எலுமிச்சை பழம் சிறப்பு தன்மை வாய்ந்தது, இதனை சாறு எடுத்து தேன் மற்றும் தண்ணீர் சேர்த்து சுலபமான லெமன் ஜூஸ் தயாரிக்கலாம். ஒரு சிலருக்கு எலுமிச்சை சாறை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கும் பழக்கமும் உள்ளது. இது உங்கள் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்வதுடன், உடலில் இருக்கும் மாசுக்களையும் வெளியேற்ற உதவுகிறது. உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் மத்தியில் லெமன் டீ பிரபலம் அடைந்து வருகிறது. குறைந்த கலோரி உள்ள இந்த லெமன் டீ உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது வைட்டமின் C இன் நல்ல ஆதாரம் ஆகும். இதன் புளிப்பு சுவை மற்றும் சீட்ரிக் வாசனையின் கலவை உங்கள் நிதானப்படுத்தி, பதட்டத்தை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மாசுக்களை நீக்கி, அழற்சியை குறைப்பதில் நன்மை பயக்கின்றன. உடல் எடையை குறைப்பதில் லெமன் டீ எவ்வாறு உதவுகிறது என்பதை விரிவாக இப்போது பார்க்கலாம்.
தாகத்தை தணிக்க சர்க்கரை நிறைந்த பானங்களை தவிர்த்து லெமன் டீயை குடிப்பது உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது. நீங்கள் உடல் கழிவுகளை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபடும்போது, கலோரி கட்டுப்பாட்டுடன் லெமன் டீயை குடிப்பது உங்கள் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது. மேலும் மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகளை சந்திக்கும் பெண்களின் இன்சுலின் எதிர்ப்பையும் மேம்படுத்துகிறது.
எலுமிச்சையில் வைட்டமின் C நிறைந்துள்ளது. இது உடல் திசுக்களின் வளர்ச்சி, சீரமைப்பு மற்றும் நலனுக்கு அத்தியாவசியமானது. வைட்டமின் C நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இரும்பு சத்து குறைபாட்டை போக்கவும் உதவுகிறது. மேலும் இது இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது.
லெமன் டீயுடன் இஞ்சி சேர்த்து குடிக்கலாம். இது ஒரு சிறந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த பானமாக அமைகிறது. நார்ச்சத்து நிறைந்த இஞ்சி ஆற்றல் மட்டத்தை அதிகரிக்கவும், பசியை கட்டுப்படுத்தவும், செரிமானத்திற்கும் உதவுகிறது. மேலும் தசை வலி, குமட்டல் போன்ற பிரச்சனைகளையும் குறைக்க உதவுகிறது.
லெமன் டீ யில் கிரீம் சர்க்கரை போன்ற எந்த ஒரு பொருளும் சேர்க்கப்படுவதில்லை. இந்த காரணத்தினால் உடல் எடையை குறைக்க திட்டமிடுபவர்கள், குறைந்த கலோரி உள்ள இந்த லெமன் டீயை தாராளமாக குடிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தினமும் வெந்தய டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இது இரைப்பைக் குழாயில் அமிலத்தன்மையை எதிர்த்து, உப்புசம் மற்றும் மலச்சிக்கலைக் குறைக்கிறது. இது உடலின் சீரான செயல்பாட்டிற்கு அத்தியாவசியமானது. லெமன் டீ உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்கிறது. மேலும் உப்புசத்தை ஏற்படுத்தும் அதிகப்படியான சோடியத்தை வெளியேற்றுகிறது.
உடல் எடையை குறைக்க திட்டமிடுபவர்கள் குளிர்ந்த அல்லது சூடான லெமன் டீயை குடிக்கலாம். கோடை காலத்தில் குளிர்ந்த லெமன் டீயும், குளிர்காலத்தில் சூடான லெமன் டீயும் குடிக்கலாம். ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கப் லெமன் டீயை சர்க்கரை சேர்க்காமல் குடிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: உலர் திராட்சை நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]