Propose Day 2024: காதலியிடம் எப்படி ப்ரோபோஸ் பண்ணலாம்?

காதலர் வாரத்தின் இரண்டாம் நாளான ப்ரோபோஸ் டே அன்று காதல் உறவிடம் காதலை தெரிவித்து அதை உறுதிபடுத்துங்கள்...

 
propose day  valentine

ப்ரோபோஸ் டே 2024 : உலகெங்கும் அன்பை பரப்பும் காதல் பறவைகளின் கவனத்திற்கு! காதலர் வாரத்தில் ரோஸ் டே-விற்கு அடுத்தபடியாக ப்ரோபோஸ் டே கொண்டாடப்படுகிறது. இந்தத் தினத்தில் உங்கள் அன்புக்குரியவரிடம் காதலை வெளிப்படுத்தி அதை உறுதி செய்துகொள்ளுங்கள். ப்ரோபோஸ் டே பின்னணி உள்ளிட்ட முழு விவரம் இங்கே…

காதலர் தினத்தை முன்னிட்டு வரும் காதலர் வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் உங்கள் துணை அல்லது காதல் உறவிடம் வித்தியாசமான முறையில் அன்பு மற்றும் பாசத்தை வெளிப்படுத்தலாம். உண்மையான நேசம் கொண்ட நபர்கள் தங்கள் உறவை அடுத்தக்கட்டத்தை நோக்கி கொண்டு செல்ல இந்த நாளை பயன்படுத்துகிறார்கள். அதிகாரப்பூர்வமாகக் காதலை உறுதிப்படுத்திக் கொள்ள இதை அற்புதமான வாய்ப்பாகவும் பயன்படுத்தலாம்.

valentine week propose day

ப்ரோபோஸ் டே

காதலர் வாரத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 8 அன்று ப்ரோபோஸ் டே கொண்டாடப்படுகிறது. ரோஸ் தினத்தைத் தொடர்ந்து காதலர் வாரத்தின் இரண்டாவது நாளில் உங்கள் அன்புக்குரியவரிடம் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்த ப்ரோபோஸ் டே கொண்டாடப்படுகிறது.

மேலும் படிங்ககாதலிக்கு அனுப்ப வேண்டிய ரோஜா தின கவிதைகள்!

ப்ரோபோஸ் டே வரலாறு:

ப்ரோபோஸ் டே என்பது காதலர் வார கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இது பல நூற்றாண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காதலர் வாரத்தின் தொடக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நாட்கள் மேற்கத்திய நாடுகளில் தொடங்கி இந்தியா உட்பட மற்ற நாடுகளுக்கும் பரவியதாக நம்பப்படுகிறது. ப்ரோபோஸ் டே-விற்கான தொடக்கம் மற்றும் அதன் வரலாறு குறித்து போதுமான தரவுகள் இல்லை.

எனினும் 1477ஆம் ஆண்டில் ஆஸ்திரிய ஆர்ச்டியூக் மாக்சிமிலியன் வைர மோதிரம் ஒன்றை மேரி ஆஃப் பர்கண்டிக்கு வழங்கி ப்ரோபோஸ் செய்ததாகக் கூறப்படுகிறது. இதே போல 1816ல் இளவரசி சார்லோட் தனது நிச்சயதார்த்தத்தின் போது வருங்கால கணவருக்கு பரிசு ஒன்றை வழங்கி ப்ரோபோஸ் செய்ததாக வரலாறு உண்டு.

மேலும் படிங்ககாதலிக்கு சிவப்பு ரோஜா கொடுப்பதன் ரகசியம்!

இதைத் தொடர்ந்து காதலர் வாரத்தின் இரண்டாவது நாளில் ப்ரோபோஸ் டே ஒரு கொண்டாட்டமாக மாறியது. ப்ரோபோஸ் டே கொண்டாட்டம் சமீபத்திய ஆண்டுகளில் உலகமெங்கும் பிரபலமாகி வருகிறது. காதல் ஜோடிகள் மட்டுமல்ல தம்பதிகளும் பரவலாகக் இதை கடைப்பிடிக்கப்படுகின்றன.

ப்ரோபோஸ் டே முக்கியத்துவம்:

ப்ரோபோஸ் டே என்பது காதல் உறவில் இருக்கும் நபர்களுக்கு ஒரு முக்கியமான நாளாகும். இந்த நாள் உறவுகளின் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது மற்றும் இரு நபர்களுக்கு இடையே உள்ள அர்ப்பணிப்பு மற்றும் அன்பின் அடையாளமாகும். இந்த நாளில் பலர் தங்கள் காதல் உறவுக்கு சிறப்பான மற்றும் மறக்கமுடியாத வழியில் ப்ரோபோஸ் செய்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சிறப்பு பரிசு வழங்குவதன் மூலமோ அல்லது ஒரு காதல் பயணத்தைத் திட்டமிடுவதன் மூலமோ அன்பை வெளிப்படுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபடலாம்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP