
கருப்பு உலர் திராட்சை, பல நன்மைகள் அடங்கி உள்ள மிகவும் மதிப்புமிக்க பழமாகும். இதன் இலை, விதை, தோல் மற்றும் பழம் என அனைத்திலும் பயனுள்ள பண்புகள் உள்ளன. உடலில் உள்ள வாத மற்றும் பித்த தோஷங்களை சமநிலைப்படுத்த உலர் திராட்சை உதவுகிறது.
திராட்சை பழங்கள் காய்ந்தவுடன் கருமையாக மாறும், அதனால் உலர்ந்த திராட்சை சிறிய விதைகளுடன் உலர்ந்த, கருமை நிறத்தில் இருக்கும். இதில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் கலோரிகள் நிறைந்துள்ளன. இது ஆரோக்கியத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.
இன்று உலர் திராட்சை நீரின் நன்மைகள் பற்றிப் பார்க்கவிருக்கிறோம். இந்நீரை தொடர்ந்து தினமும் குடிப்பதன் மூலம், சில நாட்களில் உங்கள் உடலில் பின்வரும் 5 மாற்றங்களைக் காண முடியும். இந்த தகவலை உணவியல் நிபுணர் மன்பிரீத் அவர்கள் இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்துள்ளார். முதலில் உலர் திராட்சையின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் பண்புகள் பற்றித் தெரிந்து கொள்வோம்.
உலர் திராட்சையில் சர்க்கரைகள் (குளுக்கோஸ் மற்றும் ஃப்ரூக்டோசு), வைட்டமின்கள் (அஸ்கார்பிக் அமிலம், ரிபோஃபிளாவின், தயமீன், பிரிடொட்சீன்), நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் (ஜின்க், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம்) போன்றவை நிறைந்துள்ளன. உலர் திராட்சையில் ஃபிளேவனாய்டுகள், ரெஸ்வரட்ரால், எபிகாடெசின், பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் மற்றும் ஹைட்ரோசினமிக் அமிலம் போன்ற பல்வேறு பைட்டோ கெமிக்கல்கள் (தாவரத்திலிருந்து பெறப்பட்ட கலவைகள்) உள்ளன.
இந்த பதிவும் உதவலாம்: குளிர்காலத்தில் ஏன் வேர்க்கடலை சாப்பிட வேண்டும் தெரியுமா?

உலர் திராட்சை நீரில் இரும்புச்சத்து இருப்பதால் இது இரத்த சோகையை போக்க உதவுகிறது. இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்குத் தேவையான வைட்டமின்-B உலர் திராட்சையில் உள்ளது. இதற்கான போதுமான அளவுத் தகவல்கள் இல்லை. ஆகையால், மனிதர்களுக்கு ஏற்படும் இரத்தம் தொடர்பான பிரச்சனைகளைக் கட்டுப்படுத்துவதில் உலர் திராட்சையின் விளைவுகுறித்து ஆய்வு செய்யக் கூடுதல் ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன. இது தொடர்பான சிறந்த ஆலோசனைக்கு உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

உலர் திராட்சையில் வைட்டமின்-C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், இது சருமத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் பராமரிக்க உதவுகிறது. இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் பாக்டீரியா தொற்றுகளை எதிர்த்துப் போராடுகிறது. மேலும், முகப்பரு வருவதை தடுக்கவும் உதவுகிறது.
தினமும் உலர் திராட்சை நீர் குடிப்பதன் மூலம் கிடைக்கும் வைட்டமின்-C , முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றக்கூடியது. மேலும் இதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் பொடுகு மற்றும் அரிப்புக்கு எதிராக செயல்படுகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: ஆவியில் வேக வைத்த உணவுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
உலர் திராட்சை நீரில் கால்சியம் உள்ளது, இது பற்களின் பற்சிப்பியை வலுப்படுத்தவும், மறுகனிமமயமாக்கவும் உதவுகிறது. மேலும் கால்சியம் எலும்புகளின் முக்கிய அங்கமாகும். சரியான எலும்பு உருவாக்கம் மற்றும் கால்சியத்தை சிறப்பாக உறிஞ்சுவதற்கு, போரான் எனும் ஊட்டச்சத்து மிகவும் அவசியமானதாகும்.
உலர் திராட்சையில் பொட்டாசியம் உள்ளது, இது எலும்புகளின் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது, இதனால் உலர் திராட்சையில் உள்ள பொட்டாசியம், போரான் மற்றும் கால்சியம் பெண்களின் எலும்பு மெலிவுறல் நோய்க்குப் பயனுள்ளதாக இருக்கும்.

நீங்கள் மிகவும் ஒல்லியாக இருந்தால், மேலும் உடல் எடையை அதிகரிக்க விரும்பினால், இதற்கு உலர் திராட்சை ஒரு இயற்கையான தீர்வாக இருக்கும். கடைகளில் எடை அதிகரிக்க உதவும் மாத்திரைகள் விற்கப்படுகின்றன, ஆனால் நீங்கள் உடல் எடையை அதிகரிக்க ஆயுர்வேத வழியைத் தேர்வு செய்ய விரும்பினால், உலர் திராட்சை நீரை குடிக்கலாம். உலர் திராட்சையை பாலுடன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரிப்பதோடு மட்டுமின்றி உடல் எடையும் அதிகரிக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: நம்ப முடியாத அதிசய பலன்களைக் கொண்ட பாக்கு!!!
உலர் திராட்சை உடலுக்கு சூடு. எனவே அதை குறைந்த அளவில் மட்டுமே சாப்பிட வேண்டும். 5 திராட்சைகளுக்கு மேல் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். கர்பிணிப் பெண்கள் மருத்துவரை ஆலோசித்த பின்னரே இதை உட்கொள்ள வேண்டும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]