பெண்கள் இல்லையென்றால் ஒரு அணுவும் அசையாது என்ற கூற்று நிச்சயம் உண்மை தான். வீடாக இருந்தாலும், அலுவலகமாக இருந்தாலும் அனைத்து வேலைகளைத் தவறில்லாமல், பொறுப்புடன் செய்யும் குணம் பெண்களிடம் அதிகளவில் உள்ளது. இதோடு மட்டுமல்ல, நாட்டின் உள்ள அனைத்து முக்கியத் துறைகளிலும் பெண்கள் தான் உயர்பதவியில் உள்ளனர். இதெல்லாம் சும்மா கிடைத்துவிடவில்லை. பெண்களின் கல்வி, வேலை, சொத்துரிமை, சுய மரியாதை என அனைத்தையும் பெறுவதற்கு முன்னால் அடிமைத்தனம் மட்டுமே இவர்களின் சொத்தாக இருந்துள்ளது. நம் நாட்டின் விடுதலைக்கு எப்படி அனைவரும் ஒன்றிணைந்து போராடினோமோ? அது போன்று தான் பெண் விடுதலை மற்றும் சுதந்திரத்திற்காக பல தலைவர்கள் போராடியுள்ளனர். அவர்களில் ஒரு சிலரை இந்த சர்வதேச மகளிர் தினத்தில் நாம் நினைவு கூருவோம்.
பெண் விடுதலை, சுய மரியாதை என்ற வார்த்தையைக் கேட்டாலே நம் கண் முன்னே சட்டென்று வந்து செல்பவர் தந்தை பெரியார். ஈரோட்டில் செல்வ குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அதை வைத்து சந்தோஷமாக வாழாமல் பெண் விடுதலையை தன்னுடைய உயிர்மூச்சாகக் கொண்டவர்கள். பெண் கல்வி, பெண் விடுதலை, கைம்மை ஒழிப்பு, சொத்துரிமை, உடன் கட்டை ஏறுதல் பழக்கம் ஒழிப்பு என பெண்களுக்குத் தேவையான உரிமைக்காகத் தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் செலவிட்டார். பெண்கள் இந்தளவிற்கு சுதந்திரத்துடன் வலம் வருவதற்கு உறுதுணையாக இருந்து போராடிய தலைவர்களில் பெரியார் முதன்மையானவர்.
அடுப்பு ஊதும் பெண்களுக்குப் படிப்பது எதற்கு என்ற காலக்கட்டத்தில், பெண் கல்வியும், பொருளாதார சுதந்திரமும் பெண் விடுதலைக்கான ஊற்றென முழங்கியவன் தான் மகாகவி பாரதி. ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்ட காலத்தில் இருந்தாலும் பெண் விடுதலைக்காக பல கவிகளை எழுத்து அதன் மூலம் எழுச்சியைக் கொண்டு வந்தவர்கள். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்ற கவிதை வரிகளில், எந்த வகையிலும் ஆண்களுக்கு பெண்கள் இழிவானவர் அல்ல, சமமானவர்கள் என்பதை எடுத்துரைத்தார் பாரதி.
தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பெண் உரிமைக்காக போராடிய பெண் தலைவர்களின் முக்கியமானவர் மூவலூர் ராமமிர்தம். திருவாரூரில் பிறந்த இவர், இளம் வயதில் இருந்தே சமூக பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தவர். குறிப்பாக பெண்களை ஒரு காட்சிப் பொருளாகப் பார்த்ததோடு, தேவதாசி முறை ஓங்கி இருந்தது. இந்த நிலையில் பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்து, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியுடன் இணைத்து தேவதாசி முறையை ஒழிக்க இணைந்து பாடுபாட்டார். இவ்வாறு வாழ்நாள் முழுவதும் பெண் விடுதலைக்காக போராடிய இவரின் நினைவாக தற்போது இவரது பெயரில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக அரசுப்பள்ளிகளில் பயிலக்கூடிய 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்க ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கேரளாவில் பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்த பெண்ணியவாதிகளில் ஒருவர் தான் அண்ணா சாண்டி. திருவாதங்கூர் சமஸ்தானத்தில், ஆண்களுக்கு மட்டும் தான் வேலை, பெண்களுக்கு இல்லை என்ற கடுமையான விவாதத்தின் போது தன்னுடைய குரலை ஆணித்தனமாக பதிவு செய்தார். தன்னுடைய 24 வயதில், சமஸ்தானத்தின் அனைவரின் முன்னிலையிலும், பெண்கள் சம்பாதித்தால் நெருக்கடியான காலக்கட்டத்தில் குடும்பத்திற்கு உதவ முடியும் என்றும் திருமணமான பெண்களுக்கு கட்டாயம் வேலை வாயப்பு வழங்கப்பட வேண்டும் என போராடி வெற்றிக்கண்டார். 1928 களில் பெண்களின் கல்வி மற்றும் வேலையில் சம உரிமைக்காக குரல் கொடுத்தவர் என்ற பெருமை அண்ணா சாண்டிக்கு உள்ளது.
இஸ்லாமிய சமூகத்தில் தலாக் என்ற சொல்லிட்டு எத்தனை திருமணங்கள் செய்யலாம் என நடைமுறை இருந்தது. இது தவறு என்றும் பலதார திருமணங்களை செய்ய சொல்லி பெண்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது என போராட்டார் முஸ்லீட் சமூகத்தைச் சேர்ந்த சுக்ரா. ஹைதாராபத்தைச் சேர்ந்த இவர், ஒட்டு மொத்த இஸ்லாமிய பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்தார்.
பெண் கல்வி தான் முக்கியம் என்று போராடிய முஸ்லீம் பெண் தான் ருகியா. வங்க தேசத்தை சேர்ந்த இவர் முஸ்லீம் குழந்தைகளுக்காக பள்ளியைத் தொடங்கியிருந்தாலும், ஒட்டு மொத்த பெண்கள் சமூகத்தின் மீது அக்கறை காட்டினார்.
Image Source - Google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]