தமிழக பட்ஜெட்டில் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதே போல ஏற்கெனவே செயல்படுத்தப்படு வரும் திட்டங்களுக்கான நிதியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
![Pudhumai penn scheme]()
- ஊரகப் பகுதிகளில் பெண்கள் பெரிதும் பயனடையும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்காக 2024-2025ஆம் ஆண்டில் 3 ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்கெனவே 79 இலட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒரு சமூகத்தில் பெண்கள் அடையும் வளர்ச்சியைக் கொண்டே அச்சமூகத்தின் வளர்ச்சியை மதிப்பிட முடியும் என்று உரைத்த டாக்டர் அம்பேத்கரின் வழியில்
- அறிவிக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக இந்த ஆண்டு 13 ஆயிரத்து 720 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பெண்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கு பெரிதும் உதவும் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் திட்டத்திற்காக இந்தாண்டு மானியத்தொகையை 3 ஆயிரத்து 50 கோடி ரூபாயை 2024-2025ஆம் ஆண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் அரசு ஒதுக்கியுள்ளது. அதே போல மலைப்பகுதிகளில் வாழும் மகளிர் பயன்பெறும் வகையில் நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப்பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட இருக்கிறது.
- ஏழைக் குடும்பங்களை சேர்ந்த மாணவியர் உயர்கல்வி பயில்வதை உறுதி செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதுமைப் பெண் திட்டத்தில் ஏற்கெனவே சுமார் 2 லட்சத்து 73 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.
- வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயிலும் மாணவிகளும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த 370 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- தோழி பணிபுரியும் மகளிர் விடுதிகள் சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் 345 மகளிர் பயன்பெறும் வகையில் 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்று புதிய தோழி விடுதிகள் கட்டப்படும்.
- உயர்கல்வியை தொடர விரும்பும் மூன்றாம் பாலினத்தவரின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட கல்வி செலவுகளை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய மாணவர்களைச் சாதனையாளர்களாக உருவாக்கிடவும் அரசுப் பள்ளி மாணவரின் உயர்கல்வி சேர்க்கயை உயர்த்திடவும் தமிழ் புதல்வன் எனும் மாபெரும் திட்டம் இந்த நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது
- தமிழகத்தை சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் போன்ற 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அவர்களின் ஊதியத்தில் பத்து விழுக்காடு ஊதிய மானியம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
மேலும் படிங்க தமிழகத்தின் முதல் பழங்குடியின பெண் சிவில் நீதிபதி ஸ்ரீபதி
இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.