ஆண்களிடம் இருக்கும் பணம் குடும்பத்தின் தேவைகளுக்கானது தான்.அதுவே பெண்களிடம் பணம் இருந்தால் குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவது முதல் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரின் அடிப்படைத் தேவைகளையும் எவ்வித தடையும் இன்றி செய்வதற்கு உறுதுணையாக இருக்கும். ஆண்களை விட பெண்கள் தான் நிதிகளை நிர்வகிப்பதில் தனித்துவமான நிலையில் இருப்பார்கள்.
வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் எப்படியாவது சிறிய தொகையை சேமிப்பில் செலுத்துவார்கள். இல்லத்தரசிகள் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் சில குடும்ப சூழல் அவர்களைக் கட்டிப்போட்டுவிடும். இதையும் தாண்டி நீங்கள் எப்படி சேமிக்கிறீர்கள்? என்பதைப் பொறுத்து தான் உங்களின் பொருளாதார சுதந்திரம் மேம்படும். இதுவரை எவ்வித சேமிப்பிலும் நீங்கள் ஈடுபடவில்லையென்றால் இதோ உங்களுக்காகவே சில ஐடியாக்களைப் பகிர்கிறோம்.
மேலும் படிக்க: பெண்ணுரிமை தான் நாட்டின் முன்னேற்றம் என குரல் கொடுத்த தலைவர்கள்!
பல தலைமுறைகளாக பெண்களிடம் உள்ள சிறப்பான சேமிப்புத்திட்டங்களில் ஒன்றாக உள்ளது தங்கத்தில் முதலீடு செய்வது. உங்களால் ஒரே நேரத்தில் அதிக பணம் கொடுத்து நகைகளை வாங்க முடியவில்லை என்றாலும் சிறு சிறுக சேமிக்கவும். பெண்களுக்கான அனைத்து நகைக்கடைகளிலும் 100 ரூபாய் முதல் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் ஆன்லைன் வாயிலாக செலுத்தும் வசதி உள்ளது.
இதே போன்று தங்க நகை சீட்டுகளில் முதலீடு செய்யலாம். தபால் மற்றும் வங்கிகளில் தங்கப்பத்திர திட்டடங்கள் மூலமாகவும் எவ்வித அச்சமும் இன்றி முதலீடு செய்யலாம். இல்லையென்றாலும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறையாவது ஒரு கிராம் தங்கம் வாங்கி வீடுகளில் சேமித்து வைக்கவும்.
பெண்களின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால், சிறு சிறுக சேமித்த பணத்தைக் கொண்டு நிலத்தில் முதலீடு செய்யுங்கள். பொன்னுல போடனும், இல்ல நிலத்துல போடனும் என்ற பழமொழிக்கு ஏற்ப நிலத்தில் முதலீடு செய்யுங்கள். சேமித்து வாங்கிய நகைகளை அடகு வைத்தாவது கிடைக்கும் நிலங்களை வாங்கிப் போடுவதில் தவறில்லை.
இல்லத்தரசிகளுக்கு ஏற்ற பாதுகாப்பான மற்றும் எளிதில் அணுகக்கூடிய முதலீட்டு என்றால் வங்கி அல்லது தபால் நிலையங்களில் சேமிப்புக் கணக்குத் தொடங்கி பணத்தை சேமித்து வைப்பது தான். நிலையான வட்டி விகிதத்துடன் உங்களது பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்பதால் எதிர்காலத்தில் உங்களுக்கு பாதுகாப்பானதாக அமையும்.
வங்கி அல்லது தபால் நிலையங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஆர்டியாக அதாவது தொடர் வைப்பு நிதியில் டெபாசிட் செய்யலாம். இதன் மூலம் இல்லத்தரசிகள் தங்கள் முதலீடுகளில் சுமாரான வருமானத்தை ஈட்ட முடியும். அதே வேளையில் ஒருபுறம் சேமிக்கும் பழக்கத்தையும் வளர்த்துக் கொள்ள முடியும்.
செல்வ மகள் என்றழைக்கப்படும் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் பெண்கள் முதலீடு செய்யலாம். பெண் குழந்தைகளின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட அரசாங்க ஆதரவு சேமிப்புத் திட்டங்களில் இது ஒன்று. வங்கி அல்லது அஞ்சல் அலுவலகங்களின் வாயிலாக பணத்தை சேமிக்கலாம். ஓராண்டிற்கு 1.5 லட்சம் வரை இதில் முதலீடு செய்யலாம்.
எதிர்கால பொருளாதார தேவைகளைக் கருத்தில் கொண்டு பெண்கள் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தல் மூதலீடு செய்யலாம். மூத்த குடிமக்களுக்கான திட்டம் என்றாலும், நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்க சிறந்த சேமிப்புத்திட்டங்களில் ஒன்றாக உள்ளது
மேலும் படிக்க: ரயிலில் தனியான பயணம் செய்யும் பெண்களாக நீங்கள்? உங்களுக்காக தான் என் தோழி திட்டம்!
வரிச் சலுகைகள் மற்றும் நிலையான வருமானம் காரணமாக இந்தியாவில் மிகவும் பிரபலமான சேமிப்பு திட்டங்களில் ஒன்றாக உள்ளது. இந்த சேமிப்புத்திட்டத்தில் இல்லத்தரசிகள் தங்கள் பெயரிலோ அல்லது தங்கள் மனைவியுடன் கூட்டாகவோ PPF கணக்கைத் தொடங்கி நீண்ட காலத்திற்கு பணத்தை சேமித்து வைக்கலாம்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]