
பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் அடையாளமாக இருந்து வருகிறது. பொங்கல் அன்று வீட்டு வாசலில் பல வண்ணங்களில் கோலமிட்டு பொங்கலை இனிப்பாக மக்கள் வரவேற்பார்கள். மற்ற நாட்களில் பல வண்ணங்களில் கோலமிடுவதை விட பொங்கல் அன்று வீட்டு வாசலில் போடப்படும் கோலம் தனி அழகை தரக்கூடியதாக இருக்கிறது. சூரிய பகவனை வணங்கிவிட்டு. தைத்திருனாளன பொங்கலில் விவசாயிகள் அறுவடைக்குச் செல்வார்கள். வீட்டில் செழிப்பும், அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்க கொண்டாடப்படுகிறது. பெண்கள் அனைவரும் பொங்கல் திருநாளில் அதிகாலையில் கோலமிடுவதற்காகவே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பர்கள். நீங்கள் எதிர்பார்க்கும் லேட்டஸ்ட் பொங்கல் பானை ரங்கோலி கோலம் சிலவற்றைப் பார்க்கலாம்.
மேலும் படிக்க: “பழையன கழிதலும் புதியன புகுதலும்” போகி பண்டிகையை வண்ணமயமான லேட்டஸ்ட் ரங்கோலி கோலம் போட்டு வரவேற்கவும்
அடுக்காக மூன்று வட்ட வடிவத்தை வரைந்துகொள்ளவும். மையப்பகுதியில் பொங்கல் பானை வரைந்து வண்ணங்களை இட்டு அழகுபடுத்தவும். அடுத்த வட்டத்தில் பிடித்த வண்ணத்தைப் போட்டு, கோலமாவில் முறுக்கு கம்பிகள் போல் சுற்றி வரைந்துகொள்ளவும். அடுத்த வட்டத்தில் பூக்களைச் சுற்றி வரைந்துகொள்ளவும். 3 வட்டத்தின் அடி பகுதியில் பூக்களை வரைந்து, பூக்களை சுற்று 3 இலைகளை வரைந்துகொள்ளவும். உங்களுக்குப் பிடித்த வண்ணங்களை நிரப்பிக் கோலத்தை முழுமைப்படுத்தி, பொங்கலை இனிதே வரவேற்கலாம்.

Image Credit: Pinterest
மயில் மேல் பொங்கல் பானை வைத்து வரையப்படும் இந்த அழகிய பூக்கோலம், பொங்கலோ பொங்கல் என பொங்கலை வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது. ஒரு பெரிய வட்ட வடிவத்தை வரைந்து, வட்டத்திற்குள் தாமரை, வேளியே அழகிய இலைகள் வரைந்து வண்ணங்களைத் தீட்டவும். தாமரையின் ஒருபுறம் மயில் முகமும், மறுபுறம் மயிலின் தோகையும் வரைந்து வண்ணங்கள் இட்டு ரங்கோலியை அழகாக வரையவும். மயிலின் முகம் இருக்கும் பக்கமான கரும்பு , தோகை இருக்கும் பக்கமாக நெல் மணிகளை வரையலாம். ரங்கோலி கோலத்தை முழுமையடையச் செய்ய வட்டத்தின் மேற்புறம் பூக்களின் இதழ்களை வரைந்து வண்ணங்கள் தீட்டவும்.

Image Credit: Pinterest
இந்த பொங்கல் பானை கோலம் உங்கள் வீட்டு வாசலுக்கு ஒரு அழகை சேர்க்கக்கூடியதாக இருக்கும். பொங்கல் பானைக்குள் மயிலும், வெளிப்புறம் வண்ணமயமான தோகையை வரைய வேண்டும். சூரியனை பார்த்தபடி பொங்கல் கிழக்கு முகம் பார்த்து பொங்குவது போல் இந்த கோலம் அமைந்துள்ளது. பொங்கல் பானையின் இரண்டு பக்கமும் கரும்பையும் சேர்த்து வரைந்தால் இன்னும் அழகாக இருக்கும்.

Image Credit: Pinterest
வீட்டு வாசலில் பொங்கலை வரவேற்க ஒரு பெரிய சூரிய ரங்கோலி கோலம் போட்டு. சூரியனுக்கு உட்புறம் பொங்கல் பானை வரைந்து , பொங்கல் பொங்கும் விதமாக ரங்கோலி வரையவும். பொங்கல் பானையின் ஒருபுறம் கரும்பும், மருபுறன் நெல் மணிகளை வரைந்து, இதற்கு வண்ணங்களைச் சேர்த்து முழுமைப்படுத்தலாம்.

Image Credit: Pinterest
அடுக்கடுக்காக இரண்டு வட்டத்தை வரைந்து வண்ணங்கள் போடவும், வட்டத்திற்குப் பொங்கல் பானை வரைந்து பொங்கல் பொங்குவதைப் போல் வண்ணங்கள் வரைய வேண்டும். பொங்கல் பானையைச் சுற்றியது போல் கரும்பு வரைந்து, வட்டத்தை முழுமைப்படுத்தவும். வட்டத்தின் நான்கு புறமும் தாமரை வரைந்து வண்ணங்கள் இட்டு அழகு படுத்தலாம். இந்த கோலம் பொங்கலை வரவேற்கும் விதமாக இருக்கும்.

Image Credit: Pinterest
மேலும் படிக்க: புத்தாண்டை இனிதே வரவேற்கப் பாரம்பரியத்தை வெளிப்பதும் தமிழ் ரங்கோலி கோலங்கள்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]