Benefits of Fenugreek Tea: தினமும் வெந்தய டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

உடல் எடையை குறைப்பதில் தொடங்கி தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பது வரை வெந்தய டீயின் மகத்தான நன்மைகளை அறிவோம் வாருங்கள்.

fenugreek tea benefits

வெந்தயம் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இதில் கால்சியம், மெக்னீசியம், ஃபோலேட், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் A அதிகமாக காணப்படுகிறது. இதன் நன்மைகளை பெற விரும்பும் பலரும், வெந்தய டீ குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

வெந்தய டீ செய்முறை

  • ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை நுணுக்கி பொடியாக்கி கொள்ளவும்.
  • இதனை ஒரு கப் கொதிக்கும் நீரில் சேர்க்கவும்.
  • நீங்கள் விரும்பினால் இதில் துளசி இலைகளையும் சேர்த்து கொள்ளலாம்.
  • தண்ணீரை 2-3 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
  • சூடு தணிந்த பின், டீயை வடிகட்டி ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்.

வெந்தய டீயின் நன்மைகள்

வெந்தய டீயில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. அவற்றுள் சிலவற்றை இப்பதிவில் பார்க்கலாம்.

இளமையில் ஏற்படும் வயது முதிர்வை எதிர்த்து போராட உதவுகிறது

fenugreek tea

நீங்கள் முளைகட்டிய வெந்தயத்தை கொண்டு டீ செய்து குடிக்கும்போது, அது உங்கள் உடலுக்கு அதிக அளவிலான ஆன்டி ஆக்ஸிடென்டை வழங்குகிறது. இவை மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் மற்றும் தழும்புகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன.

தாய்ப்பால் சுரப்பை மேம்படுத்துகிறது

வெந்தய டீ குறிப்பாக தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பெரிதும் நன்மை பயக்கிறது. ஆய்வின்படி மருந்துகள் கொடுக்கப்பட்ட பெண்களுடன் ஒப்பிடுகையில் வெந்தைய டீ பருகிய தாய்மார்களின் தாய்ப்பால் உற்பத்தி அதிகரித்த நிலையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது

fenugreek tea

வெந்தய டீ இன்சுலின் உணர்ச்சிமிக்கதாக கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகள் இதனை தினமும் குடித்து வந்தால், அவர்களின் குளுக்கோஸ் சகிப்புத்தன்மையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

சுவாச நிவாரணம் அளிக்கிறது

வெந்தய டீ சுவாச நோய்களுக்கு நிவாரணம் அளிப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது ஆஸ்துமாவை குணப்படுத்தாது, இருப்பினும் அதன் நிலையை குறைக்கவும் அடிக்கடி ஏற்படுவதை தடுக்கவும் நிச்சயம் உதவியாக இருக்கும்.

உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது

fenugreek tea

உடல் எடையை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபடும் போது அதன் பலன் கிடைக்க சற்று தாமதமாகலாம், ஆனால் உடல் எடையை குறைப்பது சாத்தியமே! தினசரி உயிர் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுடன் வெந்தய டீ குடிப்பதையும் வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

அழற்சியை குறைக்கிறது

வெந்தயத்தில் உள்ள லினோலிக் மற்றும் லினோலெனின் அமிலங்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. இந்த காரணத்தினால் வெந்தய டீ திசு பாதிப்புகளை குறைக்க உதவுகிறது.

செரிமானத்திற்கு உதவுகிறது

fenugreek tea

நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் தொடர்ந்து அவதிப்படுகிறீர்கள் என்றால் உங்களுக்கு வெந்தைய டீ ஒரு சிறந்த பானமாக இருக்கும். இதில் நீரல் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது மலக்குடல் எரிச்சல் நோயிலிருந்து நிவாரணம் பெறவும், அதிக சிரமமின்றி மலம் கழிக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: உலர் திராட்சை நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரியுமா?

வெந்தய டீ யின் அபாயங்கள்

எல்லாவற்றிலும் நிறை இருந்தால் குறை இருக்க தான் செய்யும். அதேபோல வெந்தய டீயிலும் சில குறைபாடுகள் உள்ளன. வெந்தய டீயை உங்கள் தினசரி உணவு வழக்கத்தில் சேர்ப்பதற்கு முன் கட்டாயமாக பின்வரும் விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்

  • ஒரு சில கர்ப்பிணிகள் வெந்தய டீ குடிப்பதை தவிர்க்கின்றனர். இதன் பக்க விளைவுகளை எந்த ஆய்வும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், மருத்துவரின் ஆலோசனையின்றி கர்ப்பிணிகள் வெந்தைய டீயை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
  • வேர்க்கடலை மற்றும் வெந்தயம், இவை இரண்டும் குறுக்கு எதிர் வினை கொண்டவை என்பதால் உங்களுக்கு வேர்க்கடலை அலர்ஜி இருக்கும் பட்சத்தில் வெந்தயமும் பொருந்தாமல் போவதற்கு வாய்ப்புள்ளது.
  • வெந்தயம் இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை உடையது என்பதால், குறைந்த இரத்த சர்க்கரை பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. இது குறித்து மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

இந்த பதிவும் உதவலாம்: திரிபலாவின் மருத்துவ குணங்கள் பற்றி அறிவீர்களா நீங்கள்?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாகத் தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP