கால்மிதியில் பொதிந்து கிடக்கும் அழுக்கு, தூசியை சிரமமின்றி அகற்ற இதை முயற்சி பண்ணுங்க

வீட்டிற்குள் நுழையும் முன்பாக வாசலில் உள்ள கால்மிதியில் கால்களை வைத்து உள்ளே அழுக்கு, தூசி, கிருமிகள் புகாமல் தடுக்கிறோம். கால்மிதியை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது அதில் மலை போல் அழுக்கு, தூசி படிந்துவிடும். எத்தனை முறை ஊறவைத்து துவைத்து வெயிலில் காய போட்டாலும் அழுக்கு போகாது. கால்மிதியை சுத்தம் செய்வதற்கு எளிதான சில வழிகளை இந்த பதிவில் பார்ப்போம்.
image

வெயில் காலம், மழை காலம் எந்த காலமாக இருந்தாலும் வீட்டில் காற்று புகாத இடங்களில் கூட அழுக்கு, தூசி படிந்துவிடும். வீட்டின் நுழைவிலும், அறைகளின் நுழைவிலும், பாத்ரூம் செல்லும் இடத்திலும் கால்மிதி வைத்திருப்போம். வெளியே செல்லும் போது செருப்பு அணிந்திருந்தாலும் வீட்டிற்குள் நுழையும் போது கால்மிதி பயன்படுத்துவது நல்லது. கண்ணுக்கு தெரியாத கிருமிகளை வீட்டிற்கு அழையா விருந்தாளிகளாக யாரும் வரவேற்பதில்லை. எல்லோரும் தொடர்ச்சியாக கால்மிதி பயன்படுத்தும் போது அதில் அதிகளவு அழுக்கு படிந்து நிறம் மாறிவிடும். சுவற்றில் வைத்து தட்டினால் அவ்வளவு தூசி பறக்கும். கால்மிதி அழுக்கு, தூசியினால் வீட்டிற்குள் நோய் பரவும் வாய்ப்பும் உண்டு.

doormat cleaning

வீட்டின் சுகாதாரத்தை காப்பத்தில் கால்மிதி பயன்படுவதால் ஒரு முறை துவைத்து எடுப்பதற்குள் படாதபாடு ஆகிடும். கால்மிதியை ஊறவைத்து துவைத்து அழுக்குகளை அகற்ற நேரம் எடுக்கும். அதே நேரம் எத்தனை முறை அலசினாலும் மண், தூசி வந்து கொண்டே இருக்கும். எனினும் கால்மிதியை தண்ணீர் இன்றி கூட சுத்தப்படுத்தலாம். மிக குறைவான கால்மிதியில் உள்ள அழுக்குகளை அகற்ற முடியும்.

கால்மிதி அழுக்கை அகற்றும் படிகாரம்

நீங்கள் படிகாரம் பயன்படுத்தி கால்மிதியை எளிதில் சுத்தம் செய்யலாம். இதற்கு வெதுவெதுப்பான தண்ணீரில் படிகாரம் சேர்க்கவும். இதில் இரண்டு ஸ்பூன் ஷாம்பு ஊற்றி கலக்கவும். இதை ஒரு துணியின் மீது ஸ்ப்ரே செய்யவும். அந்த துணியை கால்மிதி மீது போட்டு தேய்க்கவும். கால்மிதியில் ஒட்டுமொத்த அழுக்கையும் உறிஞ்சிடும். இதன் பிறகு கால்மிதியை வெயிலில் காய வைக்கவும். தண்ணீர் பயன்படுத்தாமலே கால்மிதி இருந்த அழுக்கு, தூசு, மண் அகற்றப்பட்டு இருக்கும்.

கால்மிதி அழுக்கை நீக்க பேக்கிங் சோடா

கால்மிதியின் மீது பேக்கிங் சோடாவை கொட்டுங்கள். அரைமணி நேரத்திற்கு அப்படியே விட்டுவிடுங்கள். இது கால்மிதியில் வீசும் கெட்ட வாசனையை நீக்கும். அதன் பிறகு பெரிய பிரஷ் வைத்து குப்பை போடும் பகுதியில் தட்டவும்.

உங்கள் வீட்டில் தூசு உறிஞ்சி (Vaccum Cleaner) இருந்தால் வேலை இன்னும் சுலபமாகிவிடும். தூசு உறிஞ்சி பயன்படுத்தினால் சில நிமிடங்களிலேயே மொத்த அழுக்கையும் அகற்றிடலாம்.

இவை அனைத்தும் சிரமமாக தெரிந்தால் சோப்பு தண்ணீரில் 12 மணி நேரம் ஊறவைத்து இரண்டு - மூன்று முறை அலசி வெயிலில் நாள் முழுக்க காயவிடவும்.

மேலும் படிங்கமுகம் பார்க்கும் கண்ணாடியில் அழுக்கு பிசுக்கு கறை நீக்கி பளிச்சென மாற்றிட உதவும் குறிப்புகள்

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP