பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். குடும்பத்தின் பொருளாதார நிலையையும் மேம்படுத்தலாம். ஆம் எந்த சூழல் நிலையிலும் அசராது பயணிக்கும் பெண்களில் பலர் வீடுகளில் குடும்பத்தை மட்டும் கவனிக்கும் பொறுப்பிற்கு தள்ளப்பட்டுவிட்டனர். திறமைகள் பல இருந்தாலும் எதையும் செய்ய முடியாமல் தவிக்கும் பெண்களை சமூக வெளிச்சத்திற்கு கொண்டுவர பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது.
குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் பெண்களில் பலர் நம்பிக்கையுடன் தொழில்முனைவோராக பயணிக்க களம் இறங்குகின்றனர். இவர்களை எப்படியாவது வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்திய அரசாங்கமும் பல கடன் திட்டங்களை அவர்களுக்காக வழங்கி வருகிறது. இதோ பெண் தொழில்முனைவோருக்கும் உதவும் கடன் திட்டங்கள் குறித்து இங்கே விரிவாக அறிந்துக் கொள்வோம்.
மேலும் படிக்க: பெண் கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் “புதுமைப் பெண்” திட்டம்
கிராமப்புறங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பின்தங்கிய பகுதிகளில் உள்ள பெண்களின் ஏழ்மை நிலையைப் போக்கும் விதமாக செயல்படக்கூடிய திட்டங்களில் ஒன்று தான் உத்யோகினி திட்டம். சொல்லும் அளவிற்கு கல்வியறிவு இல்லையென்றாலும் மளிகை கடை, பேக்கரி, ஊறுகாய் தயாரித்தல், வத்தல் தயாரித்தல் போன்ற பணிகளை பெண்கள் செய்துவருகிறார்கள். இவர்களின் சிறு வணிகங்களை ஊக்கப்படுத்தும் விதமாக அரசு உத்யோகினி கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. 88 சிறு குறு தொழில் வணிக நிறுவனங்களுக்கு வட்டியில்லாத கடன்களை வழங்குகிறது. ரூபாய் 50 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை கடன்கள் தொழில் தொடங்கும் பெண்களுக்குக் கொடுக்கப்படுகிறது. மானியமாக 1. 50 லட்சம் வரை கொடுக்கப்படுகிறது.
பெண்கள் வங்கிக்கு நேரடியாக சென்று அதிகாரிகளிடம் நீங்கள் என்ன தொழில் செய்யப்போகிறீர்கள்? எப்படி அதை வழிநடத்தப் போகிறீர்கள்? என்பது குறித்த முழு விபரங்களைத் தெளிவாக சொல்ல வேண்டும். அதை ஆவணமாகவும் சமர்பிக்க வேண்டும். இதற்கு அதிகாரிகள் ஒப்புதல் அளித்த பின்னரே உங்களுக்கு கடன் தொகை வங்கிகளின் மூலம் வழங்கப்படும்.
சமையலையும் பெண்களையும் பிரிக்கவே முடியாது. நொடியில் செய்தாலும் ருசியாக செய்யக்கூடிய திறன் பெண்களிடம் உள்ளது. இதுபோன்ற பெண்களுக்கு கட்டாயம் கேட்டரிங் பிஸினஸ் தொடங்கலாம் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். இவர்களுக்காகவே அன்னபூர்ணா திட்டம் செயல்பட்டுவருகிறது. சிறிய அளவில் டிபன் சென்டர்களைத் தொடங்க நினைக்கும் பெண்கள் எஸ்பிஐ அல்லது பிற வங்கிகளின் மூலம் கடன்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ரூ. 50 ஆயிரம் வரை கடன்கள் பெற முடியும். 36 மாதங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் பணத்தைத் திருப்பி செலுத்துவதற்கான வசதிகள் வழங்கப்படுகிறது. சந்தை நிலவரத்திற்கு ஏற்ப வட்டி தொகை மாறுபடும்.
இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கியின் கீழ் தொழில் முனைவோராக ஆசைப்படும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறுது. இத்திட்டத்தின் மூலம் சிறிய அளவிலான தொழில் தொடங்கவும், ஏற்கனவே உள்ள தொழிலை விரிவுபடுத்தவும், நடைமுறைப்படுத்துவதற்கும் இத்திட்டத்தின் மூலம் கடன் பெற்றுக்கொள்ள முடியும். ரூ. 10 லட்சம் வரைக் கூடிய இத்திட்டத்தில் கடன் பெற்றுக்கொண்டாலும் 10 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. இதற்கான வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது.
தையல், அழகு நிலையங்கள், மாணவர்களுக்கு டியூசன் எடுப்பது போன்ற சிறு தொழிலைத் தொடங்க நினைக்கும் பெண்களுக்காக மத்திய அரசால் கடன் வழங்கக்கூடிய திட்டம் தான் முத்ரா யோஜனா திட்டம். வங்கிகளில் நேரடியாக சென்று பெண்கள் கடன் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
நெசவு, உணவு பதப்படுத்துதல்., தையல் போன்ற தொழில்களை மேற்கொள்ளும் பெண்களுக்கு மத்திய அரசால் சென்ட் கல்யாணி திட்டத்தின் கீழ் கடன்கள் வழங்கப்படுகிறது. உங்களது தொழில் குறித்த முழு ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர் வங்கியின் ஒப்புதலோடு நீங்கள் ரூ.1 கோடி வரை கடன்கள் பெற முடியும்.
இதோடு மட்டுமின்றி பெண்களுக்கு ஏற்கனே உள்ள தொழில் நிறுவனங்களை மேம்படுத்த முத்ரா கிஷோர் லோன் வழங்கப்படுகிறது. தற்போது சுய உதவிக்குழுக்களில் உள்ள பெண்களுக்கும் தனி நபர் தொழில் கடன்களை மத்திய, மாநில அரசுகள் வழங்கிவருகிறது.
மேலும் படிக்க: 10.5 கோடி மதிப்பிலான தனது சொந்த நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கிய பெண்மணி பூரணம்!
இனிமேலாவது பெண்களே உங்களுக்காக உள்ள கடன் திட்டங்களையும், அரசின் சலுகைகளையும் தெரிந்துக் கொண்டு, சமூகத்தில் பொருளாதார மேம்பாட்டுடன் வாழ்வதற்கு முயற்சி செய்யவும்.
Image Source - Google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]