன்று உங்களுக்கு சொல்ல போகிறோம்.
பராத்தா, பருப்பு தால் அல்லது ரொட்டி என எதுவாக இருந்தாலும் அதனுடன் வெண்ணெயை சேர்த்து சாப்பிடுவது நமக்கு பிடிக்கும். நீங்கள் நெய்யை பயன்படுத்த விரும்பவில்லை என்றால் அதற்கு சிறந்த மாற்றுப்பொருள் வெண்ணெய். தானியங்களுடன் வெண்ணெயை சேர்த்து பராத்தாவும் செய்யலாம். சிலர் வெண்ணெயை அப்படியே சாப்பிட விரும்புவார்கள்.
நெய்க்கு மற்றொரு மாற்று தேங்காய் எண்ணெய். பல வீடுகளில் சமையலுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இது கூந்தலுக்கு மட்டுமல்ல நமது ஆரோக்கியத்திற்கும் நல்லது. இது நமது வளர்சிதை மாற்றத்தை சரியாக வைத்திருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. எடையை குறைக்கவும் உதவுகிறது. நீங்களும் சமையலுக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்துங்கள்.
இந்த பதிவும் உதவலாம்:குளிர்காலத்தில் பாலக் பன்னீரை சாப்பிடலாமா? கூடாதா?
ஆலிவ் ஆயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை சீராக வைத்திருக்கிறது, உடல் எடையை குறைப்பதற்கும் உதவுகிறது. இதயம் மற்றும் சருமத்திற்கு நிறைய பலன்களை தருகிறது. சமையலுக்கும் ஆலிவ் ஆயிலை பயன்படுத்தலாம்.
பெரும்பாலும் நாம் சாப்பிட செய்வது பராத்தாக்கள் அல்லது நெய் ரொட்டிகள். ஆனால் எல்லாவற்றிலும் நெய்யை சேர்ப்பது கடினம், எனவே நீங்கள் விரும்பினால் நெய்க்கு பதிலாக மசித்த வாழைப்பழத்தை பயன்படுத்தலாம். வாழைப்பழம் இனிப்பு சுவையையுடன் சேர்த்து பல நன்மைகளையும் வழங்குகிறது. சீக்கிரத்தில் வாழைப்பழம் கருப்பாக மாறிவிடும் என்பதால், நீங்கள் விரும்பும் நேரத்தில் வாழைப்பழத்தை மசித்து பயன்படுத்துங்கள்.
இந்த பதிவும் உதவலாம்:தனியா தூளுக்கு பதிலாக இவற்றையும் பயன்படுத்தலாம்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]