3 Detox Tea for Winter in Tamil : குளிர்காலத்திற்கு ஏற்ற 3 டீடாக்ஸ் டீ ரெசிபிக்கள்

இந்த குளிர்காலத்தில் உங்கள் உடலை சூடாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள பின்வரும் டீடாக்ஸ் டீ ரெசிபிக்களை முயற்சி செய்யலாம்.

tea recipes detox drink

குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக வைத்துக்கொள்ள கூடுதல் ஆற்றல் தேவைப்படுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு மண்டலம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை வலுப்படுத்தவும் அதிக ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. இதற்கு டீடாக்ஸ் பானங்கள் அல்லது டீ உங்களுக்கு உதவியாக இருக்கும். உடல் கழிவுகளை வெளியேற்றுவதோடு, டீடாக்ஸ் டீ வகைகள் உடல் எடையை குறைக்கவும், வளர்சிதை மாற்றம் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தவும், சருமம் மற்றும் தலைமுடியை பராமரிக்கவும் உதவுகின்றன. வீட்டிலேயே இந்த ஆரோக்கியமான டீடாக்ஸ் டீ வகைகளை சுலபமாக செய்திடலாம். இதன் செய்முறைகள் பின்வருமாறு.

1. இஞ்சி ஓமம் எலுமிச்சை டீ

detox tea recipes

மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த இஞ்சி ஓமம் எலுமிச்சை டீயை குடிப்பதன் மூலம், உங்கள் உடலில் உள்ள கழுவுகளை எளிதில் வெளியேற்றலாம். இதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்

தேவையான பொருட்கள்

  • இஞ்சி - 1 சிறிய துண்டு
  • ஓமம் - 1 டீஸ்பூன்
  • எலுமிச்சை - பாதி

செய்முறை

  • ஒரு கிளாஸ் தண்ணீரில் இஞ்சி மற்றும் ஓமம் சேர்த்து இரவு முழுதும் உற வைக்கவும்.
  • மறுநாள் காலையில் அந்த கலவையை ஊற வைத்த தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைக்கவும். இதனை ஒரு கிளாஸில் வடிகட்டி கொள்ளவும்.
  • பாதி எலுமிச்சையின் சாறை இந்த டீயில் சேர்த்து, நன்கு கலக்கிய பின் குடிக்கலாம்.

2. இலவங்கப்பட்டை கிராம்பு க்ரீன் டீ

detox tea recipes  clove

ஆரோக்கியமான முறையில் உடல் எடை குறைப்பதற்கு பலரும் க்ரீன் டீ குடிக்கின்றனர். இதனுடன் கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து டீடாக்ஸ் பானமாக மாற்றலாம்.

தேவையான பொருட்கள்

  • க்ரீன் டீ - 2 டீஸ்பூன்
  • இலவங்கப்பட்டை 1-2 துண்டுகள்
  • கிராம்பு 2-3
  • தேன் - 1 டீஸ்பூன்
  • தண்ணீர் - 1 கிளாஸ்

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டையுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து 2-3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • பின் க்ரீன் டீ சேர்த்து 3-4 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • இதனை ஒரு கிளாஸில் வடிகட்டவும், நீங்கள் விரும்பினால் இதனுடன் தேன் கலந்து குடிக்கலாம்.

3. நெல்லி இஞ்சி டீ

detox tea recipes

இந்த குளிர்காலத்தில் உங்கள் உடலை பாதுகாக்க, ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த நெல்லி இஞ்சி டீ குடிக்கலாம். இதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • சுக்குப்பொடி- 1 டீஸ்பூன்
  • உலர்ந்த நெல்லிக்காய் பொடி- 1 டீஸ்பூன்
  • கல் உப்பு- தேவையான அளவு
  • தேன்- 1 டீஸ்பூன்
  • தண்ணீர் - 1.5 கிளாஸ்

இந்த பதிவும் உதவலாம்: எடை இழப்பிற்கு உதவும் லெமன் டீயின் 5 அதிசய நன்மைகள்

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
  • இதனுடன் சுக்குப்பொடி மற்றும் உலர்ந்த நெல்லிப்பொடியை சேர்த்து கொதிக்க விடவும்.
  • இது 1 கிளாஸ் ஆக வற்றி வரும் வரை கொதிக்க விடவும்.
  • குடிப்பதற்கு முன் தேன் மற்றும் கல் உப்பு சேர்த்து குடிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற இந்த டிடாக்ஸ் பானங்கள் போதும்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP