காலையில் கண் விழிக்கும் போது நம்மில் பலரும் கண்ணாடியில் முகம் பார்த்தபடியே எழுகிறோம். வீட்டின் ஹாலில் கண்ணாடி, படுக்கையறையில் கண்ணாடி, பாத்ரூமில் கண்ணாடி, வெளியே செல்லும் போது கையடக்க கண்ணாடி, தலைமுடி கலைந்துவிட்டால் கார் அல்லது பைக் கண்ணாடி என தவிர்க்க முடியாத அலங்கார பொருட்களில் ஒன்றாக கண்ணாடி இருக்கிறது. முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போது நம்மை நாமே அழகு என வர்ணிப்போம் அல்லது எதோ ஒரு தன்னம்பிக்கை கிடைக்கும். நம்மை பிரதிபலிக்கும் கண்ணாடியை தொடர்ந்து பயன்படுத்தும் போது அழுக்கு படியும், திட்டு திட்டாக தெரியும், முகம் தெரியாத அளவிற்கு வெள்ளையாக மாறிடும். கண்ணாடியில் உள்ள அழுக்கு பிசுக்கு கறைகளை நீக்க கடையில் இராசயன திரவம் வாங்கி பயன்படுத்துகிறோம். அதை பயன்படுத்துவதால் கண்ணாடி பளிச்சென மாறுவது உண்மை தான். ஆனால் தொடர்ந்து அவற்றை பயன்படுத்தும் போது கண்ணாடியின் தன்மை போய்விடும். இந்த பதிவை படித்த பிறகு நீங்கள் கண்ணாடியை சுத்தம் செய்ய இரசாயன திரவம் பயன்படுத்த மாட்டீர்கள். வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு முகம் பார்க்கும் கண்ணாடியை சுத்தம் செய்யலாம்.
கண்ணாடியை சுத்தம் செய்ய பற்பசை
கண்ணாடியை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்திய பிறகு ஆங்காங்கே கருப்பு நிறத்தில் புள்ளிகாள் தென்படும். இவற்றை அகற்ற பற்பசை மற்றும் செய்தித்தாழ் பயன்படுத்தவும். ஒரு ஸ்பூன் பேஸ்ட்டில் இரண்டு ஸ்பூன் தண்ணீர் கலந்து துணி கொண்டு கண்ணாடி முழுக்க அதை தேய்க்கவும். 10 நிமிடங்கள் கழித்து செய்தித்தாழ் அல்லது வெள்ளை துணி வைத்து துடைக்கவும். கறை முற்றிலுமாக நீங்கி இருக்கும்.
கண்ணாடியை சுத்தம் பண்ணும் வினிகர்
ஒரு ஸ்பூன் வினிகரில் இரண்டு ஸ்பூன் தண்ணீர் கலந்து கலக்கவும். இதை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கண்ணாடி மீது ஸ்ப்ரே செய்யவும். 10 நிமிடங்களுக்கு அப்படியே ஊறவிட்டு அதன் பிறகு செய்தித்தாழ் வைத்து மேல் இருந்து கீழ் வரை துடைக்கவும்.
கண்ணாடியை சுத்தம் செய்ய ஷேவிங் கிரீம்
கண்ணாடியில் விடாப்பிடியாக அழுக்கு கறை படித்திருந்தால் தாடியை சவரம் செய்ய பயன்படுத்தும் ஷேவிங் கிரீம் போதுமானது. இதற்கு ஷேவிங் கிரீமில் கொஞ்சமாக தண்ணீர் கலந்து பேஸ்ட் போல் உருவாக்கி அதை கண்ணாடியில் தடவி 15 நிமிடங்களுக்கு அப்படியே ஊறவிடுங்கள். அதன் பிறகு வெள்ளை துணி அல்லது செய்தித்தாழ் வைத்து கண்ணாடியை துடைக்கவும்.
கண்ணாடியை தினமும் சுத்தம் செய்ய விரும்பினால் தண்ணீர் மற்றும் வெள்ளை துணி போதுமானது. கண்ணாடியில் தண்ணீர் தெளித்து வெள்ளை துணியில் துடைக்கவும்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation