
Diwali Rangoli Designs 2025: இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 20-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் புத்தாடைகள், பட்டாசுகள், பலகாரங்கள் வாங்குவது என மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
மேலும் படிக்க: Onam pookolam 2025: அழகான ஓணம் பூக்கோலம் அலங்கார யோசனைகள்
இவை மட்டுமின்றி அனைவரும் தங்கள் வீட்டை சுத்தப்படுத்தி அலங்கரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, வண்ணமயமான ரங்கோலிகள் மூலம் தங்கள் வீட்டை பலரும் அழகுப்படுத்துகின்றனர். அதனடிப்படையில், சில தனித்துவமான ரங்கோலி டிசைன்களை இந்தக் குறிப்பில் நாம் காண்போம். இவற்றை எளிதாக பின்பற்ற முடியும். மேலும், இவை நம்முடைய வீட்டிற்கு கூடுதல் அழகு சேர்க்கின்றன.

இந்த கோலம், பாரம்பரிய மலர் வடிவத்தை நவீன வண்ணங்களுடன் இணைத்துக் காட்டுகிறது. இதன் மையத்தில் உள்ள பெரிய சிவப்பு வட்டம், புள்ளி வைத்த வடிவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது நம் கவனத்தை ஈர்க்கிறது. கோலத்தின் வெளிப்புற இதழ்கள் மஞ்சள், நீலம், சிவப்பு மற்றும் பச்சை என பல நிறங்களில் அடுக்குகளாக அமைக்கப்பட்டு, ஒவ்வோர் அடுக்கிலும் நுட்பமான வேலைப்பாடுகள், சிறு புள்ளிகள், வளைவுகள் மற்றும் கண்ணாடி போன்ற டிசைன்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வடிவமைப்பு நுணுக்கமான அழகை விரும்பும் கலைஞர்களுக்கு ஏற்றது.
மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்கள், கோலத்தின் மையத்தில் ஆதிக்கம் செலுத்தி ஒரு பிரகாசமான மையப்புள்ளியை உருவாக்குகின்றன. இந்த துடிப்பான வண்ணங்கள் சுப நிகழ்வின் மகிழ்ச்சியையும், பிரகாசத்தையும் பிரதிபலிக்கின்றன.
மேலும் படிக்க: பளபளக்கும் சருமம், பட்டுப் போன்ற கூந்தல்; தீபாவளியின் போது ஏற்படும் மாசுபாட்டை தடுக்க உதவும் இயற்கை வழிகள்
இரண்டாவது கோலம், முழுக்க முழுக்க துடிப்பான மற்றும் ஆற்றல்மிக்க வண்ணங்களின் கலவையாக திகழ்கிறது. முதல் கோலத்தை போல் மலர் வடிவத்தை கொண்டிருந்தாலும், இதன் மைய வடிவமைப்பு சற்றே வேறுபடுகிறது. நடுவில் உள்ள பிங்க் வட்டத்தில், நீலம், மஞ்சள் போன்ற நிற இதழ்களாலான சிறிய மலர் காணப்படுகிறது. வெளிப்புற அடுக்குகள் ஆரஞ்சு, நீலம் மற்றும் சிவப்பு நிற இதழ்களை கொண்டுள்ளன. இந்த வடிவத்தில் உள்ள ஒவ்வொரு இதழும் ஒரே மாதிரியான வடிவத்துடன், சீராக அமைக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு ஒரு திருப்தியான அனுபவத்தை தருகிறது.

பிங்க், ஆரஞ்சு, பளிச்சென்ற மஞ்சள் மற்றும் நீலம் ஆகியவற்றின் கலவை, கண்ணைக் கவரும் வகையில் உள்ளன. இந்தக் கோலம், தீபாவளிக்கு ஏற்ற பண்டிகை கொண்டாட்டத்தை பிரதிபலிக்கிறது.
இந்தக் கோலம் நேர்த்தியான வேலைப்பாடுகள் நிறைந்த அங்கமாக திகழ்கிறது. இதன் அமைப்பு மிகவும் பாரம்பரியமானது, அடர்த்தியான மற்றும் எளிமையான இதழ்கள் மூலம் முழு மலரை போல காட்சியளிக்கிறது. இதன் மையத்தில் சிவப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை இதழ்கள், அதைச் சுற்றி அடர் ஊதா மற்றும் மஞ்சள் நிற இதழ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கோலத்தின் வெளிப்புறம் அடர்த்தியான பச்சை நிறத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வண்ண பொடிகளை பயன்படுத்தி வடிவங்களுக்குள் நிரப்பும் நுட்பம் இதில் தெளிவாக தெரிகிறது.

மஞ்சள், ஊதா மற்றும் பச்சை ஆகியவை இந்தக் கோலத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. பொதுவாக, மஞ்சள் மற்றும் ஊதா நிறத்தின் இந்த கலவை பக்தி உணர்வை கொடுக்கக் கூடியது. பச்சை நிறம் கோலத்தின் ஒட்டுமொத்த தோற்றத்திற்கு ஒரு புத்துணர்ச்சியூட்டும் இயற்கையான அழகை சேர்க்கிறது.
இது போன்ற ரங்கோலிகள் மூலம் உங்கள் வீட்டிற்கு தனித்துவமான அழகை சேர்க்கலாம். அந்த வகையில், இந்த தீபாவளியை வண்ணங்களால் நிரப்புங்கள்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]