நாட்டின் வளர்ச்சிக்கு பெண் கல்வி முக்கியம் என்பதை உணர்ந்த தமிழக அரசு பெண்கள் எந்தவொரு சிக்கலுமின்றி கல்வி செல்வத்தை பெறுவதற்காக புதுமைப்பெண் திட்டத்தைக் கடந்த 2022ஆம் ஆண்டில் தொடங்கி வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது.
பொருளாதார சூழ்நிலை, குழந்தை திருமணங்கள் போன்ற பிரச்சினைகளால் பெண்களுக்கு கல்வி தடைபடுவதை கண்டறிந்த தமிழக அரசு அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் பெண்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தைத் தொடங்கியது. பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்க மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றப்பட்டது.
கொரோனா பேரிடர் மனித உயிர்களை கொத்து கொத்தாக கொன்றது மட்டுமின்றி மாணவர்களின் கல்விச் செல்வத்தையும் அழித்தது என்றால் அது மிகையல்ல. கொரோனா பேரிடர் ஏற்படுத்திய வாழ்வாதார இழப்பில் இருந்து மீள முடியாத குடும்பத்தினர் தங்கள் வீட்டு பெண்களின் கல்வியை நிறுத்திவிட்டு வேலைக்கு அனுப்பினர். ஒரு சில வீடுகளில் படித்தது போதும் என திருமணத்திற்கு பெண்களை கட்டாயப்படுத்தினர்.
இது தொடர்பாக ஆய்வு நடத்திய தமிழக அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் பெண்கள் இளங்கலைப் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ படிப்புகளை தடையின்றி முடிக்க மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி வருகிறது. ஏற்கெனவே பிற உதவித்தொகைகளை பெற்று வந்தாலும் இந்த திட்டத்திலும் பயன்பெறலாம்.
ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து பெண் மாணவர்களுக்கு இது மாதந்தோறும் வழங்கப்படும்.'பெண்கல்வி' என்ற ஆன்லைன் தளத்தில் மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் பெண்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிங்க தமிழக பட்ஜெட்டில் மகளிருக்கான முக்கிய அறிவிப்புகள்
வங்கி கணக்கு இல்லாத மாணவர்களுக்கு இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் எஸ்பிஐ ஆகிய வங்கிகள் மூலம் மாணவர்களுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கி டெபிட் அட்டை வழங்கப்படுகின்றன
மேலும் படிங்க தமிழகத்தின் முதல் பழங்குடியின பெண் சிவில் நீதிபதி ஸ்ரீபதி
கல்வியை இடைநிற்றல் இல்லாமல் தொடருவதற்கு உதவும் இந்த திட்டத்திற்கு நடப்பு நிதிநிலை அறிக்கையில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பெண்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]