
பழங்கால இந்திய கலை வடிவமைப்புகளில் கோலம் முக்கியத்துவம் பெற்றதாகும். காலப்போக்கில் பல வடிவங்கள் எடுத்து ரங்கோலி ஒரு புகழ்பெற்ற வடிவமாக இருக்கிறது. ரங்கோலி விசேஷ நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் போடப்படும் கோலங்களில் கலாச்சார வெளிப்பாடாக இருந்து வருகிறது. இந்த ரங்கோலி வடிவமைப்புகள் பெரும்பாலும் அதன் தனித்துவமான வடிவியல் ரீதியாகத் துல்லியமானதாக இருக்கிறது, மனதளவில் இயற்கையாகவும் ஈர்க்கப்படுகிறது. ரங்கோலி எண்ணற்ற வண்ணங்கள், பூக்கள் மற்றும் இலைகளைப் பயன்படுத்தி அழகுபடுத்தப்படுகிறது. பாரம்பரிய உருவங்கள், மயில்கள், தாமரை மலர்கள் மற்றும் வடிவியல் ரங்கோலிகள் அமைக்கலாம், இந்த 2015ஆம் ஆண்டு புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்க வீட்டு வாசலில் போடப்படும் லேட்டஸ்ட் ரங்கோலியில் இருந்து தொடங்கலாம்.
மேலும் படிக்க: 7 புள்ளிகள் கொண்டு எளிமையாகப் போடப்படும் மார்கழி மாத சிக்கு கோலங்கள்
2025ஆம் ஆண்டு புத்தாண்டை வீட்டு வாசலில் வண்ணமயமான கோலங்களுடன் வரவேற்போம்.
இந்த வண்ணமயமான ரங்கோலி போட முதலில் ஒரு வட்டம் இட்டு, அடுத்த அடுக்காக ஒரு சிறு வட்டம் போட வேண்டும். முதல் வட்ட பகுதியில் நில வண்ணத்தைப் பூசி, அதில் கோல மாவில் 2025ஐ அழகாக வரையவும். அதன்பிறகு அடுத்த வட்டத்தில் மஞ்சள் நிறம் இட்டு முழுமைப் படுத்த வேண்டும். ரங்கோலி கோலத்தை அடுத்தகட்டம் எடுத்து செல்ல, இரட்டை இதழ் பூக்கள் வரைந்து முழுமைப் படுத்த வேண்டும், அதில் காவி நிற வண்ணத்தை இட்டு அழகுபடுத்தவும். அதன்பிறகு இரண்டு பூக்கள் இதழ்கள் இடையில் வட்டம் வடிவம் போட்டு, வட்டத்தில் மேல் பகுதியிலும், உள் பகுதியிலும் பூக்களை வரைந்து கோலத்தை முழுமைப்படுத்தலாம். இந்த ரங்கோலி 2025ஐ வரவேற்க ஏற்ற கோலமாக இருக்கும்.

Image Credit:pinterest
2025 வீட்டு வாசலில் போட சிறந்த கோலத்தைத் தேடுகிறீர்கள் என்றால் இந்த மயில் கோலம் சரியான தேர்வாக இருக்கும். முதலில் சிறு வட்டம் இட்டு, அதில் நில நிற வண்ணத்தை இட்டு 2025ஐ போடவும். அடுத்தகட்டமாக வட்டம் வரைந்து உள்ளே பூக்களை வரைந்து வண்ணங்களை நிரப்ப வேண்டும். அதன்பிறகு வட்டத்தின் ஒரு பகுதியில் மயிலின் கழுத்து, மூக்கு பகுதியை அழகாக வரையவும். வட்டத்தின் வெறுமையான பகுதியில் இலைகளை வரைந்து மயிலின் வடிவத்தைக் கொண்டு வந்து, ரங்கோலியை முழுமைப்படுத்தவும்.

Image Credit:pinterest
மஞ்சள் நிறத்தில் வட்ட வடிவில் புள்ளிகள் வைத்து, அதை பூக்கள் வடிவத்து கொண்டு வரவேண்டும். பூக்களின் வலது புரமும், இடது புரமும் பச்சை வண்ணங்களைக் கொண்டு இலைகளை வரையவும். இதன்பிறகு இரண்டு இலைகளையும் இணைக்கும் விதமாக சிவப்பு நிற வண்ணத்தை இட்டு, அந்த இடத்தை முழுமைப்படுத்த வேண்டும். சிவப்பு நிற மேல் பகுதியில் 2025ஐ வரைந்து முழுமைப்படுத்த வேண்டும். மஞ்சள் பூவின் கீழ் பகுதியில் கொடி வடிவில் இலைகளை வரைந்து, இதன் இரண்டு பக்கத்திலும் மூன்று அடுக்கு பூக்கள் வரைந்து முழுமைப்படுத்த வேண்டும்.

Image Credit:pinterest
இந்த அழகிய தாமரை கோலத்தை போட, ஒரு பெரிய தாமரையை வரைந்து, பூக்களுக்கும், இலைகளுக்கும் வண்ணங்களை இட வேண்டும். தாமரை சுற்றி ஒரு வட்ட வடிவத்தை வரைய வேண்டும். வட்டத்தின் உள்பகுதியில் இரண்டு வண்ணத்தை இட்டு ”ஹாப்பி நியூ இயர் 2025” என்ற வார்த்தை எழுது அழகுப்படுத்தலாம்.

Image Credit:pinterest
மேலும் படிக்க: புள்ளிகள் வைத்து போடப்படும் மார்கழி மாத நிலை வாசல் கோலம்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]