
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரயில் பயணமாக இருந்தாலும், பேருந்தில் பயணத்தாலும் , இரவு நேரத்தில் பணி முடித்துவிட்டு நடந்து சென்றாலும் எங்கேயும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதனாலே சில கிராமத்துப் பெண்கள் இன்னமும் நகரத்தை நோக்கி பணிக்காகவும், உயர்கல்விக்காகவும் வருவதற்கு தயக்கம் காட்டுகின்றன. இந்த சூழலில் தான் பெண்களின் பாதுகாப்பிற்காக அரசு பல வகையான திட்டங்களைக் கொண்டு வருகிறது. இவற்றில் ஒன்றான “என் தோழி திட்டம்”எப்படி ரயிலில் தனியாக பயணிக்கும் உதவுகிறது? எப்படி பெண்கள் உபயோகிக்க வேண்டும் என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிக்க: பெண்களே தொழில் தொடங்க ஆசையா? அப்ப முதலில் இத படிங்க!
இன்றைக்கு பெண்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றிவருகின்றனர். வேலை நிமிர்த்த வெளியூர் பயணத்தின் போது ரயில் தான் அவர்களுக்கான சிறந்த தேர்வாக உள்ளது. ஆனாலும் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு பல இடையூறுகளைக் கொடுப்பதற்காகவே சில இளைஞர்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். சமீபத்தில் கூட தமிழகத்தில் தனியாக ரயிலில் பயணித்த பெண்ணிடம், பாலியல் உறவுக்கு அழைத்த நபர் குறித்த வீடியோ வெளியானதை அனைவரும் அறிந்திருப்போம். அந்த இடத்தில் பெண் கொஞ்சம் அச்சம் கொண்டிருந்தால் அவரது வாழ்க்கையே வீணாகியிருக்கும். ஆனால் அந்த பெண் தன்னுடைய மொபைலில் வீடியோ எடுத்ததோடு அருகிலுள்ள டிக்கெட் பரிசோதகரிடம் முறையிட்டது. இதே போன்று அனைத்து நேரங்களிலும் நம்மால் செய்ய முடியாது. தனியாக ரயில் பயணம் செய்யும் பெண்களுக்காகவே Meri saheli என்ற என் தோழி திட்டம் என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்திய ரயில்வே துறையின் சார்பில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் நாடு முழுவதும் தற்போது செயல்பாட்டில் உள்ளது.

ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்களைக் கண்டறிந்து அவர்கள் ஏறும் இடத்திலிருந்து இறங்கும் இடம் வரை ரயில்வே துறையால் அமைக்கப்பட்ட குழு கண்காணிக்கும். இந்த குழுவில் உள்ள ரயிலில் பயணம் செய்யும் பெண்களிடம் நீங்கள் எங்கு செல்ல வேண்டும்? யாரேனும் இந்த கம்பார்ட்மென்டில் உங்களுக்குத் தொந்தரவாக இருக்கிறீர்களா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையை நீங்கள் சந்திக்கிறீர்களா? என்பது போன்ற பல கேள்விகளை அவர்கள் முன் வைக்கலாம். ஒருவேளை ஏதேனும் பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில் ரயில்வே அதிகாரிகளின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
ரயிலில் பயணிக்கும் பெண் பயணிக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக 182 என்ற இலவச எண்ணிற்கு இலவச எண்ணிற்கு புகார்களைத் தெரிவிக்கலாம். ஏதேனும் பிரச்சனைகள் அல்லது பாலியல் ரீதியான சிரமம் ஏற்பட்டால் எவ்வித யோசனையும் இன்றி தொடர்பு கொள்ளலாம். இவர்களின் புகாரையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள்.
மேலும் படிக்க: 100 தடவை கீழ விழுந்திருக்கேன்.. ஆனாலும் பைக் ரேஸிங் தான் எல்லாமே!

ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்களாக இருந்தால், உடனடியாக 182 என்ற எண்ணை இப்பொழுதே உங்களது மொபைலில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். இதோடு மட்டுமின்றி தனியாக பயணிக்கும் பெண்கள் உங்களைப் பாதுகாப்பதற்காக மிளகாய் பொடி, சின்ன கத்தி அல்லது பிளேடு போன்றவற்றையும் உங்களது ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொள்ள மறந்துவிடாதீர்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]
